தொழில் மயமாக்கலில் இந்தியா உன்னத நிலையை அடைந்து விட்டதா அல்லது இந்திய நிறுவனங்கள் இன்னும் முன்னேற வேண்டுமா?
1991 ல் உண்டான பொருளாதார தாரளமயமாக்கல் இந்தியாவில் முதலீட்டை அதிகரித்தது. அதன்படியான வணிக சந்தைகளுக்கு வழிவிட்டதின் மூலம் சோசலிச அணுகுமுறையில் இருந்து முதலாளித்துவ அணுகுமுறைக்கு நேராக அரசு நகர்ந்ததை உணர முடிந்தது. உலக அரங்கில் தற்போது தேசம் அடைந்திருக்கிற வலுவான நிலைக்கு உதவிய பொருளாதார செழிப்பு மற்றும் தொழில் மயமாக்கலின் புதுயுக விடியல் இது.
தமிழ்நாட்டில் பெருநிறுவனங்கள் மற்றும் கனரக தொழிற்சாலைகளிடமிருந்து முதலீடுகள் வர தொடங்கின. வாகனம் மற்றும் வாகன உதிரி பாகங்களின் தொழிற்சாலைகளை அத்துறையினர் தமிழகத்தில் தொடங்கினார்கள். முன் எப்போதும் அறிந்திடாத அளவு வருவாய் குவிய தொடங்கியதால் தமிழகத்தில் பொருளாதார சமூக வளர்ச்சி சீரான நிலையை நோக்கி செல்லத் தொடங்கியது. ஆனால் இப்பொது தொழில் தொடங்க ஏற்ற மாநிலம் இல்லை என்ற நிலைக்கு அச்சுறுத்தல் உண்டாகி இருக்கிறது.
மக்களுக்கிடையில் உள்ள ஆழமான அரசியல் பிரிவினைகள், தமிழகத்தில் எந்த புதிய தொழிற்சாலைகள் தொடங்கவும் கடும் எதிர்ப்பை உருவாகியுள்ளது. இத்தகைய எதிர்ப்பை உண்டாக்குகிற குழுக்கள் பெருமளவில் கூடி உணர்ச்சியை தூண்டுகிற செய்திகளை சமூக ஊடகங்களில் பரப்பி சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படும் என்று மக்களை நம்ப வைத்து தொழில் முன்னேற்றத்திற்கு மிகுந்த சவாலை உண்டாக்கி வருகிறார்கள். அரசியல் தொடர்புகள், பேராசைகள், வன்முறைகள் மூலமாக இவர்களின் தீய நோக்கங்கள் எரியூட்டப்பட்டு, மாநில மற்றும் தேசிய பொருளதாரத்தையும், தனி மனித நலனையும் பாதிக்கின்றது. சில சமயங்களில், தொழில் வளர்ச்சிக்கு ஆதரவாக குரல் கொடுக்கிற மக்களை, வன்முறை மற்றும் சமூக தனிமைப்படுத்தலில் மூலம் இந்த எதிர்ப்பாளர்கள் அச்சுருக்கிறார்கள். இந்த எதிர்பாளர்களால், ஏதோ ஒரு தொழிற்சாலை மட்டும் பாதிக்கப்படுகிறது என்பதல்ல; தமிழகத்தில் உற்பத்தியை தொடங்குகிற எல்லா தொழில்நிறுவங்களும் இத்தகைய கடினமான எதிர்ப்பை சந்திக்கின்றன. அரசு அனுமதிப்பெற்ற சட்டபூர்வமான இத்தகைய தொழில்கள் முடக்கப்படுவதினால் உண்டாக்குகிற பொருளாதார மந்தநிலைக்கு பலியாகிற மக்கள், இந்த போராட்டங்களின் எதிர்மறை வளைவுகளை நன்கு அறிந்திருக்கிறார்கள்.
உற்பத்தியை விரிவுபடுத்த முயன்று, அதனால் கடுமையான எதிர்ப்பை உள்நோக்கம் கொண்ட தனி நபர்களால் சந்தித்து வருகிற, வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் காப்பர் சமீபத்திய சிறந்த எடுத்துக்காட்டு.
இந்த நிறுவனம் தூத்துக்குடியில் தற்போது இயங்குகிற ஆலைக்கு அருகில் விரிவுபடுத்தி, 3000 கோடியை முதலீடு செய்யத் திட்டமிட்டது (கடந்த 5 வருடங்களில் தமிழகத்தில் செய்யப்படுகிற அதிகப்படியான முதலீடு இது). ஆனால் உள் நோக்கம் கொண்ட இத்தகைய தனி நபர்களின் அழுத்தத்தால், தற்போது இயங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆலையின் உரிமம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் இழுத்தடிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில் வளர்ச்சியை பெருமளவில் பதிப்பப்படுகிறது.
