நீங்கள் செய்யும் உடற்பயிற்சி செய்வதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்தால், அதை பார்க்க ஆயிரம் பேர் வருவார்கள் என்பது சரிதான். ஆனால், அதற்கு முன் இந்த 2-வயதான சுட்டி செய்யும் உடற்பயிற்சியை பாருங்கள். தண்ணீரைக் கண்டு கொஞ்சம் கூட அச்சம் இல்லை. உடற்பயிற்சி செய்து கொண்டு பின்னர் தண்ணீருக்குள் குதிக்கிறது இந்த குழந்தை.
இதில் ஆச்சர்யம் என்னவென்று கேட்டால், அந்த குழந்தையின் முகத்தில் தோன்றும் புன்னகை தான். எந்த ஒரு பயமும் அந்த குழந்தையின் கண்களில் காணமுடியவில்லை. 2-வயதான அந்த குழந்தையின் பெயர் கீலே.
கடந்த ஜூலை 13-ம் தேதி இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. இதுவரை, ஏராளமானோர் பார்த்து ரசித்துள்ள அந்த வீடியோ ஆயிரத்திற்கும் மேற்பட்ட கமென்டுகளையும், லைக்ஸையும் பெற்றுள்ளது.