தகவல் தொழில்நுட்ப நிறுவனமான பார்தி ஏர்டெல், 1983 உலக கோப்பை போட்டியின் போது பெரிதும் பேசப்பட்ட ஒரு அரிய நிகழ்வை மீண்டும் உருவாக்குவதன் மூலம், தனது 5ஜி நெட்வோர்க் சேவையின் முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளது.
உலக கோப்பையை இந்தியா கைப்பற்றியிருந்தாலும், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கபில் தேவ் அடித்த 175 நாட் அவுட் இன்னிங்ஸ், இன்று வரை கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய தருணமாக இருந்து வருகிறது. ஏனெனில், அந்த போட்டியின் போது தொலைக்காட்சி வல்லுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், அந்த கிரிக்கெட் போட்டியின் வீடியோ பதிவு யாரிடமும் கிடையாது. ஆனால், இனி அப்படியில்லை.
ஏனென்றால், டெலிகாம் நிறுவனமான ஏர்டெல், அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அந்த கிரிக்கெட் போட்டியின் முக்கிய தருணங்களை ‘175 Replayed’ என்கிற பெயரில் மீண்டும் உருவாக்கியுள்ளது.
அந்த வீடியோவை, 5ஜி ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் 50 ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் 4K தரத்தில் கண்டுக்களித்தனர். ஏர்டெல்லின் 5ஜி சேவையின் மூலம் 1 ஜிபிபிஎஸ் வேகத்திற்கு மேல், 20ms லேட்டன்ஸிக்கும் குறைவாக அந்த வீடியோவை பார்த்திட முடிந்தது. அப்போது, 360 டிகிரி இன் ஸ்டேடியம் காட்சி, ஷாட் அனாலிசிஸ் ஆகியவையும் 5ஜி மூலம் காட்டப்பட்டது. இது, பயனர்களின் அனுபவத்தை மேலும் அதிகரித்தது.
நிகழ்வின் போது பேசிய பார்தி ஏர்டெல்லின் CTO ரன்தீப் செகோன், ” 5ஜி-யின் ஜிகாபிட் வேகமும், மில்லி விநாடி தாமதமும், பொழுதுபோக்கை பயன்படுத்தும் விதத்தை மாற்றவுள்ளது. இன்றைய நிகழ்வு மூலம், 5G-யின் எல்லையற்ற சாத்தியக்கூறுகள் மற்றும் டிஜிட்டல் உலகில் அதிவேக அனுபவங்களின் மேற்பரப்பை மட்டுமே நாங்கள் அடைந்துள்ளோம்” என்றார்.
5ஜி உதவியுடன் கபில் தேவின் உருவத்தை ஹோலோகிராமில் உருவாக்கி, ரசிகர்களுடன் உரையாட வைத்தது மட்டுமின்றி போட்டியின் முக்கியமான தருணங்களை நிகழ்நேரத்தில் கண்டுகளிக்க அழைத்து சென்றது.
அப்போது பேசிய கபில் தேவ், 5G தொழில்நுட்ப திறனை பார்த்தும், என் டிஜிட்டல் அவதார் நான் உண்மையாக இருப்பது போல் அங்கிருக்கும் ரசிகர்களுடன் உரையாடுவதை பார்த்தும் வியப்படைந்தேன்.என் வாழ்க்கை பயணத்தின் மிக முக்கியமான தருணத்திற்கு மீண்டும் உயிர்கொடுத்த ஏர்டெல்-இன் அற்புதமான முயற்சிக்கு நன்றி என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ரன்தீப், “5ஜி சேவைமூலம் துல்லியமான ஹோலோகிராம்களை உருவாக்கி எந்த இடத்திற்கு வேண்டுமனாலும் அனுப்ப முடியும், இணைய சந்திப்பு, இணைய நிகழ்ச்சி, நேரலை செய்திகள் ஆகியவற்றில் இந்த ஹோலோகிராம் பெறும் மாற்றத்தை ஏற்படுத்தும். வளர்ந்து வரும் 5ஜி உலகிற்கு, ஏர்டெல் தயாராக உள்ளது. இந்த வாய்ப்பின் மூலம், எங்கள் தொழில்நுட்பத்தை சரிபார்க்கவும், பரிசோதனை செய்யவும் அலைவரிசையை வழங்கிய தொலைத்தொடர்புத் துறைக்கு நன்றி” என தெரிவித்தார்.
இந்த டெஸ்டிங், டெலிகாம் துறையால் ஒதுக்கப்பட்ட 3500 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட் டெஸ்ட் ஸ்பெக்ட்ரம், NSA முறையில் 5G உதவியுடன் மானேசரில் (குருகிராம்) உள்ள ஏர்டெல்லின் நெட்வொர்க் எக்ஸ்பிரியன்ஸ் மையத்தில் நடத்தப்பட்டது. எதிர்காலத்தில், வீடியோ பொழுதுப்போக்கின் அடுத்தகட்ட வளர்ச்சியை நம் கண் முன்னே கொண்டு வந்தது. ஏர்டெல்லின் 5ஜி நெட்வொர்க் வணிகரீதியாக வெளியானதும், அதன் திறன் குறித்து தகவல் வெளியிடப்படும். கடந்தாண்டு ஏர்டெல் நடத்திய பல 5ஜி சோதனைகளில் இது லேட்டஸ்ட் ஆகும்.
5ஜி தொழில்நுட்பத்தை செயல்படுத்தும் முயற்சிக்காக, இந்தியா முழுவதும் உள்ள இடங்களில் பல நேரடி சோதனைகளை ஏர்டெல் நடத்தியது. கடந்த ஆண்டு ,ஏர்டெல் 5G நெட்வொர்க்கில் தனித்துவமான கிளவுட் கேமிங் அனுபவத்தை வழங்கியது. அப்போது, #5GforBusiness என்கிற திட்டத்தை முன்னிறுத்தியது. நிறுவனங்களுக்கான 5G அடிப்படையிலான தீர்வுகளை சோதிக்க ஏர்டெல் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பிராண்டுகளுடன் இணைந்து பணியாற்றியது.
டெலிகாம் துறை வழங்கிய சோதனை ஸ்பெக்ட்ரம் அடிப்படையிலே 5G டெமோ நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Disclaimer: 5G Demo based on trial spectrum given by Department of Telecom.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”