Advertisment

Budget 2019 Speech Full Text: மேடம் ஸ்பீக்கர் அவர்களே... பியூஸ் கோயல் வாசித்த பட்ஜெட் 2019 முழு உரை

Budget 2019 Full Speech in Text by FM Piyush Goyal: மத்திய பட்ஜெட் 2019 அமைச்சர் பியூஸ் கோயல் வாசித்த பட்ஜெட் உரை இங்கு தரப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Budget 2019 Speech, Budget 2019 Full Speech in Text, மத்திய பட்ஜெட் 2019 அமைச்சர் பியூஸ் கோயல் வாசித்த பட்ஜெட் உரை

Budget 2019 Speech, Budget 2019 Full Speech in Text, மத்திய பட்ஜெட் 2019 அமைச்சர் பியூஸ் கோயல் வாசித்த பட்ஜெட் உரை

Union Budget 2019 Speech in Full Text: மத்திய பா.ஜ.க அரசின் இடைக்கால பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்யப்பட்டது. இதனை மத்திய பொறுப்பு நிதி அமைச்சர் பியுஷ் கோயல் தாக்கல் செய்தார். அப்போது அவர் ஆற்றிய உரை பின்வருமாறு...

Advertisment

‘மேடம் ஸ்பீக்கர், நான் 2019-2020-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன்.

மதிப்புக்குரிய அருண் ஜெட்லி இன்று வராதது, என்னை அதிக உணர்வுப் பெருக்கிற்கு ஆளாக்கியிருக்கிறது.

அருண் ஜெட்லி விரைவில் குணமடைந்து, நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் நம் தேசத்துக்கு சேவை செய்ய வேண்டும் என என்னுடன் சேர்ந்து அவையோராகிய நீங்கள் அனைவருமே வாழ்த்துவீர்கள் என்று நம்புகிறேன்.

மேடம் ஸ்பீக்கர் அவர்களே, இந்திய மக்கள் அனைவரும் எங்கள் அரசாங்கத்திற்கு வலுவான ஆணையை வழங்கியுள்ளனர். இந்திய பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், நாங்கள் நிலையான, உறுதியான, சுத்தமான ஆட்சியை இந்திய மக்களுக்கு வழங்கியிருக்கிறோம். அதோடு அரசாங்க கட்டமைப்பில் சில சீர்திருத்தங்களையும் மேற்கொண்டுள்ளோம். நாட்டை முடக்கும் கொள்கைகளிலிருந்து, அதன் இமேஜை மீட்டுள்ளோம்.

இந்தியா வளர்ச்சி மற்றும் செழிப்பான பாதையில் முன்னோக்கி செல்கிறது என்பதை பெருமையுடன் தெரிவிக்க நான் இங்கே கடமைப்பட்டுள்ளேன். நம் மக்கள் அனைவருக்கும் நிலையான வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் சிறந்த வாழ்க்கைத் தரத்திற்கான அடித்தளத்தை நாங்கள் தயார் செய்துள்ளோம்.

வரும் 2022-ல் இந்தியா சுதந்திரம் பெற்று 75-ம் ஆண்டை நாம் கொண்டாட காத்திருக்கும் நிலையில், சுத்தமான, ஆரோக்கியமான, அனைவரின் வீட்டிலும் கழிப்பறைகள், தண்ணீர், மின்சாரம், விவசாயிகளின் வருமானம் இரு மடங்கு உயர்வு, இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் அவர்களின் கனவை நனவாக்குக் வாய்ப்புகள் ஆகியவற்றுடன், தீவிரவாதம், வகுப்புவாதம், சாதி கொடுமைகள், ஊழல் மற்றும் நெபோடிஸம் இல்லாத ‘புதிய இந்தியாவை’ அதே 2022-ல் உருவாக்க நாங்கள் முன்னோக்கி சென்றுக் கொண்டிருக்கிறோம்.

