scorecardresearch

பட்ஜெட் 2021: கோவிட் -19 தடுப்பூசிகளுக்கு ரூ.35,000 கோடி ஒதுக்கீடு

Budget 2021 35000 crores for covid vaccine கடந்த ஆண்டு முதல் நாட்டின் சுகாதார பட்ஜெட் 138 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக சீதாராமன் அறிவித்தார்.

Budget 2021 Nirmala Sitharaman announces 35000 covid vaccine Tamil News
Budget 2021 Nirmala Sitharaman announces 35000 crores covid vaccines

35000 crores for covid vaccine Tamil News : மத்திய பட்ஜெட் 2021-22-ஐ, திங்களன்று நாடாளுமன்றத்தில் முன்வைத்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆத்மனிர்பர் ஸ்வஸ்த் பாரத் யோஜனாவின் ஒரு பகுதியாக நாட்டில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்கு ரூ.35,000 கோடி ஒதுக்கீட்டை அறிவித்தார்.

“மத்திய நிதியுதவி வழங்கும் புதிய திட்டமான பிரதமர் ஆத்மனிர்பர் ஸ்வஸ்த் பாரத் யோஜனா, 6 ஆண்டுகளுக்கான சுமார் 64,180 கோடி ரூபாயுடன் தொடங்கப்படும்” என்று நிதியமைச்சர் சீதாராமன் கூறியுள்ளார். இந்த மொத்த தொகையில், கோவிட் -19 தடுப்பூசிக்கு மட்டும் ரூ.35,000 கோடி செலவிடப்படும் என்றும் சீதாராமன் அறிவித்தார். தேவைப்பட்டால் அதிக செலவு செய்யவும் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் அறிவித்தார்.

தனது தொடக்க உரையில், முன்னோடியில்லாத காலங்களில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டது என்று நிதியமைச்சர் குறிப்பிட்டார். “ஒரு நாடு அல்லது ஒரு நாட்டிற்குள் ஒரு பிராந்தியத்தைப் பாதித்த பேரழிவுகளின் பார்வையில், இந்த பட்ஜெட்டைத் தயாரிப்பது முன்பைப் போன்ற சூழ்நிலைகளில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கோவிட் -19  தாக்கத்தினால் நாம் எதிர்கொண்டிருப்பது தனித்தன்மை வாய்ந்தது” என்று அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயை மனதில் வைத்து, கடந்த ஆண்டு முதல் நாட்டின் சுகாதார பட்ஜெட் 138 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக சீதாராமன் அறிவித்தார். தற்போது இது, ரூ.2,23,846 கோடியாக உள்ளது என்று குறிப்பிட்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Budget news download Indian Express Tamil App.

Web Title: Budget 2021 nirmala sitharaman announces 35000 crores for covid vaccine tamil news

Best of Express