Livspace reviews livspace interiors | Indian Express Tamil

Livspace Reviews: லைவ்ஸ்பேஸ் ரிவியூஸ் – ஹோம் இன்டீரியருக்கு ஏன் லைவ்ஸ்பேஸைத் தேர்வு செய்ய வேண்டும்?

Livspace Reviews: வாடிக்கையாளர்கள் அவர்களுடைய கனவு இல்லங்களைப் புதுப்பிக்கும்போது லைவ்ஸ்பேஸ் உடனான தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

Livspace, Livspace reviews

பெரும்பாலான வீட்டு உரிமையாளர்களுக்கு, வீட்டைப் புதுப்பிப்பது என்பது அதிக மதிப்பு வாய்ந்த கணிசமான அளவிலான பெரிய முதலீடு ஆகும். உண்மையில், சமீபத்திய ஆராய்ச்சியின்படி, பெரும்பாலான இந்திய வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறை அல்லது இரண்டு முறை தங்கள் வீட்டின் இன்டீரியரை அல்லது வீட்டைப் புதுப்பிக்கிறார்கள். எனவே, இந்த முடிவு மிகவும் கவனமாகவும் பொதுவாக விரிவான ஆராய்ச்சிக்குப் பிறகும் எடுக்கப்படுகிறது. உங்கள் வீட்டைப் புதுப்பிப்பது என்பது உங்கள் கனவு இல்லத்தை உயிர்ப்பிக்க, நீங்கள் வேறு ஒருவரை நம்பி ஒப்படைப்பதை உள்ளடக்கியது!

வடிவமைப்பு முதல் செயல்படுத்துதல் வரையிலான உயர்ந்தபட்ச கைவினைத்திறனை அளிப்பது என்று வரும்போது,( Livspace ) லைவ்ஸ்பேஸே சிறந்த தேர்வாகும். இந்த நிறுவனம் இந்தியாவின் மிகவும் நம்பகமான ஹோம் இன்டீரியர் மற்றும் புதுப்பித்தலுக்குப் புகழ் பெற்ற பிராண்டாக விளங்குகிறது.
தங்களுடைய மிகச்சிறந்த வடிவைமைப்பாளர் குழு, நம்பகமான சேவை, பிராண்ட் பார்ட்னர்கள் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற புராஜெக்ட் மேலாளர்கள் மூலம் இது ஆரம்பம் முதல் இறுதிவரையிலான முழுத் தீர்வுகளை வழங்குகிறது.

அது ஒரு கவர்ச்சிகரமான லிவிங் அறையாக இருந்தாலும் சரி அல்லது ஒரு நேர்த்தியான மாடுலர் சமையலறையாக இருந்தாலும் சரி, (Livspace) லைவ்ஸ்பேஸ் மூலம், நீங்கள் தொந்தரவு இல்லாத வடிவமைப்புத் தீர்வுகளைப் பெற்று மகிழ முடியும். பொருத்தமான வடிவமைப்பாளர்களைக் கண்டுபிடிப்பதில் இருந்து பொருட்களைப் பெறுவது முதல் தயாரித்து நிறுவுவது வரை, புதிய வீடுகளைப் புதுப்பிப்பதை அல்லது அமைப்பதை இந்த பிராண்ட் எளிமைப்படுத்தியுள்ளது. உங்கள் தேவைகளுக்கு ஏற்பத் தனிப்பயனாக்கி, உங்கள் தனிப்பட்ட ஆளுமையைப் பிரதிபலிக்கும் பெரிய அளவிலான மாடுலார் வடிவமைப்புகளை நிறுவனம் வழங்குகிறது. பாரம்பரியமானது முதல் சமகாலத்தது வரை, வாஸ்து இணக்கம் முதல் செல்லப்பிராணிகளை வளர்ப்பது வரை, உங்கள் ரசனை மற்றும் விருப்பம் எப்படிப்பட்டதாக இருந்தாலும், லைவ்ஸ்பேஸ் உங்களுக்காகவே தனித்துவமான வடிவமைப்புகளைக் கொண்டுள்ளது. அதை நிரூபிக்கும் இந்த Livspace reviews இங்கே இருக்கின்றன.

