Lok Sabha Elections 2019, Tamil Nadu: தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடி, மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று (12.4.19) மதுரை வருவதால், மதுரை நகர் பகுதிகளிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தென் தமிழகத்தில் பிரச்சாரம் செய்வதற்க்காக பிரதமர் மோடியும்,ராகுல் காந்தியும் மதுரை விமான நிலையம் வருகின்றனர். பாதுகாப்பு காரணங்களுக்காக பார்வையாளர்கள் மதுரை விமான நிலைய உள்வளாக பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், அதிமுக, பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு மதுரை வருகிறார்.இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகத்தில் நான்கு இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
Election 2019 live updates PM Modi Rahul Gandhi in Madurai, Tamil Nadu live updates:
நாட்டில் உள்ள 20% ஏழைகளை கண்டறிந்து அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.72000 கிடைப்பது உறுதிசெய்யப்படும் மத்திய அரசு அலுவலக பணிகளில் 33% இட ஒதுக்கீடு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்வதை உறுதி செய்வோம் கடந்த 5 ஆண்டுகளாக நரேந்திர மோடி இளைஞர்களை ஏமாற்றி வந்தார் . ட் தேர்வு தேவையா? தேவையில்லையா என்பதை மாநிலங்கள் முடிவு செய்ய தேர்தல் அறிக்கையில் உறுதியளித்திருக்கிறோம் மக்களின் குரலை கேட்கிறோம்; கருத்துப் பரிமாற்றங்களை கேட்கிறோம்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு ரூ 72 ஆயிரம், அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் . அனிதாவுக்கு ஏற்பட்ட நிலைமை மற்றொருவருக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். நாங்கள் தமிழ் மொழியையும், தமிழ் மக்களையும் மதிக்கிறோம் . காங்கிரஸ். தேர்தல் அறிக்கை மூடிய அறையில் தயாரிக்கப்பட்டது அல்ல, பல்லாயிரக்கணக்கான மக்களின் கருத்துக்களை கேட்ட பிறகே தயாரிக்கப்பட்டது” என்றார்.
சேலத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “ தமிழ்நாடு நாக்பூரில் இருந்து இயக்கப்பட வேண்டும் என்று பாஜகவினர் சொல்கிறார்கள். தமிழ்நாடு தமிழர்களால் ஆளப்பட வேண்டும். கருணாநிதி என்பவர் சாதாரண மனிதர் அல்ல; தமிழர்களின் ஓங்கி ஒலித்த குரலாக இருந்தார் தமிழக அரசு கருணாநிதியை அவமானப்படுத்தியதன் மூலம், தமிழர்களையே அவமானப்படுத்தியதாக எண்ணுகிறேன்.
நீட் தேர்வு தேவையா? தேவையில்லையா என்பதை மாநிலங்கள் முடிவு செய்ய தேர்தல் அறிக்கையில் உறுதியளித்திருக்கிறோம் மக்களின் குரலை கேட்கிறோம்; கருத்துப் பரிமாற்றங்களை கேட்கிறோம். விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு ஆதரவு சொல்லக்கூட பிரதமருக்கு மனமில்லை விவசாயிகளை அழைத்து ஏன் போராடுகிறீர்கள் என்று கேட்பதற்குகூட பிரதமருக்கு நேரமில்லை பிரதமர் மோடி, ஏழைகளோடு அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படத்தை கூட பார்த்திருக்க முடியாது” என்றார்.
#MKStalin Speech https://t.co/JWwNnTE1Pd
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) 12 April 2019
ஸ்டாலின் பேசியதாவது, 'ஏழைத் தாயின் மகனின் ஆட்சியில், விஜய் மல்லையா, நிரவ் மோடி கோடி கோடியாக கொள்ளையடித்து செல்கின்றனர் பிரதமராக இருக்க கூடிய மோடி காவலாளி அல்ல களவாணி. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோ; பாஜகவின் தேர்தல் அறிக்கை ஜீரோ திராவிட இயக்கத்தின் எண்ணங்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பிரதிபலிக்கப்பட்டிருக்கிறது. பாஜக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு, வேலைவாய்ப்பு குறித்து ஒரு வரியாவது இருக்கிறதா?மத்திய பாஜக ஆட்சி 5 ஆண்டுகளில் சாதனை என்று ஏதாவது செய்திருந்தால் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கலாமே? ” என்றார்
அதிமுகவை கட்டுப்படுத்துவது போல மக்களை கட்டுப்படுத்த நினைக்கிறார் மோடி. -ஆனால் அவரால் தமிழக மக்களை கட்டுப்படுத்தவே முடியாது . தமிழக மக்களை யாராலும், எப்போதும் கட்டுப்படுத்த முடியாது . யாரும், எங்கிருந்தும் தமிழர்களை கட்டுப்படுத்த முடியாது
தமிழர்கள் நினைத்தால் தான் தமிழ்நாட்டை கட்டுப்படுத்த முடியும் .தமிழகம் தமிழரால் ஆளப்படும், தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் வருவார்.. காலியாக இருக்கும் லட்சக்கணக்கான மத்திய அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்.மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்குவோம் ”என்றார்.