பொருளாதாரம்

மேடம் ஸ்பீக்கர் அவர்களே, கடந்த 5 ஆண்டுகளில் உலகளாவிய பொருளாதாரத்தில் இந்தியா, ஒரு பிரகாசமான இடத்தைப் பிடித்து உலகளவில் அங்கிகரிக்கப்பட்டுள்ளதை நான் அறிவேன். மிகச் சிறந்த பொருளாதார நிலையை, இந்திய நாடு இந்தக் காலக்கட்டத்தில் தான் அடைந்துள்ளது. 1991-ல் பொருளாதார சீர்திருத்தங்கள் செய்யப்பட்டதிலிருந்து, எந்த அரசாங்கமும் எட்டாத வளர்ச்சியை கடந்த 5 ஆண்டுகளில் சராசரி ஜி.டி.பி ரேட்டுடன் இவ்வரசாங்கம் எட்டியுள்ளது. கடந்த 2013-2014-ம் ஆண்டில் உலகளவில் 11-வது இடத்திலிருந்த இந்திய பொருளாதாரம், தற்போது 6-வது இடத்திற்கு உயர்ந்துள்ளது. உயர் வளர்ச்சி விகிதத்தை உருவாக்கியதோடு, இரட்டை இலக்க பணவீக்கம் மற்றும் நிதி சமநிலையை மீட்டமைத்தோம்.

பணவீக்கம் என்பது ஏழை எளிய, நடுத்தர மக்கள் மீது மறைவாக செலுத்தப்படும் வரி. 2009-2014-ம் ஆண்டில் பணவீக்கத்தின் சராசரி விகிதம் 10.1%. ‘நாங்கள் விரும்பும் அளவுக்கு பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதில் எங்களால் வெற்றி பெற முடியவில்லை. உணவு மீதான பண வீக்கம் அதிகரித்ததே இதற்கு முதன்மையான காரணம்’ என அப்போதைய பிரதமர் ஒப்புக் கொண்டார்.

இதற்கு மாறாக எங்கள் அரசு பணியாற்றியுள்ளது. மற்ற அரசாங்கத்தைக் காட்டிலும் சராசரி பணவீக்கம் 4.6 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. டிசம்பர் 2018-ல் பணவீக்கம் 2.19 சதவீதமாக மட்டுமே இருந்தது. இந்த பணவீக்கத்தை நாங்கள் கட்டுப்படுத்தாமல் இருந்திருந்தால், உணவு, பயணம், அத்தியாவசிய பொருட்கள், வீட்டுவசதி போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு நாம் இன்று 35-40% செலவழித்திருக்க வேண்டும்.

ஏழாண்டுகளுக்கு முன்பு ஏறக்குறைய 6 சதவீதமாக இருந்த நிதி பற்றாகுறை தற்போது 2018-2019-ல் 3.4 சதவீதமாக குறைந்துள்ளது. ஆறு வருடங்களுக்கு முன்பு 5.6 சதவீதமாக இருந்த சி.ஏ.டி (current account deficit), தற்போது 2.5 சதவீதம் மட்டுமே. நிதிக் கமிஷனின் பரிந்துரைகள், மத்திய பங்குகளில் 32 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக அதிகரித்து, மாநிலங்களுக்கு அதிக அளவிலான இடங்களை மாற்றியமைக்கும் நிதிசார் பற்றாக்குறையை நாங்கள் கொண்டிருந்தோம்.

நிலையான மற்றும் கட்டுப்பாடுடன் கூடிய ஆட்சியில், வளர்ந்துவரும் பொருளாதாரம் மற்றும் வலுவான அடிப்படைகள் ஆகியவற்றால் கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா நேரடி வெளிநாட்டு முதலீட்டை (FDI) ஈர்த்திருக்கிறது. தற்போது இது 239 பில்லியனாக உள்ளது.

மேடம் ஸ்பீக்கர் அவர்களே, கடந்த ஐந்து ஆண்டுகளில் அடுத்த தலைமுறை கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மாபெரும் முன்னேற்றம் அடைந்துள்ளன. இவை அடுத்த பத்தாண்டு வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும். ஜி.எஸ்.டி மற்றும் பிற வரி விதிப்புகளின் மூலம் பொருளாதார கட்டமைப்பை சீரமைத்துள்ளோம்.

வங்கி சீர்திருத்தம் (ஐ.பி.சி)

2008 - 2014 கடுமையான கடன் வளர்ச்சிக்காக நினைவுக்கூறப்படும் காலகட்டம். ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, நான் பெர்ஃபாமிங் கடன் மற்றும் சொத்துக்களே இதற்குக் காரணம். பொதுத்துறை வங்கிகளின் கடன்கள் இந்த காலகட்டத்தில் 18 லட்சம் கோடியிலிருந்து 52 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 2014-ல் 5.4 லட்சம் கோடி அளவுக்கு, அதிகமான நான் பெர்ஃபாமிங் சொத்துக்கள் (NPA) இருந்தன.

