உலகிலேயே அதிக எடை கொண்ட பெண்மணி… பேஸ்புக்கில் ராஜினாமா கடிதத்துடன் பதவி விலகிய டாக்டர்!

உலகிலேயே அதிக எடை கொண்ட பெண்மணிக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஒருவர், நோயாளியின் சசோதரி சமூக வலைதளத்தில் பதிவிட்ட வைரல் வீடியோவினால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

எகிப்து நாட்டைச் சேர்ந்த ஈமான் அகமது என்ற அந்த பெண்மணி தான் உலகிலேயே அதிக எடை கொண்ட பெண்மணியாக கருதப்படுகிறார். உடல் பருமன் வியாதியால் அவதிப்பட்டு அவரின் எடை 500 கிலோவிற்கும் மேல்! இவர் தனது எடையை குறைக்கும் சிகிச்சை பெறுவதற்காக, கடந்த பிப்ரவரி 11-ந் தேதி இந்தியா வந்துள்ளார். இதன் பின்னர், ஈமான் அகமதுவிற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இந்த சிகிச்சைக்காக கிட்டத்தட்ட ரூ.2 கோடி செலவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கடந்த திங்கள் கிழமை ஈமான் அகமது எடை வெகுவாக குறைந்துள்ளதாக சாஃபி மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். மேலும், ஈமான் அகமதுவின் எடை  சுமார் 500 கிலோவில் இருந்து 171-கிலோ என குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனிக்கவில்லை என சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரல் ஆனது. அந்த வீடியோவை வெளியிட்டிருப்பது, ஈமான் அகமதுவின் சகோதரி ஷாய்மா சலிம் ஆவார். அந்த வீடியோவில் ஷாய்மா சலிம் தெரிவித்திருப்பதாவது, மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறப்படுவதில் எந்த வித உண்மையும் இல்லை. மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளது போல ஈமான் அமகதுவின் உடல் எடையில் எந்த மாற்றமும் இல்லை. மருத்துவர்கள் உண்மையை மறைப்பதாக அவர் வெளியிட்ட அந்த வீடியேவில் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் பரவிய அந்த வீடியோ ஓரிரு நாளில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வைரலானது.

இந்த வைரல் வீடியோவை அடுத்து ஈமான் அகமதுவிற்கு சிகிச்சை அளித்த டாக்டர். அபர்னா கோவில் பாஸ்கர் தனது வேலையை ராஜினாமா செய்வதாக பேஸ்புக்கில் போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார். மும்பையில் உள்ள சாஃபி மருத்துவமனையில் எடை குறைப்பு அறுவை சிகிச்சை தலைமை மருத்துவர் அபர்னா கோவில் பாஸ்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் அபர்னா கோவில் பாஸ்கர் தெரிவித்துள்ளதாவது, ஈமான் அகமதுவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் இருந்த தடைகள் பலவற்றை கடந்த போதிலும், மிகவும் சோகமாக நான் உணர்கிறேன். மருத்துவ அறுவை சிகிச்சை வரலாற்றில் மாறுபட்ட விதத்தில் இந்த நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈமான் அகமதுவிற்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவர்கள், நர்ஸ்கள், பிசியோதெரபிஸ்ட்கள் என அனைவரும் ஒன்றிணைந்து பல நாட்களாக தீவிரமாக கண்காணித்து வந்தோம். என்னைப் பொறுத்தவரையில், இது நோயாளிக்கு அளிக்கும் சிகிச்சை அல்ல, நாங்கள் அனைவரும் ஈமான் அகமது உண்மையான அன்பு வைத்துள்ளோம்.

இன்று நான் மிகவும் கோபமாகம், மிகுந்த ஏமாற்றம் அடைந்ததாகவும் உணர்கிறேன். இந்த விவகாரத்தை பொறுத்த வரையில் நோயாளியின் குடும்பத்தினர் ஓரு மருத்துவருக்கு மிக மோசமாக என்ன செய்ய முடியுமோ அதை செய்து விட்டனர் என்று மன வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவினை பார்த்த வலைதள வாசிகள் பலரும் இது தொடர்பாக தங்களின் கருத்துளை பதிய தொடங்கினர். குறிப்பாக பதிவிடப்பட்டுள்ள கருத்துகள் பல, மருத்துவர் அபர்னா கோவில் பாஸ்கருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் உள்ளது. நோயாளிகளுக்கு தேவையான வகையில் பணியினை தொடர வேண்டும் என மருத்துவரை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Worlds fattest woman eman ahmed and saifee hospital

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com