ஓவர் நைட்டில் ஓபாமா ஆகிய பாகிஸ்தான் இளைஞர்... என்ன ஒரு ஆட்டம்!

பெண்கள் அவருக்கு தீவிர ரசிகையாகவும் மாறியுள்ளனர்

ஓவர் நைட்டில் ஓபாமா ஆவது இணையதளங்களில் சர்வ சாதரணமான விஷயமாக மாறி வருகிறது. டப் மேஷ், மியூசிக்கல் வீடியோ, டான்ஸ் வீடியோ வெளியிட்டு அது வைரல் ஆனால் போதும். அடுத்த நாளே அவர்கள் சமூகவலைத்தளங்களில் அதிகம் தேடப்படும் நபராக மாற அதிக வாய்ப்புள்ளது.

அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களாக ஃபேஸ்புக்கில் ஒரு இளைஞரின் வீடியோ வைரலாக மாறி வருகிறது. குறிப்பாக அவரின் ஆட்டத்தைக் கண்ட பெண்கள் அவருக்கு தீவிர ரசிகையாகவும் மாறியுள்ளனர். பிரபலமான ஹிந்தி பாடல் ஒன்றிற்கு அவர் ஆடும் நடனம் பலரை ரசிக்க வைத்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் பிரபல மால் ஒன்றில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

×Close
×Close