வீடியோ: ”கர்ப்பமாக இருக்கிறேன்” என ஏமாற்றிய காதலிக்கு காதலர் கொடுத்த அதிர்ச்சி!

கர்ப்பமாக இருப்பதாக ஏமாற்றிய காதலியையே அவரது காதலர் ஏமாற்றி அதிர்ச்சியளித்த நகைச்சுவையான வீடியோ சமூக வலைத்தளஙகளில் வைரலாக பரவி வருகிறது.

கர்ப்பமாக இருப்பதாக ஏமாற்றிய காதலியையே அவரது காதலர் ஏமாற்றி அதிர்ச்சியளித்த நகைச்சுவையான வீடியோ சமூக வலைத்தளஙகளில் வைரலாக பரவி வருகிறது.

தான் கர்ப்பமாக இருப்பதாக காதலனை ஏமாற்றி, அவருடைய ரியாக்‌ஷனை சேமிக்க, வீட்டின் ஓரிடத்தில் கேமராவை மறைத்து வைத்திருக்கிறார். அதன்பின், கர்ப்பத்தை உறுதிபடுத்துவதற்காக மருந்து கடைகளிலேயே கிடைக்கும் ‘கிட்’ஐ தன் காதலனிடம் காண்பித்து, தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி ஏமாற்றுகிறார்.

முதலில், “நீ என்னை ஏமாற்றுகிறாய்” என சொல்லிக்கொண்டே இருந்த காதலன், ஒருகட்டத்தில் அப்பெண்ணிடம் “நீ என்னை ஏமாற்றிவிட்டாய்”, என சொல்ல துவங்குகிறார்.

அதன்பிறகு, அப்பெண்ணின் காதலர் கோபமாகி, “என்னால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. ஆனால், நீ எப்படி கர்ப்பமானாய்?”, என அழுதுகொண்டே கூறுகிறார். இதனால், அதிர்ச்சியடைந்த அப்பெண், “நமது 3 வருட உறவில் இப்போதுதான் இதை சொல்வாயா?”, என கதறி அழுகிறார்.

பின்பு அப்பெண் அழுவதை அமைதியாக பார்த்துக்கொண்டே பயங்கரமாக சிரித்து, “நீ கர்ப்பமாக இருக்கிறாய் எனக்கூறியது என்னை ஏமாற்றத்தான் என்பது தெரியும். மறைத்து வைக்கப்பட்ட கேமராவை நான் பார்த்துவிட்டேன். அதனால்தான் விளையாடினேன்”, என தன்னை ஏமாற்றிய காதலிக்கே அதிர்ச்சி கொடுத்தார்.

×Close
×Close