அத்தகைய நடைமுறைகளை நாங்கள் நிறுத்தி, "ஃபோன் பேங்கிங்" என்ற கலாச்சாரத்தையும் நிறுத்தினோம். தற்போது அங்கீகாரம், தீர்மானம், மறு மூலதனம் மற்றும் சீர்திருத்தங்கள் பின்பற்றப்பட்டு வருகிறது. ‘கிளீனான’ முறையில் வங்கி செயல்பட வேண்டும் என்பதற்காக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பொதுத்துறை வங்கிகளின் ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதற்கு, 2.6 லட்சம் கோடி முதலீடு செய்யப்படுகிறது.

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள்

ஊழலற்ற அரசாக மக்களுக்கு நாங்கள் சேவை செய்துள்ளோம். ரியல் எஸ்டேட் துறையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வர, ரியல் எஸ்டேட் (கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டு) சட்டம் 2016, மற்றும் பினாமி பரிவர்த்தனை (தடை) சட்டம் 1988 ஆகியவைகள் உதவுகின்றன. அதோடு நாங்கள் நிலக்கரி மற்றும் ஸ்பெக்ட்ரம் உட்பட இயற்கை வளங்கள் மீது வெளிப்படையான ஏலத்தை நடத்தியுள்ளோம்.

தூய்மை

2019-ல் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாடப்படுவதை கருத்தில் கொண்டு, அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஸ்வச் பாரத் மிஷனுடன் உலகின் மிகப்பெரிய மாற்றத்துக்கான இயக்கம் ஒன்றையும் துவக்க உள்ளோம். இந்திய கிராமப்புறங்கள் 98 சதவிகித சுகாதாரத்தைப் பெற்றுள்ளன. 5.45 லட்சம் கிராமங்கள் ’திறந்த பாதுகாப்பு பிரிவாக’ அறிவிக்கப்பட்டுள்ளன. மக்களின் மனநிலையை மாற்றி வெற்றிக்கு வித்திட்ட அற்புதமான திட்டம் இது. ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு அதனை வெற்றியடையச் செய்த 130 கோடி மக்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏழை மற்றும் பின் தங்கிய வகுப்பினர்

நாட்டின் வளங்களில் ஏழைகளுக்குத் தான் முன்னுரிமை உண்டு. SC, ST மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஏற்கனவே இருக்கும் இட ஒதுக்கீட்டை மெயிண்டெயின் செய்வதோடு, பொதுப்பிரிவில் இருக்கும் ஏழைகளுக்கு கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்தில் 10 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களில், சுமார் 25 சதவீதம் கூடுதல் இடங்கள் (சுமார் 2 லட்சம்) வழங்கப்படும். அதனால் மற்ற வர்க்கத்திற்குக் கிடைக்கக்கூடிய அல்லது ஒதுக்கப்பட்ட இடங்கள் குறையாது.

ஏழை, நடுத்தர மக்களுக்கு மலிவான விலையில் உணவு தானியங்களை வழங்குவதற்காக, 2018-19-ம் ஆண்டில் ரூ 1,70,000 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2013-2014-ம் ஆண்டில் செலவிடப்பட்ட 92,000 கோடி ரூபாயை விட ஏறக்குறைய இது இரு மடங்கு. யாரும் பசியால் தூங்கவில்லை என்பதை இங்கே நாங்கள் உறுதியாகக் கூறுகிறோம். 2017-2020-ம் ஆண்டிற்கு எம்.ஜி.ஆர்.ஜி.ஆ.ஜி.ஏ-க்கு ரூ.60,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் தொகை வழங்கப்படும்.

நாட்டின் நகர்ப்புற - கிராமப்புற பிளவுகளை நாங்கள் சரி செய்துள்ளோம். இங்கிருக்கும் ஹாலில் மதிப்பிற்குரிய உறுப்பினர்களில் பலர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். கடந்த காலங்களில் பல முறை நம்முடைய கிராம மக்களுக்கு அளிக்கப்பட்ட வெற்று வாக்குறுதிகளை ஏற்றுக்கொள்வார்கள்”.

இவ்வாறு நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கலின் போது பேசினார் பொறுப்பு நிதியமைச்சர் பியுஷ் கோயல்.

 

Union Budget Central Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment