Budget 2019 Expectations : லோக்சபா தேர்தல் நெருங்குகின்ற நிலையில், மோடி தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாஜக ஆட்சியின் இறுதி பட்ஜெட் கூட்டம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் நலத்திட்டங்கள் மற்றும் பட்ஜெட்டினை மக்கள் மட்டுமின்றி ஒட்டு பாஜக ஆட்சியும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. ஏன் என்றால், வருகின்ற பொதுத்தேர்தல் முடிவுகள் இந்த பட்ஜெட்டினைப் பொருத்தும் மாற்றம் அடையலாம்.
Budget 2019 Expectations
புதிதாக தேர்தல் நடைபெறும் போதும், புதிய ஆட்சி அமையும் போதும், பட்ஜெட்டானது ஒரு வருடம் கழித்து தான் அறிவிப்பார்கள். அதனால் தான் இந்த பட்ஜெட் மிக முக்கியமாக கவனிக்கப்படுகிறது. ஆனாலும் கூட மிகவும் சிக்கலானதாகவோ, அல்லது அதீத லாபம் அடையக் கூடிய வகையிலோ பட்ஜெட் தாக்கல் செய்யவும் மாட்டார்கள்.
தனிநபர் வருமான வரி குறித்த அறிவிப்புகள் வெளியகலாம் என்று மக்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர். தற்போது வரை 10 லட்சம் அல்லது அதற்கு மேல், வருடாந்திர வருமானம் உடையவர்கள் 30% வரியாக செலுத்த வேண்டும். அதற்கு பதிலாக 20 லட்சம் என வருவாய் வரம்பினை விதிக்கலாம் என்றும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
2017ம் ஆண்டில் தான் முதன் முறையாக வருமான வரியின் அளவு குறைக்கப்பட்டது. 2.5 லட்சம் முதல் 3 லட்சம் வரையில் வருமானம் பெறுபவர்கள் அதற்கு முந்தைய காலம் வரை 10% வரை வருமான வரை கட்டி வந்தனர். 2017ம் ஆண்டு பட்ஜெட்டிற்கு பிறகு 5%மாக குறைக்கப்பட்டது.
20% வரியானது 5 முதல் 10 லட்சம் வரையில் வருமானம் வாங்குபவர்களிடம் விதிக்கப்பட்டிருக்கிறது. 10 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறுபவர்கள் தற்போது 30% வரி கட்டி வருகின்றனர்.
2.5 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் பெறுபவர்கள் வருமானவரி எதுவும் செலுத்தத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் சீனியர் சிட்டிசன்களுக்கான வருமான வரியிலும் மாற்றங்கள் வேண்டும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
60 முதல் 80 வயது உள்ளவர்களுக்கும் இதே வருமான வரி தான். ஆனால் 3 லட்சத்திற்கு குறைவாக வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரி கிடையாது. அதே போல் 80 வயதிற்கு மேல் 5 லட்சம் வரை வருமானம் பெரும் சீனியர் சிட்டிசன்களுக்கும் வருமான வரி கிடையாது.
மேலும் படிக்க : அரசியலில் களம் இறங்குகிறார் ப்ரியங்கா காந்தி... 2019 தேர்தலுக்கான வியூகம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.