பூனமும் அவரது கணவர் அர்னவும், தங்கள் அந்தஸ்துக்கு ஏற்ற வீட்டைப் பற்றிய ஆலோசனைகளைத் தொடங்க லைவ்ஸ்பேஸை அணுகினர். லைவ்ஸ்பேஸ் இன்டீரியர் டிசைனரான நேஹா, ஒரு பெரிய, புதுமையான அற்புதமான திட்டத்தை உருவாக்குவதற்காக அனைத்தையும் ஒன்றாக இணைக்கத் தொடங்கினார். சுத்தமான, வெள்ளைத் தளத்துடன், அவர்களின் குருகிராம் 3BHK ஃபிளேட் இப்போது அவர்கள் விரும்பிய வண்ணமே அபூர்வமான இடமாகத் திகழ்கிறது. கண்ணைக்கவரும் இன்டீரியர்களுடன் வடிவமைப்புகள் ஓர் ஆரோக்கியமான அதிர்வை வெளிப்படுத்தும் அதே நேரத்தில் வீட்டு உரிமையாளர்களின் ஆளுமை மற்றும் உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கின்றன.  “எங்களுக்கு ஹோட்டல் போன்ற வீடு தேவையில்லை, மேலும் எந்த வகையான பொருட்கள் அல்லது பூச்சுகளைத் தேடுவது என்பது எங்களுக்குத் தெரியாமல் இருந்தது. நாங்கள் லைவ்ஸ்பேஸைத் தேர்ந்தெடுக்கும் போது நாங்கள் தேடிக்கொண்டிருந்த வழிகாட்டுதலாக அது அமைந்தது” என்று பூனம் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். ஒவ்வொரு அறையிலும் நுட்பமான வண்ணங்கள் மிளிரும் ஒரு நியூட்ரல்-டோன் வீட்டைத்தான் தம்பதியர் தேடிக்கொண்டிருந்தனர். அலங்காரக் கண்ணாடியுடன் கூடிய நேர்த்தியான பூஜை அறை, தரையிலிருந்து ஸீலிங் வரையிலான என்டர்டெய்ன்மெண்ட் லைப்ரரி யூனிட் மற்றும் மரம் போன்ற நேர்த்தி கொண்ட விட்ரிஃபைட் டைல்ஸ் போடப்பட்ட சமையலறைத் தரை ஆகியவை அவர்களுடைய புதுப்பிக்கப்பட்ட வீட்டின் சிறப்பம்சங்களில் அடங்கும். தங்கள் வீடு எப்படி மாறிப் போய்விட்டது என்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் பூனம், “ ஒரு சித்திரம் போன்ற முழுமையான வீட்டைப் பற்றிய நமது எண்ணங்களைப் புரிந்துகொண்டு, அதை வாழத்தக்க வீடாக மாற்றுவதைத்தான் ஒரு வடிவமைப்பாளரின் திறமை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இது எங்கள் விஷயத்தில் வண்ணத்திலும் உண்மையாகிவிட்டது என்று நான் நினைக்கிறேன்! எங்கள் வடிவமைப்பாளரான நேஹா ஓர் அற்புதமான பணியைச் செய்தார். செயல்திறனில் இருந்து அலங்காரம் வரை அனைத்தும் உள்ளடங்கிவிட்டன” என்று கூறுகிறார் பூனம். தமது கனவுச் சமையலறையையும், தமது குழந்தைக்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு இடத்தையும் பெற்றிருக்கும் பூனம் தொடர்ந்து கூறுகிறார், ” என் வீட்டைப் பார்க்கும்போது, ​​நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.”

