பட்ஜெட் குழப்பம் தீர்ந்தது: பிப்ரவரி 1 இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல்!

Modi Govt will Present Interim Budget on Feb 1 : எப்போதும் போல, இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல்

Interim Budget 2019: வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யபடும் என்று மத்திய நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும், பியூஷ் கோயல் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் அதே நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கான நாளும் நெருங்கிவிட்டது. வரும் பிப்ரவரி 1ம் தேதி மத்திய அரசு தனது கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது.

நான்கரை வருட மோடி ஆட்சி முடிவடைந்துள்ள நிலையில் கடைசி 5 மாதங்களுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டியது  நாள் நெருங்கி விட்டது. வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள இந்த பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு இருமடங்காக உள்ளது.

Not Full Fledged Budget but Interim Budget to Present on Feb 1 : இடைக்கால பட்ஜெட் மட்டுமே!

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும் ஆண்டுகளில், அப்போது, ஆட்சியிலிருக்கும் அரசு, தனது கடைசி 5 மாத ஆட்சிக்காலத்திற்கான, இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே தாக்கல் செய்யும். அதில், எந்த புதிய திட்டங்களோ, புதிய அறிவிப்புகளோ இடம்பெறாது. இந்தச்சூழலில், தற்போதைய மத்திய பாஜக அரசு, முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யப்போவதாக செய்திகள் வெளியாகின.

இதற்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் போர்கொடி  தூக்கியது.மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவருவதால், பொறுப்பு நிதி அமைச்சர் பியூஸ் கோயல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பியூஸ் கோயல் பட்ஜெட் குறித்த குழப்பத்தை தீர்த்து வைத்தார். முழு பட்ஜெட் தாக்கலாக உள்ளதாக வெளியான செய்திகளை திட்டவட்டமாக மறுத்த அவர், பிப்ரவரி 1 ஆம் தேதி, எப்போதும் போல, இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும் என்றார்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Budget News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close