New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/10/classroom-dance_youtube_759.jpg)
வகுப்பறையில் மாணவி ஒருவரும் மாணவர் ஒருவரும் இணைந்து இந்தி பாடலுக்கு அசத்தலாக நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வகுப்பறையில் மாணவி ஒருவரும் மாணவர் ஒருவரும் இணைந்து இந்தி பாடலுக்கு அசத்தலாக நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
2015-ஆம் ஆண்டு சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ இரண்டு ஆண்டுகளை கடந்து இன்றும் வைரலாகி வருகிறது. இருப்பினும், எந்த மாநிலத்தில் உள்ள பள்ளி என்பது உள்ளிட்ட விவரங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.
இந்த வீடியோவில் மாணவி ஒருவரும், மாணவர் ஒருவரும் இந்தி பாடல் ஒன்றுக்கு அசத்தலான நடன அசைவுகளுடன் நடனமாடுகின்றனர். அதனை, மற்ற மாணவ, மாணவிகள் கண்டு உற்சாகமடைந்து, கைத்தட்டி அவர்களுக்கு ஊக்கமளிக்கின்றனர். பள்ளியில் நடக்கும் விழாவுக்காக அவர்கள் நடன ஒத்திகை செய்திருக்கலாம் என தெரிகிறது.
செல்ஃபோன், இணையத்தள வசதி எல்லோருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்றாக மாறியுள்ளது. அதனால், இந்த நடனத்தை அங்கிருந்த மாணவர்களில் ஒருவர் செல்ஃபோனில் பதிவேற்றியுள்ளார். எது எப்படியோ, அந்த இருவரின் நடனத்தை காண்பது நிச்சயம் உங்களுக்கும் உற்சாகத்தை தரும் என நம்பலாம்.
நீங்களும் அந்த வீடியோவை பாருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.