நாட்டின் வரவு செலவு திட்ட அறிக்கையில், மொபைல் போன்கள் மற்றும் சார்ஜர்கள் மீதான அடிப்படை சுங்க வரியை 15% ஆக குறைக்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்மொழிந்துள்ளார். மேலும், மொபைல் போன் மற்றும் தொடர்புடைய தயாரிப்புகள் துறையானது உள்நாட்டு உற்பத்தியில் 3 மடங்கு அதிகரிப்பையும், ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 100 மடங்கு உயர்வையும் கண்டுள்ளது. மொபைல் போன்கள், மொபைல் பிசிபிஏ மற்றும் மொபைல் சார்ஜர்கள் மீதான சுங்க வரியை 15% ஆக குறைக்க அரசு முன்மொழிந்தது.