வீட்டுக்கு அழையா விருந்தாளியாக வந்த 8-அடி முதலை! வீடியோ

அமெரிக்காவில் இருக்குற லூசியானா பகுயில் இருக்குற வீட்டில், 8 அடி நீளமுள்ள முதலை நுழைய முயற்சிக்கிறது.

சன்டே ஆனா, வீட்ல படுக்கையை விட்டு எழுந்திக்கவே மனசு இருக்காது. அப்படி இருக்கும் சமயத்தில வீட்டுக்கு ஒரு கெஸ்ட் வந்தா எப்படி இருக்கும். அப்படியே வந்தாலும், அது ஒன்னும் அவ்ளோ பெரிய விஷயம் இல்ல.

அப்படி தான், சன்டே அன்னைக்கு இங்க கெஸ்ட்டா ஒருத்தரு வந்துருக்காரு. அவரு வேற யாரும் இல்ல, 8 அடி நீளமுள்ள முதலை தான் அந்த கெஸ்ட்! அமெரிக்காவில் இருக்குற லூசியானா பகுயில் இருக்குற வீட்டில், 8 அடி நீளமுள்ள முதலை நுழைய முயற்சிக்கிறது. அந்த சமயத்தில கெஸ்ட்டா வந்துருக்குற முதலையைக் கண்டு, விட்டில இருந்தவங்க அப்டியே ஷாக் ஆயிட்டாங்கலாம்.

முதலைய பாத்துட்டு சும்மாவா இருக்க முடியும். உடனே வனவிலங்கு மற்றும் மீன்பிடி துறைக்கு தகவல் தெரிவிச்சுருக்காங்க. சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிங்க, முதலைய பிடிக்குறதுக்கு டிரை பண்றாங்க. உடனே பிடிக்குறதுக்கு நா ஒன்னும் பல்லி இல்லயே, அப்படிங்குற மாதிரி அந்த முதலை அடம்பிடிக்குது. இருந்தாலும், ரொம்ப நேரமா அடம்பிடிச்சுட்டு இருக்குற அந்த முதலைய, ஒரு வழியா பிடிச்சுட்டு போயிடுறாங்க அங்க வந்த அதிகாரிங்க.

அந்த வழியா போனவங்க அப்படியே இந்த சம்பவத்தை வீடியாவா ஷூட் பண்ணீருக்காங்க. இந்த வீடியோ சோஷியல் மீடியாவுல வைரல் அடிச்சுட்டு வருது.

முதலைகள் இனப்பெருக்க காலத்தில், துணை தேடி செல்வது வழக்கமான நிகழ்வு தான். இது போல செல்வது ஒன்றும் அரிதான நிகழ்வு இல்லை என்று கூறப்படுகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close