இங்கிலாந்து நாட்டில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் சிட்டியில் ஆற்றில் விழுந்த நாய் ஒன்று தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது. இதனைக் கண்ட இளைஞர் ஒருவர் தனது உயிரை துச்சமாக கருதி, ஆற்றில் குதித்து அந்த நாயை காப்பாற்றியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியிடப்பபட்டுள்ளன. அதில், நாயை காப்பாற்றிய அந்த இளைஞர் பாதுகாப்பற்ற பகுதியில், ஆபத்தான நிலையில் இருக்கிறார். ஒரு கையில் நாயையும் மறுகையில் சங்கிலியையும் பிடித்துக்கொண்டு உதவிக்காக காத்திருக்கிறார்.
இதையடுத்து படகில் அங்குவரும் மீட்புக் குழுவினர், அந்த இளைஞரையும், நாயையும் பாதுகாப்பாக மீட்டுச் செல்கின்றனர். வீடியோவாக எடுக்கப்பட்ட இந்த சம்பவம் இணையதளத்தில் வைரலாகிக்கொண்டிருக்கிறது. தன்னுடைய வளர்பு பிராணி இல்லை என்றபோதிலும், அந்த நபர் அந்த நாயை காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Watch: @TowerRNLI assist a dog that jumped into the Thames and a passer by that tried to help rescue it. pic.twitter.com/epNTDKH0d3
— RNLI (@RNLI) June 12, 2017
நாயை உயிருடன் மீட்டுத் தந்த அந்த இளைஞருக்கு அந்த நாயின் உரிமையாளர் நன்றி தெரிவித்தார்.