மியா காலிஃபா பெயரை வருகைப்பதிவில் எழுதிவைத்து ஆசிரியரிடம் குறும்பு செய்த மாணவர்கள்

வருகைப்பதிவில் மியா காலிஃபாவின் பெயரை எழுதிவைத்து, அதனை ஆசிரியர் வாசிக்கும்போது வகுப்பில் உள்ள மாணவர்கள் அனைவரும் சிரித்து ஆர்ப்பரிக்கின்றனர்.

பள்ளிகளில் நம்மால் எப்போதுமே மறக்க முடியாத ஒன்று என்றால், நம் ஆசிரியரிடம் குறும்பு செய்து அதன் மூலம் நாம் சந்தோஷம் அடைந்ததுதான். அவர்களுக்குத் தெரியாத அல்லது புரியாத ஏதாவது ஒன்றை அவர்களிடம் கேள்வியாக கேட்டு அல்லது அதனை செய்யச்சொல்லி ரசித்திருப்போம். அவர்கள் அது புரியாமல் ‘திருதிருவென’ வெள்ளந்தியாக முழிக்கும் முகபாவனைக்காகவே நாம் அதனை செய்வோம்.

பெரும்பாலும், நாம் அவர்களிடம் குறும்புதான் செய்கிறோம் என்பதை ஆசிரியர்கள் கண்டுபிடித்து விடுவர். ஆனால், நாம் செய்கின்ற அதி கிண்டலுடன் கூடிய குறும்புத்தனங்களை அவர்களால் சில சமயங்களில் கண்டுபிடிக்கவே முடியாது. நம்மை கலாய்க்கிறார்கள் என்பது கூட தெரியாமல் ஆசிரியர்கள் விழிப்பது எவ்வளவு அட்டகாசமாக இருக்கும்.

இந்த வீடியோவிலும், வகுப்பு ஒன்றில் ஆசிரியரிடம் நாம் குறும்பு செய்கிறோம் என அவருக்கு புரியாத வகையில் திட்டமிட்டு அரங்கேற்றினர்.

அதில், மாணவர்கள் வகுப்பில் மாணவர்களின் வருகைப்பதிவில், ஆபாச நடிகை மியா காலிஃபாவின் பெயரையும் எழுதி வைத்துவிடுகின்றனர் ஆசிரியருக்கு தெரியாமல்.

அதன்பின், ஆசிரியரும் வகுப்பிற்குள் நுழைந்ததும் தான் ஆற்ற வேண்டிய முதல் கடமையான வருகைப்பதிவை வாசிக்கிறார். ஒவ்வொரு பெயராக வாசிக்கிரார். அவருக்கு பதில் வருகிறது. ஆனால், மியா காலிஃபாவின் பெயரை வாசிக்கும்போது வகுப்பில் உள்ள மாணவர்கள் அனைவரும் சிரித்து ஆர்ப்பரிக்கின்றனர்.

பாவம், அந்த ஆசிரியருக்கு மியா காலிஃபா யார் என்பது தெரியாது போல. மியா காலிஃபா நம் வகுப்பறையில் ஒரு மாணவி என நினைத்திருப்பார். மாணவர்கள் எதற்காக சிரிக்கின்றனர் என்பது கூட தெரியாமல் அந்த ஆசிரியர் முழித்தது, அந்த மாணவர்கள் தங்களுக்கு எவ்வளவு வயதானாலும் மறக்க மாட்டார்கள்.

×Close
×Close