Advertisment

பேஸ்புக் லைவில் மார்க்... கல்லூரி கால நினைவுகள்!

author-image
Ganesh Raj
May 24, 2017 20:32 IST
New Update
பேஸ்புக் லைவில் மார்க்...  கல்லூரி கால நினைவுகள்!

பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் தனது கல்லூரி காலத்தில் வசித்த இடத்திற்கு சென்று பேஸ்புக்கில் லைவ் கொடுத்தார். இந்த வீடியோ பதிவிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே வைரலானது.

Advertisment

கடந்த காலங்களை நினைத்துப் பார்த்தால் எல்லோருக்குமே சுவாரஸ்யமாக தான் இருக்கும். அதேபோல, தான் மார்க் சக்கர்பெர்க்கும் அவரது கடந்த காலத்தை நினைவு கூர்ந்திருக்கிறார். ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் பயின்ற போது, அவர் தங்கியிருந்த அறைக்குள் தனது மனைவி பிரிசில்லாவுடன் சென்ற அவர், பல்வேறு விஷயங்களை நினைவு கூர்ந்தார்.

அந்த வீடியோவில் அவர் கூறும்போது, நான் கல்லூரியில் படிக்கும் போது இந்த அறையில் தான் தங்கியிருந்தேன். 13 வருடங்களுக்கு பின்னபாக இப்போது தான் இந்த அறைக்கு திரும்பவும் வருகிறேன். இந்த அறையில் 3 பேர் தங்கியிருந்தோம். என்னுடைய வாழ்க்கையில் சிறந்த தருணங்களை இந்த இடம் நினைவுபடுத்துகிறது என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோவை சுமார் 3,5000 பேர் பகிர்ந்துள்ளதோடு, கிட்டத்தட்ட ஆறரை லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.

#Mark Zuckerberg
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment