Nirmala sitharaman announcements on income tax exemption limit at india budget 2019: தனிநபர் வருமானவரி வரம்பில் மாற்றம் எதுவும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை.
நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 2-வது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது. ஏற்கனவே கடந்த பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை பியூஸ் கோயல் தாக்கல் செய்தார். அதன் தொடர்ச்சியாக முழு பட்ஜெட்டை இன்று (ஜூலை 5) நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
1970-71 காலகட்டத்தில் பிரதமர் இந்திரா காந்தி, நிதி இலாகாவை கூடுதலாக தன் வசம் வைத்திருந்தார். அவருக்கு பிறகு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் பெண் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தான். முழுநேர நிதி அமைச்சராக பட்ஜெட் தாக்கல் செய்யும் முதல் பெண்மணி நிர்மலா சீதாராமன்.
கடந்த பிப்ரவரியில் சமர்பிக்கப்பட்ட நிதி நிலை அறிக்கையில் தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ 5 லட்சமாக உயர்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் அந்த பலன்கள் முழுமையாக கிடைக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது. எனவே மாதச் சம்பளக்காரர்களின் எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது.
2019-2020ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், தனிநபர் வருமானவரி வரம்பில் மாற்றம் ஏதும் செய்யப்பட்டவில்லை. ஆண்டிற்கு ரூ.5 லட்சத்திற்கு கீழ் வருமானம் உள்ளவர்களுக்கு, வருமானவரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக, கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த நடைமுறை, தற்போதும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Budget News by following us on Twitter and Facebook
Web Title:India budget 2019 tax exemption nirmala sitharaman
பல லட்சம் பூக்கள் ஒன்றாக பூத்ததே… சீரியல் நடிகைக்கு ஃப்ரண்ட்ஸ் கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ்
மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு, ஆறிலும் உதயசூரியன் சின்னம்
CBSE 10th Exam: கடைசிநேர படிப்புக்கு உதவும் 10 டிப்ஸ்; 90% மதிப்பெண் குவிக்கும் வாய்ப்பு
தனுஷ் பக்கத்தில் நிற்கும் துறுதுறு சிறுமி: இந்த பிக் பாஸ் பிரபலம் அடையாளம் தெரிகிறதா?