6 வயது மகனின் புற்றுநோய் சிகிச்சைக்காக நிதியுதவி கேட்கும் தந்தை

பொன்ராக் மருத்துவமனையின் வரண்டாவில் ஒரு மெல்லிய கம்பளத்தின் மீது அமர்ந்து கூரையை வெறித்துப் பார்த்தபடி இருக்கிறாள். அவள் சில நாட்களாக தூங்கவில்லை. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவளுடைய 6 வயது மகன் ஆபத்தான ரத்தப் புற்றுநோயுடன் போராடிக் கொண்டிருக்கிறான். அவள் பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை சென்று, அமைதியாக தூங்கிக்கொண்டிருக்கும் தனது மகனை சரிபார்க்கிறாள். அவனை இழக்க நேரிடுமோ என்ற அச்சம் அவள் மனதை வாட்டுகிறது. ஆனால், அவள் எப்படியாவது தனது நம்பிக்கையை அதிகரிக்க முயற்சிக்கிறாள். “பல ஆண்டுகளாக, என் […]

Jobless father has no means to fund his 6-year-old son’s cancer treatment donation
Jobless father has no means to fund his 6-year-old son’s cancer treatment donation

பொன்ராக் மருத்துவமனையின் வரண்டாவில் ஒரு மெல்லிய கம்பளத்தின் மீது அமர்ந்து கூரையை வெறித்துப் பார்த்தபடி இருக்கிறாள். அவள் சில நாட்களாக தூங்கவில்லை. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவளுடைய 6 வயது மகன் ஆபத்தான ரத்தப் புற்றுநோயுடன் போராடிக் கொண்டிருக்கிறான். அவள் பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை சென்று, அமைதியாக தூங்கிக்கொண்டிருக்கும் தனது மகனை சரிபார்க்கிறாள். அவனை இழக்க நேரிடுமோ என்ற அச்சம் அவள் மனதை வாட்டுகிறது. ஆனால், அவள் எப்படியாவது தனது நம்பிக்கையை அதிகரிக்க முயற்சிக்கிறாள்.

“பல ஆண்டுகளாக, என் மகன் புற்றுநோயுடன் போராடுகிறான். கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் அவனது நிலை மேலும் மேலும் மோசமாகி வருகிறது. அவனுடைய சிகிச்சைக்கு எங்களால் பணம் செலுத்த முடியாததால் நாங்கள் அவன் கஷ்டப்படுவதைப் பார்க்கிறோம்” என்று பொன்ராக் தனது கண்ணீரைத் துடைத்துக்கொண்டு கூறுகிறார்.

இதெல்லாம் டிசம்பர் 2016-இல் தொடங்கியது. கௌசிக்கிற்கு 3 வயது ஆன உடனேயே, அவன் அப்போது பள்ளிக்குச் செல்லத் தொடங்கியிருந்தான். அவனுடைய பெற்றோர்கள் சந்தோஷத்தில் இருந்தனர். ஆனால், அந்த சின்ன குழந்தை ஒரு நாள் அதிக காய்ச்சலுடன் தூங்கி எழுந்தபோது எல்லாம் மாறிவிட்டது. பொன்ராக் அவனுக்கு மருந்துகளைக் கொடுத்து தூங்க வைத்தாள். ஆனால், சில மணி நேரங்களுக்குப் பிறகு, அவனது மூக்கிலிருந்து ரத்தம் வருவதை அவள் பார்த்தாள்.

பெற்றோர் வேகமாக அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவன் கடுமையான ரத்தப் புற்றுநோயால் (லிம்போபிளாஸ்டிக் லுகேமியா) பாதிக்கப்பட்டுள்ளான் என்று தொடர்ச்சியான சோதனைகளில் தெரியவந்தது. சிறுவனின் பெற்றோர் பொன்ராக்கும் அலெக்ஸும் அப்படியே இடிந்துபோனார்கள். அது அவர்களின் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது. ஆனால், அவர்கள் தங்கள் மகனுக்கு எதுவும் நடக்க விடமாட்டோம் என்று பிடிவாதமாக இருந்தார்கள்.

நீங்கள் நிதியுதவி அளிக்க விரும்பினால் இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

அவர்கள் தங்களிடம் சிறிய அளவில் இருந்த பொருட்களை விற்று, நண்பர்களிடம் இருந்து கடன் வாங்கி அவனது கீமோதெரபி சிகிச்சையைத் தொடங்கினர். மூன்று வருட கடுமையான கீமோதெரபிக்குப் பிறகு, கௌசிக் புற்றுநோயை எதிர்த்துப் போராடினான். ஆனால், அவனுக்கு இன்னும் நிறைய துன்பங்கள் காத்திருந்தன.

ஆறு மாதங்களுக்குப் பிறகு, பிப்ரவரி 2020-இல் அவனுக்கு புற்றுநோய் மீண்டும் வந்தது

எங்கள் உலகம் அப்படியே இருண்டுபோனது. நாங்கள் அவனை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, மருத்துவர்கள் அவனுக்கு கீமோதெரபி சிகிச்சை தேவை என்று சொன்னார்கள். அதன்பிறகு, அலொஜெனிக் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கு 16 லட்சம் ரூபாய் (ரூ.16,00,000) செலவாகும் என்றார்கள். அந்த தொகையில் கொஞ்சம்கூட எங்களிடம் இல்லை. அவனுடைய அறுவை சிகிச்சைக்கு எங்களால் எப்படி பணம் செலுத்த முடியும்?” என்று பொன்ராக் அழுகிறார்.

பொன்ராக்கின் கணவர் அலெக்ஸ் டெய்லர் வேலை செய்கிறார். அவர் மட்டும்தான் குடும்பத்தின் சாப்பாட்டுக்காக வேலை செய்பவர். தொடர்ச்சியாக வேலை இல்லாததால் அவர் வேலையையும் இழந்தார். இந்த ஏழை தம்பதியினர் தங்கள் மகனின் சிகிச்சைக்காக கெஞ்சி கடன் வாங்கியது ஏற்கெனவே தீர்ந்துவிட்டது. அவர்கள் இப்போது கையில் ஒன்றுமில்லாமல் இருக்கிறார்கள்.

“நான் ஒவ்வொரு முறையும் என் மகனின் அறைக்குச் செல்லும்போது, அவன் அழுகிறான், அவனை வீட்டிற்கு அழைத்துச் செல்லச் சொல்கிறான். வலிமிகுந்த சிகிச்சை அவனுக்கு இரக்கம் காட்டவில்லை. புற்றுநோய் அவனது குழந்தை பருவத்தை முழுவதுமாக அழித்துவிட்டது. எங்கள் குழந்தையை இப்படி பரிதாப நிலையில் பார்ப்பது எவ்வளவு துன்பமாக இருக்கிறது என்பதை என்னால் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை ” என்று பொன்ராக் கதறி அழுகிறார்.

கௌசிக்கைப் பொறுத்தவரை, இது அவனுக்கு வாழ்க்கை விதித்த மிக மோசமான தண்டனை. அவன் வயது மற்ற குழந்தைகளைப் போல அல்லாமல், அவன் பள்ளிக்குச் செல்லவோ அல்லது நண்பர்களுடன் விளையாடவோ முடியாது. அவனது நாட்கள் மருத்துவமனை படுக்கையில் கழிகின்றன. மருந்துகள் மற்றும் ஊசி மருந்துகளை எடுத்துக்கொள்கிறான். அவன் இப்போது யாருடனும் பேசுவதில்லை.

பொன்ராக்கும் அலெக்ஸும், தங்கள் மகனின் உயிர் காக்கும் சிகிச்சைக்கு பணம் செலுத்த எந்த வழியும் இல்லாததால் மெதுவாக நம்பிக்கையை இழந்து வருகின்றனர். நீங்கள் நினைத்தால் அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை மீண்டும் கொண்டுவர முடியும். கௌசிக் புற்றுநோய் இல்லாத வாழ்க்கையை வாழ தகுதியானவர். தயவுசெய்து பங்களித்து அவனைக் காப்பாற்றுங்கள்.

இந்த சிறுவன் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் உள்ள மருத்துவக் குழு சரிபார்க்கிறது. சிகிச்சை அல்லது அதனுடன் தொடர்புடைய செலவுகள் குறித்து எந்த தெளிவுபடுத்தலுக்கும், பிரச்சார அமைப்பாளர் அல்லது மருத்துவக் குழுவை தொடர்பு கொள்ளவும்.

அறக்கட்டளை எண்: 81690918

குறிப்பு: இந்த நிதி திரட்டுபவருக்கான நன்கொடைகள் 80 ஜி, 501 (சி) போன்ற எந்தவொரு வரி விலக்கிற்கும் பொருந்தாது.

இந்த நிதி திரட்டுபவரின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் அணுப்பலாம். இந்திய ரூபாய் ஐ.என்.ஆர் பணம் மட்டுமே செலுத்த அனுமதிக்கப்படுகிறது.

வங்கி கணக்கு எண்: 6999413500178542
கணக்கு வைத்திருப்பவரின் பெயர்: Ponrak-Ketto
வங்கி கணக்கு வகை: Current
IFSC: YESB0CMSNOC

நீங்கள் நிதியுதவி அளிக்க விரும்பினால் இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

Get the latest Tamil news and Advertorial news here. You can also read all the Advertorial news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Jobless father has no means to fund his 6 year old sons cancer treatment donation

Next Story
Realme C1 மெகா நோட்ச் ஸ்கிரீன், மெகா பேட்டரியுடன் வரும் முதல் பட்ஜெட் போன்Realme C1 price, Realme C1 specifications, Realme C1 India
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com