அது குர்கானாக இருந்தாலும் அல்லது மும்பையாக இருந்தாலும் லைவ்ஸ்பேஸ் பல உற்சாகமான திருப்தியான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. பரபரப்பான நகரத்தில் வாழ்வது, வேலை செய்வது மற்றும் வாகனம் ஓட்டுவது சில சமயங்களில் மன உளைச்சலைத் தரும். அதனால், திரும்பி வருவதற்கு ஓர் அழகிய வீடு இருப்பது சிறப்பானது இல்லையா? விசாலமான 3BHK வீட்டைப் பெற்ற பிறகு, ஜோதி அதைத் தனது மகிழ்ச்சியான இடமாக மாற்ற விரும்பினார். ஆன்லைனில் வீட்டு இன்டீரியர் டிசைனிங் சேவைகளைத் தேடும் போது, லைவ்ஸ்பேஸைக் கண்டார், தொடர்புகொள்ள முயற்சி செய்ய முடிவு செய்தார். ஜோதி லைவ்ஸ்பேஸைச் சேர்ந்த இன்டீரியர் வடிவமைப்பாளரான சாக்‌ஷி ஷெட்டியைச் சந்தித்தபோது அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கொண்டாடும் ஒரு வீட்டை அவர் விரும்புகிறார் என்பதை விளக்கினார். சாக்‌ஷி வண்ணங்களின் மாதிரிகளில் சாந்தமான வெள்ளை மற்றும் சாம்பல் நிறங்கள் கொண்ட ஒன்றைப் பரிந்துரைத்தார், ஜோதியும் ஒப்புக்கொண்டார். அமைதியான நிறத்தில் நேர்த்தியான பூச்சுகள் மற்றும் அவர்களின் செல்லப் பிராணிகள் நடமாடுவதற்குப் போதுமான இடவசதியை வழங்கியதன் மூலம் அந்த வீடு அழகான இல்லமாக மாற்றப்பட்டது.  “நாங்கள் சாக்‌ஷி உருவாக்கிய வடிவமைப்புகள் மற்றும் படங்களை விரும்பினோம், அதுவே எங்களை லைவ்ஸ்பேஸ் உடன் முன்னேறச் செய்தது. நாங்கள் அவரை எங்கள் வீட்டைப் பொறுத்தவரையில் முழுமையாக நம்பினோம், இதைவிட சரியான வடிவமைப்பை நாங்கள் கற்பனைகூட செய்திருக்க முடியாது. எங்கள் திட்டம் முடிக்கப்பட்டு சரியான நேரத்தில் டெலிவரி செய்யப்பட்டது. மேலும், எங்களுடைய நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் லைவ்ஸ்பேஸை நிச்சயமாகப் பரிந்துரைக்கிறோம்” என்று ஜோதி கூறுகிறார். இது பல ஆண்டுகளாக திருப்திகரமான வாடிக்கையாளர்களிடமிருந்து இந்த நிறுவனம் பெற்ற லைவ்ஸ்பேஸ் ரிவியூக்களின்பட்டியலில் இணைகிறது.

அழகிய, மிகச்சிறிய கருப்பொருளை எதிரொலிக்கும் வகையில், பெங்களூரில் உள்ள வர்மா குடும்பம் அவர்களின் தேவைகள் குறித்து மிகத் தெளிவாக இருந்தனர். அடர்த்தியான வண்ணங்கள் அவர்களின் வீட்டிற்கு பெரிய அளவில் இல்லை. அவர்கள் ஓர் அமைதியான இடத்தைக் கற்பனை செய்தனர், அமைதியான வண்ணத் திட்டத்துடன் வடிவமைக்கப்பட்டது, முற்றிலும் வாஸ்துவுக்கு இணக்கமாக இருந்தது. இதையெல்லாம் மனதில் வைத்து, லைவ்ஸ்பேஸின் இன்டீரியர் டிசைனர் ரிச்சா, அவர்களுக்கு வடிவமைப்பு ஆலோசனைகளை வழங்கத் தொடங்கினார்.

சுமன் & தீப்தி கூறுகையில், “லைவ்ஸ்பேஸுடன் எங்கள் அனுபவவம் ஆரோக்கியமான ஒன்றாக இருந்தது. எங்களின் முக்கியத் தேவை வாஸ்துவுக்கு இணக்கமான இன்டீரியர்களைப் பெறுவதுதான். ரிச்சா அதை உறுதி செய்தார், மேலும் அவர் எங்களுக்குத் தேர்ந்தெடுக்க சில அற்புதமான வடிவமைப்புகளைக் கொடுத்தார். நாங்கள் அமைதியான வண்ணங்களை விரும்புகிறோம், இது எங்கள் கனவு இல்லமாக மாறிவிட்டது. நாங்கள் எங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு லைவ்ஸ்பேஸை உறுதியாகப் பரிந்துரைக்கிறோம்!” என்று தெரிவித்தனர்.

