New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/11/delhi-smog-accident-750.jpg)
வட இந்தியாவில் நிலவும் கடும் பனிப்புகை காரணமாக, சாலையில் அடுத்தடுத்து கார்கள் மோதி விபத்து
வட இந்தியாவில் நிலவும் கடும் பனிப்புகை மற்றும் காற்று மாசுபாட்டின் காணமாக, சாலையில் அடுத்தடுத்து கார்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
உத்திரபிரதேச மாநிலம் ஆக்ரா-நொய்டா இடையேயான யுமுனா எக்ஸ்ப்ரஸ்வே அபாயகரமான பகுதியாக மாறியுள்ளதை இந்த வீடியோ காண்பிக்கிறது. அடுத்தடுத்தடுத்து சாலையில் வரும் கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதுவது அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது.சுமார் 10-க்கும் மேற்பட்ட கார்கள் அடுத்தடுத்து மோதியதில் பலர் காயமடைந்தனர். இந்த வீடியோவை உத்திரபிரதேச மாநில போலீஸார் வெளியிட்டுள்ளனர். நடிகர் அர்ஜூன் காபூரும் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
What’s happening in Delhi is dangerous in more ways than one can imagine...I’m filming here as I type this and I’m fearing things aren’t gonna really get any better... pic.twitter.com/hvj5bcUxlN
— Arjun Kapoor (@arjunk26) November 8, 2017
பனி புகையால் ஹரியானாவிலும் விபத்துகள் ஏற்பட்டன. அங்கு 4 வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டதாகவும், 8 பேர் காயமடைந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. இருச்சக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் உயிரிழந்தார். டெல்லியில் உள்ள மக்கள் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என அம்மாநில போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், இந்த பனிப்புகை மூட்டத்தின் காரணமாக விமானங்கள், ரயில்கள் செல்வது தாமதமானது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.