இந்திய திரைப்பட நடிகை ஈஸ்வரி ராவ் (Eswari Rao), தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம் மொழிப் படங்களில் நடித்துள்ளார். ஆந்திராவை பூர்விகமாக கொண்ட இவர், இயக்குனர் எல்.ராஜா-வை திருமணம் புரிந்து சென்னையில் வாழ்ந்து வருகிறார்.
1990-ம் ஆண்டு “இந்திந்த தீபாவளி” திரைப்படம் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். அதே ஆண்டு “கவிதை பாடும் அலைகள்” திரைப்படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமாகியுள்ளார்.
தென்னிந்திய திரைப்படங்களில் நடித்த இவர், சன் தொலைக்காட்சியின் “கோகிலா இங்கே போகிறாள்”, “உதயம்”, “கஸ்தூரி” என நாடகங்களின் மூலம் பிரபலமானவர். பின்பு ஜெயா, ஜெமினி, விஜய் தொலைக்காட்சிகளில் பல்வேறு நாடகங்களில் நடித்துள்ளார்.
2006-ம் ஆண்டு கே.எஸ். ரவி குமார் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்த “சரவணன்” திரைப்படத்தில் நடித்த இவர், நீண்ட இடைவேளைக்கு பின் 2018-ம் ஆண்டு ரஜினி நடித்த “காலா” திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகிற்கு மீண்டும் என்ட்ரி கொடுத்தார். தற்போது, பல திரைபடங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.Read More
பெசன்ட் நகர் கடற்கரை 100க்கு 98.75 புள்ளிகளுடன் முதலிடத்திலும், மெரினா 98.1 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், திருவான்மியூர் 92.92 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன
ஆஸ்திரேலியா வலைப் பயிற்சியில் ஸ்டீவ் ஸ்மித்திற்கு பந்து வீசுவதே எனது வேலை. அவர் என்னிடம் குறிப்பிட்டு எந்த முறையிலும் பந்து வீசச் சொல்லவில்லை – மகேஷ் பித்தியா
பயிர்க் காப்பீடு இழப்பீட்டு தொகையையும் சேர்த்து ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் இன்று (பிப்.7) 10 இடங்களில் தமிழ்நாடு…
துருக்கி திங்கள்கிழமை அதிகாலை முதல் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டு வருகிறது. முதலில் பதிவான 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கங்களிலேயே…
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வெளியிடப்பட்ட ஆற்றல் சுமார் 32 பெட்டாஜூல்களுக்கு சமம், இது நியூயார்க் நகரத்தை நான்கு நாட்களுக்கும் மேலாக ஆற்றல் வழங்குவதற்கு போதுமானது – நிபுணர்கள்