ரஸ்டிக் இன்டீரியர்கள், இன்டீரியர் வடிவமைப்புத் துறையில் மிகவும் விரும்பப்படும் ட்ரென்ட்டாகமாறிவருகிறது. பல இடங்களுக்கு அதிக அளவில் பயணம் செய்துள்ள இளம் பெங்களூரு ஜோடியான நிகில் & பிரித்திகா, இன்டீரியரில் அபூர்வமான ரசனை கொண்டவர்கள். அவர்கள் லைவ்ஸ்பேஸை அணுகியபோது, அவர்கள் ஆலோனைகளால் நிரம்பி வழிந்தனர். மேலும், அவர்களுக்கு அனைத்தையும் ஒன்றிணைக்க ஒருவர் தேவைப்பட்டார். அவர்களின் இன்டீரியர் வடிவமைப்பாளரான அஞ்சலி முரளி, இந்த இளம் ஜோடி கற்பனை செய்த கனவு இல்லத்தை நனவாக்க உதவுவதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். பூமியின் சக்தியை எதிரொலிக்கும் வீட்டு இன்டீரியருக்கான அவர்களுடைய தேவையின் அடிப்படையில், அவர்களின் புதிய வீடு கதகதப்பான வண்ணங்கள் மற்றும் சில தனித்துவமான கூறுகளால் நிரப்பப்பட்டுள்ளது. இது அஞ்சலி தேர்ந்தெடுத்த தனித்துவம் வாய்ந்த அசல் வடிவமைப்பாக அமைகிறது. இந்த ஜோடி தங்களுடைய வீட்டு இன்டீரியர் வடிவமைப்பு பற்றி கூறுகையில்,  “வீட்டு இன்டீரியர்களுக்கு நாங்கள் ஒரே ஒரு தீர்வை விரும்பினோம், லைவ்ஸ்பேஸ் முதல் நாளிலிருந்தே எங்களை ஈர்த்தது. எங்களுடைய வீடு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து எங்களிடம் ஏற்கனவே பல யோசனைகள் இருந்தாலும், அவை எல்லாவற்றையும் ஒன்றாக இணைத்து ஒரு தீமை உருவாக்குவது எப்படி என்று எங்களுக்குத் தெரியவில்லை. அஞ்சலியால் எங்களின் தேவைகளை நன்றாகப் புரிந்து கொள்ள முடிந்தது. மேலும், நுணுக்கமான விவரங்களில் ஈடுபடுவதற்கு முன், அவர் எங்களுக்கு ஒரு விரிவான லேயவுட்டைக் கொடுத்தார். எங்களுடைய வேலையை மேற்பார்வை செய்த ஞானேந்திராவின், விடாமுயற்சியும் விவரங்களில் கவனம் செலுத்தும் விதமும் எங்களைக் கவர்ந்தது. எங்கள் புதிய வீட்டைக் குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்! ” என்று கூறினார்கள்.

லைவ்ஸ்பேஸ் தன்னை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது, எந்தவொரு வீட்டு இன்டீரியர் மற்றும் புதுப்பித்தல் தேவைகளுக்கும், வடிவமைப்பதில் இருந்து தரமான பொருட்களை வாங்குவது வரை முழு திட்டத்தையும் செயல்படுத்துவது வரை அனைத்தையும் உள்ளடக்கிய தளமாக உள்ளது. இந்தச் செயல்பாட்டின்போது வாடிக்கையாளர் ஒவ்வொரு விவரத்திற்கும் அவர்களின் தனிப்பட்ட கருத்து இருப்பதை உறுதிசெய்ய, குழு ஒவ்வொரு படியிலும் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் இதைச் செய்கிறது. இது முழு அனுபவத்தையும் நம்பகமானதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றுகிறது. இந்த லைவ்ஸ்பேஸ் மதிப்புரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போலவே உங்கள் வீடும் அழகாக இருக்க வேண்டுமெனில், நிறுவனத்தின் இணையதளத்தில் அவர்களுடன் ஆன்லைன் ஆலோசனைக்குப் பதிவு செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Advertorial news download Indian Express Tamil App.

Web Title: Livspace reviews livspace interiors