கிருஷ்ணகிரியில் ராகுல் காந்தி பேசியதாவது, “தமிழக மக்களின் குரல் மத்தியில் ஒலிக்க வேண்டும். வறுமைக்கு எதிராக 'சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' நடத்த வேண்டும் என நான் விரும்புகிறேன். இந்தியா பல்வேறு மாநிலங்கள், கலாச்சாரங்களால் உருவானது. நாட்டில் ஏழ்மையை ஒழிக்க அதிரடி திட்டங்களை கொண்டுவர எண்ணி உள்ளேன், அதுதான் ஆண்டுக்கு ரூ.72,000 திட்டம் . தமிழக மக்களை அன்பால் தான் வெல்ல முடியும், வெறுப்பு அரசியலால் வெல்ல முடியாது.
விவசாயிகள் போராட்டம் நடத்தும்போது பிரதமர் மோடி ஒருவார்த்தைக்கூட சொல்லவில்லை. திமுக, காங்கிரஸ், கூட்டணி கட்சிகள் எல்லாம் அதனால்தான் மோடியை எதிர்க்கிறோம். அவருக்கு நாட்டின் பன்முகத்தன்மை புரியவில்லை.இந்தியா பல பன்முகத்தன்மை கொண்ட நாடு . இங்கு பல மொழி, மதம், கலாச்சாரம் இருக்கிறது . பல வேறுபாடுகள் சேர்ந்தது தான் இந்தியா. அதனால்தான் தமிழகத்தின் கலாச்சாரம் முக்கியத்துவம் பெறுகிறது . தமிழர்களின் குரலை புறக்கணித்து வருகிறார்கள் - தமிழர்களின் குரலை புறக்கணிப்பது சரியான இந்தியாவாக இருக்க முடியாது .
#RahulGandhi Speech https://t.co/KM0TgPmFRH
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) 12 April 2019
ஸ்டெர்லைட் தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முற்றிலும்அனுமதி மறுத்துள்ளது உச்சநீதிமன்றம். ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரிய வேதாந்தா நிறுவனத்தின் வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை மற்றும் நாமக்கல்லில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சிஎஸ்கே கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு. சென்னையில் 2 பைனாசிரியர் வீடுகள் உட்பட 11 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராகுல் காந்தியின் பிரச்சாரத்திற்காக தேனி அன்னஞ்சி சாலையில் பிரம்மாண்ட பிரச்சார மேடை அமைக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக பிரச்சார மேடை சரிந்து விழுந்தது. இதனை சரிசெய்யும் பணியில் தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.
இன்று காலை கிருஷ்ணகிரியில் பிரச்சாரம் செய்யும் ராகுல் காந்தி அதன் பின்னர் சேலத்தில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு பிற்பகல் 3.30 மணி அளவில் மதுரை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் தேனி செல்லும் ராகுல் காந்தி அங்கு காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.
அதன்பின்னர் அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டரில் மதுரை செல்லும் ராகுல் காந்தி, மண்டேலா நகரில நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.இதில் மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன், விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். பின்னர் மதுரையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறா
கொச்சியில் இருந்து பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு விமானம் மூலம் இன்று இரவு 9 மணிக்கு மதுரை வருகிறார். பசுமலையில் உள்ள தாஜ் ஓட்டலில் தங்கும் அவர், நாளை காலை ஹெலிகாப்டர் மூலம் 11மணிக்கு தேனி செல்கிறார்.அங்கு ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் (தேனி வேட்பாளர்) மற்றும் மதுரை வேட்பாளர் ராஜ்சத்யன், திண்டுக்கல் தொகுதி பாமக வேட்பாளர் ஜோதி முத்து ஆகியோரை ஆதரித்து மோடி பிரச்சாரம் செய்கிறார். இந்த பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
இதன் பின்னர் மோடி, ராமநாதபுரம் செல்கிறார். அங்கு சிவகங்கை பாஜக வேட்பாளர் எச்.ராஜா, ராமநாதபுரம் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மதுரை வரும் மோடி, அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
2019 Lok Sabha elections, Tamil Nadu LIVE UPDATES:
இரு பெரும் தலைவர்களும், மதுரைக்கு வருவதால், இங்கு உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையம், பசுமலை ஓட்டல் உள்பட பிரதமர் வந்து செல்லும் இடங்கள், ராகுல் வந்து செல்லும் மண்டேலா உள்ளிட்ட பகுதிகளில் வரலாறு காணாத அளவுக்கு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights