2018 வருஷத்தோட் கடைசி வாரத்தில இருக்கோம். ஒரு பக்கம் 2019 வர போதுன்னு சந்தோஷம், மறு பக்கம் 2018 முடிஞ்சி போச்சா? இவ்வளவு சீக்கிரமாவா? என்ற கவலை. சரி இந்த வருஷத்துல நம்ம வாழ்க்கையில் என்ன நடந்ததுனு யோசிச்சா ஒவ்வொருக்குவருக்கும் எத்தனையோ விஷயங்கள் இருக்கும்.
அதே மாதிரி 2018 ஆண்டில் ரீவைண்ட் பண்ணிப்பார்த்த ஓட்டுமொத்த ஊரும் சேர்ந்து எத்தனையோ விஷயத்த பத்தி வைரலா பேசி இருக்கோம். என்ன விஷயம் அதெல்லாம் இதோ நீங்களே பாருங்கள்.. உங்களுக்கும் ஞாபகம் வருகிறதானு பார்ப்போம்.
1. ப்ரியா பிரகாஷ் வாரியர்:
இந்த லிஸ்டில் முதலில் இருப்பது கண்ணழகி ப்ரியா வாரியர் தான். ஒரே ஒரே கண்ஜாடையில் ஒட்டு மொத்த இளைஞர்களின் மனதையும் கட்டிப்போட்டு உலகம் முழுவதும் ஃபேமஸ் ஆனார். 2018 ஆம் ஆண்டு கூகுளில் அதிகப்படியான மக்கள் தேடியதும் இவரைத்தான்.
இவர் மீது வந்த ஈர்ப்பின் காரணமாக அவர் மலையாளத்தில் நடித்த முதல் படமான ‘ஒரு அடார் லவ்’ குறித்த எதிர்ப்பார்ப்பும் ரசிகர்ள் மத்தியில் அதிகரித்தது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என எந்த பக்கம் திரும்பினாலும் ப்ரியார் வாரியர்,ஒரு அடார் லவ் குறித்த பேச்சு தான்.
2. metoo விவகாரம்:
2018 ஆம் ஆண்டில் அனைவரையும் புரட்டி போட்ட ஒரு விவகாரம் metoo. பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்து பெண்களே தைரியமாக முன்வந்து வெளியில் போட்டுடைத்தார்கள். சமூகவலைத்தளமே metoo புகார்களால் நிரம்பியது. சினிமா துறையைப் பொருத்தவரையில் அதிலும் உச்சத்தை தொட்ட விவகாரம் கவிஞர் வைரமுத்து குறித்து பிரபல பாடகி சின்மயி கொடுத்த metoo புகார்.
3.ஸ்ரீரெட்டி:
2018 ஆம் ஆண்டி இந்த பெயரை அவ்வளவு எளிதாக் இந்த பெயரை யாரலும் மறந்துவிட முடியாது. தெலுங்கு சினிமாவில் அரை நிர்வாணப் போராட்டம் தொடங்கி பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் என பலரின் மீதும் இவர் வைத்த பாலியல் குற்றச்சாட்டுகள் ஒரு புயல் போல் அடித்துப்போட்டது.
4. ஆண்டாள் சர்ச்சை:
ஆண்டாள் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்ததாக கவி பேரரசு வைரமுத்துக்கு எதிராக வெடித்த போராட்டங்கள். அவரை விமர்சனம் செய்வதாக கூறி நித்யானந்தா ஆசிரமத்தை சேர்ந்த சீடர்கள் ஃபேஸ்புக்கில் லைவ் விட்டு பேசிய பேச்சுக்கள் இருக்கே... ஸ்ஸ்ஸ்வாவாவா தொடர்ந்துஇ 10 நாட்களுக்கு ஒரே அதைப்பத்தித்தான் பேச்சிட்டு இருந்தது.
5. நான் தான்பா ரஜினிகாந்த்:
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வெடித்த போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். போராட்டத்தில் கலந்துக்கொண்ட பலர் மீது தடியடி நடத்தப்பட்டது. இவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, அவர்களை சந்தித்து ஆறுதல் கூற நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றிருந்தார்.
அப்போது அவரை பார்த்து இளைஞர் ஒருவர், யார் நீங்க? என கேட்ட கேள்வி கேட்க, நான் தான்பா ரஜினிகாந்த் என சூப்பர் ஸ்டார் கூற ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் ஆட்டம் காண வைத்தது. அதுக் குறித்த் அந்த இளைஞர் விளக்கம் அளித்து வீடியோவும் வெளியிட்டார். ஆனால் ரஜினிகாந்தை பார்த்து யார் நீங்க? என அந்த இளைஞர் கேட்ட கேள்வி சமூகவலைத்தளங்களில் மிகப்பெரிய வைரல்.
6. go back modi:
சென்னை வந்த மோடியை go back modi என தமிழக மக்கள் வரவேற்ற காட்சி ட்விட்டர் பக்கத்தில் உலகளவில் ட்ரெண்ட் ஆனது. கருப்பு உடை, கருப்பு கொடி, கருப்பு பலூன் என மோடியின் வருகைக்கு எழுந்த எதிர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
7. மாணவி சோஃபியா:
தூத்துக்குடி விமான நிலையத்தில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி சோஃபியா என்பவர் பாஜக ஆட்சியை விமர்சிக்கும் வகையில் அவர் வெளியிட்ட முழுக்கம் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால் அந்த பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஃபேஸ்புக்கில் விவாதங்கள் வெடித்தன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.