Advertisment

வீரரை விடாமல் துரத்திய கடமான்.... கோல்ப் மைதானத்தில் நடந்த வைரல் வீடியோ!

அந்த கடமான் தொடர்ந்து அவரை துரத்தவே, பயத்தில் ஓட்டம் பிடிக்கிறார் அந்த நபர்.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Moose

கோல்ப் மைதானத்தில் நின்றுகொண்டிருந்த கடமான் ஒன்று அங்கிருந்த வீரர் ஒருவரை துரத்திச் செல்லும் காட்சியானது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

டோனி ஸ்வான் என்பவர் இந்த வீடியோவை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அதில், மைதானத்தில் கோல்ப் வீரர் ஒருவர் நின்று கொண்டிருக்கிறார். அப்போது அவரை நோக்கி கடமான் ஒன்று வருகிறது. கடமானிடம் இருந்து தப்பித்துக் கொள்ள அந்த நபர் மரத்தின் பின்னால் மறைந்து கொள்கிறார். எனினும், அது பலனிக்கவில்லை, அந்த கடமான் தொடர்ந்து அவரை துரத்தவே, பயத்தில் ஓட்டம் பிடிக்கிறார் அந்த நபர். இறுதியில் நண்பர்கள் சிலர் இருக்கும் பகுதிக்கு அந்த நபர் வந்ததும், அவரது நண்பர்கள் சத்தமிடுகின்றனர். இதனால், மிரண்ட கடமான் ஒருவழியாக துரத்துவதை விட்டுவிட்டுச் செல்கிறது. இதனை அங்கிருக்கும் மற்றொரு நபர் வீடியோ எடுத்துள்ளார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment