கேரளாவில் 20 கிலோ எடைகொண்ட மிகப்பெரிய மலைப்பாம்பை பெண் ஒருவர் துணிச்சலாக உயிருடன் பிடித்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
ஹரிந்தர் எஸ் சிக்கா என்பவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஒரு வீடியோ இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் பார்வையாளர்களை ஈர்த்து வைரல் ஆகியுள்ளது.
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்று சொல்வார்கள் ஆனால், சிறிதும் அச்சமில்லாமல் கேரளாவில் உள்ள எர்ணாக்குளத்தில் பெண் ஒருவர் ஒரு மரத்தடியில் மறைந்து கிடைக்கும் மலைப்பாம்பை தைரியமாக அதன் தலைப்பகுதியைப் பிடித்து பையில் போட்டு கட்டுகிறார்.
20 Kg python caught alive by wife of senior Navy officer.
Leave aside women, wonder how many men can show such guts.
I love my Navy. pic.twitter.com/6XNUBvE7MU— Harinder S Sikka (@sikka_harinder) December 11, 2019
ஹரிவிந்தர் எஸ் சிக்கா அந்த வீடியோவைப் பற்றிய குறிப்பில், மூத்த கடற்படை அதிகாரியின் மனைவி ஒருவர் 20 கிலோ எடையுள்ள மலைப்பாம்பை உயிருடன் பிடித்துள்ளார். இது போன்ற தைரியத்தை எத்தனை ஆண்களால் காட்ட முடியும் என்று வியந்து ஐ லவ் மை நேவி என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ சிறிது நேரத்திலேயே ஆயிரக் கணக்கான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. இந்த பாம்பு கேரள மாநிலம் எர்ணாக்குளத்தில் பிடிக்கப்பட்டுள்ளது என்பது தெரியவதுள்ளது. மலைப்பாம்பை பிடிப்பதற்கு அந்த பெண்ணுடன் கடற்படை வீரர்கள், மற்றொரு பெண் உள்ளிட்ட சிலர் உதவியுள்ளனர்.