Advertisment

Tamil Nadu Budget 2019 Highlights: அப்துல் கலாம் பெயரில் அரசுக் கல்லூரி, கஜா புயல் நிவாரண தொகை அறிவிப்பு

Deputy CM O.Panneerselvam Submitted tn budget 2019: சட்டமன்றத்தில் நிதி அமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tn budget 2019, tamil nadu budget, தமிழ்நாடு பட்ஜெட் 2019 முக்கிய அம்சங்கள்

tn budget 2019, tamil nadu budget, தமிழ்நாடு பட்ஜெட் 2019 முக்கிய அம்சங்கள்

Highlights Of tamil nadu budget 2019 Submitted in TN Assembly: தமிழ்நாடு அரசின் 2019-2020 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று (பிப்ரவரி 8) சட்டமன்றத்தில் நிதி அமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:

Advertisment

* விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்

* தமிழகத்தில் தனிநபர் வருமானம் ரூ.1,42,267 ஆக உயர்வு

* மக்கள் பங்களிப்புடன் ஏரிகளை புணரமைக்க ரூ.300 கோடி

* தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.1 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு

* புதுமை வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு

* நடப்பாண்டில் வரி வருவாய் 14 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு

Read More: Tamil Nadu Budget 2019 LIVE UPDATES : தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறும்

* நடப்பாண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.14,315 கோடி

* நகராட்சித்துறை, குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.18,700 கோடி ஒதுக்கீடு

* 2018-19-ல் தமிழக அரசு வாங்கிய கடன் 44,066.82 கோடி

* தமிழக அரசின் கடன் ரூ.3 லட்சத்து 97 ஆயிரத்து 495 கோடியாக உயர்வு

tamil nadu budget 2019 highlights, தமிழ்நாடு பட்ஜெட் 2019 முக்கிய அம்சங்கள் Tamil Nadu Budget 2019 Highlights: அரசு உழியர்கள் சம்பளம், மற்றும் ஓய்வூதியத்துக்கு ரூ.85,026 கோடி ஒதுக்கீடு

* 2019-20-ல் தமிழக அரசு ரூ.43,000 கோடி கடன் வாங்க திட்டம்

* கடந்த ஆண்டை விட தமிழக அரசின் கடன் இந்த ஆண்டு 42 ஆயிரம் கோடி அதிகம்

* சென்னையில் ஆற்றோரம் வசிப்போருக்கு 38,000 வீடுகள் கட்ட திட்டம்

* உலக வங்கி உதவியுடன் 4,647 கோடி ரூபாயில் வீடுகள் கட்டப்படும்

* மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கடன் ரூ.22,815 கோடி

tamil nadu budget 2019 highlights, தமிழ்நாடு பட்ஜெட் 2019 முக்கிய அம்சங்கள் Tamil Nadu Budget 2019 Highlights: விவசாயிகள் மற்றும் இதர மின் நுகர்வோருக்கு மின்மானியம் வழங்க ரூ.8,118 கோடி ஒதுக்கீடு

* அரசின் நிதி பற்றாக்குறை 3 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது

* ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் பெயரில் அரசு கலை, அறிவியல் கல்லூரி கட்டப்படும்

* பள்ளி கல்வித்துறைக்கு ரூ.28,757 கோடி ஒதுக்கீடு

* கஜா புயல் நிவாரணமாக ரூ.2,361.41 கோடி வழங்கப்பட்டு்ளது

* ஜெர்மன் வங்கி உதவியுடன் 2,000 பேட்டரி பேருந்துகள் வாங்கி இயக்கப்படும்

* சென்னை, கோயம்புத்தூர், மதுரையில் முதல்கட்டமாக 500 பேருந்துகள்

* சென்னை மெட்ரோ ரயில் மாதவரம் - கோயம்பேடு - சோழிங்கநல்லூர் திட்டத்திற்கு ஜப்பான் நிதியுதவி

* மதுரை மாவட்டம் திருமங்கலத்தை தலைமையாக கொண்டு புதிய வருவாய் கோட்டம்

* கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் விரைவில் உருவாக்கப்படும்

* ரூ.2,000 கோடியில் சென்னையில் வாகன நிறுத்த மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும்

* அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு

* ரூ.1,125 கோடியில் தேனி, சேலம், ஈரோட்டில் 250 மெகாவாட் மிதக்கும் சூரிய திட்டம்

* ரூ.2,350 கோடியில் 500 மெகாவாட் கடலாடி சூரிய பூங்கா திட்டம்

tamil nadu budget 2019 highlights, தமிழ்நாடு பட்ஜெட் 2019 முக்கிய அம்சங்கள் Tamil Nadu Budget 2019 Highlights: முதல் முதல்முறை பட்டதாரி மாணவ, மாணவியருக்கு கல்வி கட்டணம் வழங்க ரூ.460 கோடி ஒதுக்கீடு

* முதியோர் உதவித்தொகை, இலவச வேட்டி, வேலை உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு ரூ.3,958 கோடி ஒதுக்கீடு

