Advertisment

Realme C1 மெகா நோட்ச் ஸ்கிரீன், மெகா பேட்டரியுடன் வரும் முதல் பட்ஜெட் போன்

13 MP + 2 MP செயல் திறன் கொண்ட இரட்டை கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Realme C1 price, Realme C1 specifications, Realme C1 India

Realme C1 : இந்த வருடத்தின் ஆரம்பத்தில் யாராவது, மிகப்பெரிய நோட்ச் திரையுடன் கூடிய ஸ்மார்ட்போன் 8 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கும் என்று யாராவது கூறியிருந்தால் நிச்சயம் சிரித்து தான் இருப்போம். ஆனால் ரியல்மீ சி1க்கு தான் நன்றி கூற வேண்டும். ஆம், இந்த ஸ்மார்ட்போன் 8 ஆயிரம் ரூபாய்க்கு மேற்கொண்ட ஃபீச்சர்களுடன் வெளியாகிறது. ரியல்மீ மிகவும் சிறப்பான பட்ஜெட் போன்களை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியது. பட்ஜெட் போன்களை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது இந்த நிறுவனம்.

Advertisment

Realme C1 : திரை மற்றும் வடிவமைப்பு

6.2 இன்ச் சூப்பர் லார்ஜ் டிஸ்பிளே கொண்டிருக்கும் இந்த போன் பட்ஜெட் போன்களிலேயே முழுமையான நோட்ச் திரை கொண்ட போனாகும். இதனுடைய பெசல் விட்த்தானது மிகச் சிறியதாக இருக்கிறது. இந்த பெசல் விட்த்திற்குள்ளே செல்பி கேமரா, மற்றும் லைட் சென்சார் ஆகியவை பொருத்தப்பட்டிருக்கிறது.

இதன் ஸ்கீரின் டூ பாடி ரேசியோ 88.8% கொண்டிருக்கிறது. ஸ்கீரின் டிஸ்பிளே 19:9 ஆகும்.

சி1 போன் கார்னிங் கொரில்லா க்ளாஸ்ஸைக் கொண்டிருக்கிறது. ஸ்கிராட்ச் மற்றும் சேதாரங்களில் இருந்து போனிற்கு முழுமையான பாதுகாப்பினைத் தருகிறது இந்த கொரில்லா க்ளாஸ்.

12 லேயர்கள் நானோ ஸ்கேல் ஷீட் லேமினேசன் இதில் செய்யப்பட்டிருக்கிறத், மேலும் இதன் உறுதி தன்மையை தக்கவைக்க 2.5D நானோ ஸ்கேல் காம்போசைட் மெட்டிரியல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இதன் போனின் வெளிப்புறத் தோற்றம், ஸ்மூத்னஸ் ஆகியவற்றை மேலும் சிறப்பு வாய்ந்ததாக மாற்றுகிறது.

மேலும் படிக்க : ரியல்மீ பட்ஜெட் விலையில் மிகச் சிறந்த ஸ்மார்ட்போன்!

பேட்டரி மற்றும் ப்ரோசசர்

  • இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 4230 mAh மெகா பேட்டரியில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 44 மணி நேரம் வரை இந்த போனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • இசை கேட்கும் பட்சத்தில் 18 மணி நேரம் வரை இந்த போன் செயல்படும். கேம் விளையாடிக் கொண்டிருந்தால் 10 மணி நேரம் வரை இந்த போனை பயன்படுத்த இயலும்.
  • ஆப் ஃப்ரீசிங் பவர் சேவர் மற்றும் குயிக் ஆப் ஃப்ரீசிங் ‘App-freezing Power Saver’ and ‘Quick App Freezing’ போன்ற இரண்டு தொழில்நுட்பங்கள் இதில் பயன்படுத்தப்பட்டிருப்பதால் பேட்டரியின் பயன்பாடு நீண்டு வருகிறது.
  • ஃப்ரீசிங்க் செயல்பாட்டில் மற்றும் 11 முதல் 15% பேட்டரி சேமிக்கப்பட்டிருக்கிறது.

கேமரா

13 MP + 2 MP செயல் திறன் கொண்ட இரட்டை கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. 5 MP செயல்திறன் கொண்ட செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. AI beauty மற்றும் 296 recognition points கொண்டுள்ளது. இதன் மூலம் புகைப்படம் எடுப்பவரின் பாலினம், வயது, ஸ்கின் டோன், மற்றும் ஈவன் ஸ்கின் டைப் ஆகியவற்றை அறிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இதர சிறப்பம்சங்கள்

ஸ்நாப்ட்ராகன் 450 ப்ராசசர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பப்ஜி மற்றும் ஃப்ரீ பையர் ஆகிய கேம்களை இந்த போனில் விளையாடுவது மிகவும் சுலபமாக இருக்கும். மெமரி கார்ட் மற்றும் இரண்டு சிம்கார்ட்கள் போடும் வசதிகளை கொண்டிருக்கிறது.

Colour OS 5.1 UI என்ற இயங்கு தளத்தில் இயங்கும் இந்த போனின் சேமிப்புத் திறன் 16GB with 2GB RAM ஆகும். அதே போல் இதன் சேமிப்புத் திறனை 256GB வரை அதிகப்படுத்திக் கொள்ளலாம். dual VoLTE and face unlock சிறப்பம்சங்களையும் கொண்டிருக்கிறது இந்த போன். பல்வேறு சிறம்பம்சங்களைக் கொண்ட இந்த போன் வெறும் 8 ஆயிரம் தான்.

Technology
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment