நேரலையில் தரையில் புரண்டு அடம்பிடித்த சிறுவன்: நல்லவேளை நிரூபர் சுதாரித்துவிட்டார்

சிறுவன் காலை பிடித்து ‘தரதர’வென இழுத்துச் சென்று விடுகிறார். ஆனால், அந்த நிரூபர் இதையெல்லாம் பார்க்காமல் நேரலையில் செய்தி வழங்கிக்கொண்டே இருந்தார்.

நேரலையில் நின்று களத்தில் நிகழும் சம்பவங்களை தருவது அவ்வளவு எளிதல்ல. நாமே நிறைய விஷயங்களை மனப்பாடம் செய்து ஒரு போக்கில் பேசிக்கொண்டே போவோம். தப்பித்தவறி அக்கம்பக்கத்தில் என்ன நடக்கின்றது என பார்த்துவிட்டால் போதும், நாம் என்ன சொல்ல வந்தோமோ அதை சொல்லாமல் முக பாவனைகள் மாறி மற்றவர்களுக்கு காமெடியனாகி விடுவோம்.

அதைக்கூட விட்டுவிடலாம், ஆனால், அந்த சம்பவத்தை ‘ப்ளூப்பர்ஸ்’ நிகழ்ச்சியாக ஒளிபரப்பி எல்லோரையும் சிரிக்க வைத்துவிடுவார்கள்.

ஆனால், ஸ்காட்லாந்தை சேர்ந்த ஜிம் டெலாஹண்ட் என்ற தொலைக்காட்சி நிரூபர் ஒருவர், ஹாமில்டன் நகரத்தில் தெற்கு லனார்க்‌ஷைர் என்ற இடத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ரேஸ் ஒன்றை நேரலையில் வழங்கிக் கொண்டிருக்கிறார்.

அப்போது, அங்கு நடந்த ஒரு சிறிய கலாட்டாவை சற்றும் பார்க்காமல், முகபாவனையை மாற்றாமல் செய்தி வழங்கியிருக்கிறார் ஜிம்.

அவர் நேரலையில் செய்தி வழங்கிக் கொண்டிருக்கும்போது, ஒரு சிறுவன் கேமராவிற்கு பின் யாரிடமோ அடம்பிடித்து படுத்து புரள்கிறான். தான் கேமராவில் பதிவாகிறோம் என்பதைக் கூட அச்சிறுவன் கவனிக்கவில்லை. அதன்பிறகு, பெண் ஒருவர் சிறுவனை சமாதானப்படுத்த முயன்று தோற்றுவிடவே, அவனது காலை பிடித்து ‘தரதர’வென இழுத்துச் சென்று விடுகிறார். ஆனால், அந்த நிரூபர் இதையெல்லாம் பார்க்காமல் நேரலையில் செய்தி வழங்கிக்கொண்டே இருந்தார். ரிப்போர்ட்டருக்கு கைதட்டல்கள்.

நீங்களும் அந்த வீடியோவை பாருங்கள்!

×Close
×Close