தமிழ் திரைப்பட துறையில் நடிகர், பாடகர், பாடலாசிரியர், எழுத்தாளர், நகைச்சுவை நடிகர், இயக்குனர் என பன்முகம் கொண்டவர் அருண்ராஜா காமராஜ்(Arunraja kamaraj) இவர் தெறி, பென்சில், கபாலி, ஜிகர்தண்டா ஆகிய திரைப்படங்களுக்கு பாடலாசிரியராக பணியாற்றியுள்ளார்.
கரூரில் பேரூர் என்ற கிராமத்தில் 1984 ஆம் ஆண்டு பிறந்தார். பள்ளிப்படிப்பை குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், உயர் கல்வியை திருச்சி பிஷப் ஹெபேர் மேல்நிலைப்பள்ளியிலும் முடித்தார். பின்னர், கல்லூரி படிப்பை திருச்சி ஜே. ஜே. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியிலும் கற்றார்.
இவர் ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் ஒரு நடிகனாக என்ட்ரி கொடுத்தார். பின்னர், மான் கராத்தே படத்தில் நெருப்பு குமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்து, மக்களின் கவனத்தை ஈர்த்தவர்.
தொடர்ந்து, சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ’கனா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். ‘கனா’ படத்தை அடுத்து உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ’நெஞ்சுக்கு நீதி’ படத்தை இயக்கி, முன்னணி இயக்குநராக வளம்வர தொடங்கியுள்ளார்.Read More