வைரல் வீடியோ: பணி நேரத்தில் காவல் நிலையத்தில் குத்தாட்டம் போட்ட போலீஸ்

மேற்கு வங்கத்தில் பணியிலிருக்கும்போது பாலிவுட் பாடலுக்கு நடனமாடிய காவலர் பணிநீக்கம் செய்யப்பட்டார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேற்கு வங்கத்தில் பணியிலிருக்கும்போது பாலிவுட் பாடலுக்கு நடனமாடிய காவலர் பணிநீக்கம் செய்யப்பட்டார். அவர் நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேற்கு வங்க மாநிலம் அசன்சால் மாவட்டத்திலுள்ள ஹிராபூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்தவர் கிருஷ்ண சதான் மொண்டல். இவர், காவல் நிலையத்தில் இரு பெண்களின் முன்னிலையில், பாலிவுட் பாடலுக்கு நடனமாடுகிறார். அவரை மற்ற காவலர்கள் உற்சாகப்படுத்துகின்றனர்.

தனக்கு பணியிட மாற்ற ஆணை கிடைத்ததை கொண்டாடும் வகையில், கிருஷ்ண சதான் நடனமாடியுள்ளார். இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரைலாகியுள்ளது.

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, அவர் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, இச்சம்பவத்திற்காக சதான் மொண்டல் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

×Close
×Close