தாக்கம்:
இத்தொழிற்சாலையில் பணியாற்றும் 4000 நேரடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கடந்த ஒரு மாதமாக இந்த தொழிற்சாலை இயங்காதபடியால், 25000 மேற்பட்ட மறைமுக தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து, ஸ்டெர்லைட் ஆலை, மூலப் பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை, நாடு முழுவதும் இயக்கும் சுமார் 9000 வாகன ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர், இந்தத் தொழிற்சாலையின் இயக்கம் நிறுத்தப்பட்டதால், மிகுந்த பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
இதனால் பலர், தங்களின் குழந்தைகளுடைய கல்வி கட்டணம் மற்றும் குடும்பத்தின் மருத்துவ கட்டணங்களை கட்ட முடியாமல் தவிர்க்கிறார்கள். பல்வேறு லாரி தொழிலாளர்களின் சங்ககளும், இது தொடர்பாக தங்களுடைய கோரிக்கையை சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இது மட்டுமல்லாமல் தூத்துக்குடி VOC துறைமுகத்தின் வருவாய்க்கு பணங்களிக்கிற தனிப்பெரும் தனியார் நிறுவனமாக ஸ்டெர்லைட் காப்பர் இருப்பதால், இந்த நிறுவனமாது இயங்காவிட்டால் 270 கோடி வருவாய் இழப்பை வி.ஓ.சி துறைமுகம் சந்திக்க நேரிடும். சுமார் 10000 தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்துனர்களுடைய வருமானம், கப்பல் ஏற்றுமதி இறக்குமதி பொறுத்தே உள்ளது. சுங்கம் மற்றும் சரக்கு கையாளும் பணியில் ஈடுபடுகிற 5000 தொழிலாளர்களின் வேலைவாய்ப்பும் ஸ்டெர்லைட் காப்பரின் ஏற்றுமதி இறக்குமதி மற்றும் உள்ளூர் விநியோகமின்மையால் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. வேலை வாய்ப்பின்மை அதிகரித்து வருகின்ற சூழலில், தொழிற்சாலைகளை மூடி மேலும் வேலைவாய்ப்பை தூத்துகுடியிலும், தமிழ்நாட்டிலும் கேள்விக்குறியாக்குவது, விவேகமான செயலல்ல. அரசின் முடிவால், 80000 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்திருக்கிறார்கள்.
தீர்வு :
மாவட்ட, மாநில, மத்திய அரசுகள் இணைந்து , சுற்றுப்புற சூழல் பாதிப்பு இல்லை என்பதை, அவர்களின் வரையறைகள் மற்றும் செயல்முறைகள் குறித்து மக்களிடம் எடுத்து சென்று அவைகளை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
ஆலையின் இயக்கம் முடங்கியிருப்பதால், டன்னுக்கு 80000 ரூபாய் (7 .5 % உயர்வு ), தாமிர விலை உயர்ந்திருப்பதை கருத்தில் கொண்டு உடனடியாக ஆலையயை இயக்க வேண்டும். சல்பூரிக் அமிலத்தின் விலையும் டன்னுக்கு 10000 ரூபாய் உயர்ந்து(200 % உயர்வு) அதன் மூலமாக குளியல் மற்றும் சலவை சோப்பு நிறுவனங்களின் உற்பத்தி செலவை அதிகரித்து இந்த ஆலையின் முடக்கம் எதிர்கால வளர்ச்சிக்கு உகந்தது அல்ல என்பதை உணைர்த்துகிறது.
50000 கிராம மக்களுடைய நலனை உறுதி செய்யும் படியாக இயங்கி வந்த நடமாடும் மருத்துவ சேவையை புறக்கணித்து அதன் மூலம் அந்தப் பகுதியில் உள்ள மக்களின் நலனைப் போற்றும் மருத்துவ சேவைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிற, கிராம மக்களின் மனநிலையை மாற்றும் முயற்சியில் விரைந்து ஈடுபட வேண்டும்.
இந்திய துணைக் கண்டத்தில் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்கிற பிரதமரின் எண்ணங்களுக்கு வலு சேர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நிரூபிக்கப்படாத சுற்றுப்புற சூழல் தாக்கங்களுக்காக இயங்குகிற தொழிற்ச்சாலைகளை முடக்குவது, நிலையான தீர்வாகாது . மக்களுக்கு வேலை வாய்ப்பு அவசியம் , வியாபாரமில்லம்மால் வேலை வாய்ப்பை வழங்க இயலாது.
விளம்பர செய்தி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.