ஒரேயொரு தவறான ட்வீட்: பிரதமருக்கு இலக்கண வகுப்பெடுத்த ட்விட்டராட்டிகள்

நாடாளுமன்றத்தில் நேற்று (புதன் கிழமை) குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திரமோடி அனல் பறக்கும் உரையை நிகழ்த்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (புதன் கிழமை) குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திரமோடி அனல் பறக்கும் உரையை நிகழ்த்தினார். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளையும் அடுக்கினார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் மேற்கோள் ஒன்று, பிரதமரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தவறாக பதிவிடப்பட்டிருந்தது. இதனால், நெட்டிசன்கள் பலரும் பிரதமருக்கு சமூக வலைத்தளங்களில் இலக்கண வகுப்பு எடுத்து வருகின்றனர். பிரதமரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் அவரால் இயக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த ட்விட்டர் பதிவில், “மோசமான தரம் மற்றும் எல்லோராலும் தாங்கிக் கொள்ளும் வகையிலான சுகாதார வசதியை ஏற்படுத்த வேண்டும்”, என குறிப்பிடப்பட்டிருந்தது. இதில், ‘poor’ என்ற வார்த்தை தவறுதலாக இடம்பெற்றிருந்ததுதான் இவ்வளவு விவாதத்துக்கும் காரணமாகி இருக்கிறது.

இந்நிலையில், பலரும் இந்த ட்விட்டர் பதிவால் பிரதமருக்கு இலக்கண வகுப்பு எடுத்து வருகின்றன. இன்னும் சிலர், இந்த பதிவை எழுதியவரை பணியைவிட்டு நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close