எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பின் நிறுவன பொதுச்செயலாளரான தீபா (Deepa Jayakumar), தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகளாவார்.
ஆதர்ஷ் வித்யாலயாவில் பள்ளிக் கல்வியை முடித்த அவர், மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார். பிறகு இந்தியா டைம்ஸ் பத்திரிகையில் பணியாற்றினார். 2010 இல் வேல்ஸ் நாட்டிலுள்ள பிரபல பல்கலைக்கழகமான கார்டிஃப் பல்கலைக்கழகத்தில் உலக இதழியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
தீபாவிற்கு மாதவன் என்பவருக்கும், அத்தை ஜெயலலிதா சம்மதத்துடனும் 2012 நவம்பர் 11 ஆம் நாள் திருமணம் நடைபெற்றது. தீபாவின் தந்தை ஜெயக்குமாரும் தாய் விஜயலட்சுமியும் காலமாகிவிட்டனர்.
அத்தை ஜெயலலிதாவுக்கு தான்தான் உண்மையான வாரிசு என்று கூறிவந்த தீபா, ஜெயலலிதாவின் பிறந்த நாளான 2017 ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி ‘எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை’ என்ற அமைப்பை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். கருப்பு, சிவப்பு நிறங்கள் மற்றும் நடுவில் வெள்ளை நிறத்தில் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா படம் உள்ள கொடியை இயக்க கொடியாக அறிமுகப்படுத்தினார். கட்சி ஆரம்பத்தாலும் அரசியல் பணியில் பெரிதாக இதுவரை ஈடுபடாத தீபா, ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியதற்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிட்டு, போயஸ் கார்டன் பங்களாவை ஜெ.தீபா வசம் ஒப்படைக் சொன்ன உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் முதல் வெற்றியை பெற்றார். Read More
J Deepa welcomes Veda house verdict, believes stalin won’t go appeal: ஜெயலலிதாவின் வேத இல்ல வழக்கு தீர்ப்பு நியாயமானது; முதல்வர் ஸ்டாலின் மேல்முறையீடு…
சென்னையில் போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதலமைச்சரின் இல்லமான ‘வேதா நிலயம்’ கையகப்படுத்த தமிழக அரசின் அரசாணைக்கு, ஜெயலலிதாவின் உறவினர் தீபா ஜெயக்குமார் எதிர்ப்பு தெரிவித்து, இந்த…