* ரூ.284 கோடி மதிப்பில் வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்

* ஸ்ரீபெரும்புதூர் ஒரத்தூரில் அடையாறு உபநதியில் நீர்த்தேக்கம் அமைக்கப்படும்

* குறிஞ்சிப்பாடி வட்டத்தில் பரவனாற்று படுகை மறு சீரமைக்கப்படும்

* சிதம்பரம் வட்டம் பேரம்பட்டு அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளத்தடுப்பு நீரொழுங்கி கட்டப்படும்

* பிச்சாவரம் அருகே உப்பனாற்றின் குறுக்கே நீரொழுங்கி அமைக்கப்படும்

* நில ஆதாரங்களை முறையாக திறம்பட பயன்படுத்த மாநில நலப்பயன்பாட்டு கொள்கை வடிவமைக்கப்படும்

* ஒன்றரை லட்சம் குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா

* தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்துக்கு ரூ.349.4 கோடி ஒதுக்கீடு

* வீட்டு வசதி, நகர்ப்புற மேம்பாட்டுத்துறைக்கு ரூ.6,265.5 கோடி ஒதுக்கீடு

* ஊரக குறுந்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ.172 கோடி ஒதுக்கீடு

* வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு மொத்தம் ரூ.1,031.5 கோடி ஒதுக்கீடு

* 2019-20-ம் ஆண்டில் சாலை மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.1,142 கோடி ஒதுக்கீடு

* தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் 7,896-ல் இருந்து 5,198 ஆக குறைப்பு

* 2019-20-ம் நிதியாண்டில் விவசாயிகளுக்கு 2,000 சூரிய பம்ப் செட்டுகள் வழங்கப்படும்

* ரயில்வே மேம்பால பணிகளுக்கு வரும் ஆண்டில் ரூ.726.6 கோடி ஒதுக்கீடு

* 2019-20-ம் ஆண்டுகளுக்கு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு ரூ.13,605 கோடி ஒதுக்கீடு

* பள்ளி கல்வித்துறைக்கு 2019-20-ம் ஆண்டில் ரூ.28,757.62 கோடி ஒதுக்கீடு

* தொடக்கநிலை வகுப்புகளில் நிகர மாணவர் சேர்க்கை விகிதம் 99.8 ஆக உயர்வு

* பள்ளி செல்லா குழந்தைகளின் எண்ணிக்கை 33,519 ஆக குறைந்துள்ளது

* இலவச பாடப்புத்தகங்கள், காலணிகள், புத்தகப் பைகள் வழங்க ரூ.1,657 கோடி ஒதுக்கீடு

* நபார்டு உதவியுடன் பள்ளிகளில் வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் கட்ட ரூ.381 கோடி ஒதுக்கீடு

* ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்திற்கு ரூ.2,791 கோடி ஒதுக்கீடு

* முதல் முதல்முறையாக பட்டதாரி மாணவ, மாணவியருக்கு கல்வி கட்டணம் வழங்க ரூ.460 கோடி ஒதுக்கீடு

* மத்திய அரசின் திட்டங்களில் நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்துவிட்டது. நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்ததால் மாநில அரசுக்கு நிதிச்சுமை அதிகரிப்பு

* சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 9,975 பேர் பணியமர்த்தப்படுவர்

* வேளாண்துறைக்கு ரூ.10,550 கோடி நிதி ஒதுக்கப்படும்

* பயிர்க்கடன் மீதான வட்டி தள்ளுபடிக்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு

* கால்நடை பராமரிப்பு துறைக்கு ரூ.1,252 கோடி ஒதுக்கீடு

* பால் வளத்துறைக்கு ரூ.258 கோடி ஒதுக்கீடு

* மீனவளத்துறைக்கு ரூ.928 கோடி ஒதுக்கீடு

* உணவு மானியத்துக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீடு

* ஊரக வளர்ச்சி துறைக்கு ரூ.18,273 கோடி ஒதுக்கீடு

* 20,000 பசுமை வீடுகள் கட்டுவதற்கு ரூ.420 கோடி ஒதுக்கீடு

* கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, கே.பரமத்தியில் 282 குடியிருப்புகளுக்கு குடிநீர் திட்டம்

* பாசன மேலாண்மை நவீனமயமாக்கல் திட்டத்துக்கு ரூ.235 கோடி ஒதுக்கீடு

* நீர் ஆதார அமைப்புகளின் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.811.6 கோடி ஒதுக்கீடு

* 2019-20-ம் ஆண்டு பட்ஜெட்டில் பாசனத்துறைக்கு ரூ.5,984 கோடி ஒதுக்கீடு

* கிராமங்களில் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த ரூ.1,200 கோடி ஒதுக்கீடு

* 2019-20-ம் ஆண்டில் 1.97 லட்சம் வீடுகள் கட்ட பட்ஜெட்டில் ரூ.266.16 கோடி ஒதுக்கீடு

* 1986 கி.மீ. பஞ்சாயத்து சாலைகள் ரூ.1,142 கோடியில் மேம்படுத்தப்படும்

* அண்ணா பல்கலைகழகத்தின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி

* வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு விரைவில் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்

* தூய்மை இந்தியா திட்டத்திற்காக ரூ 400 கோடி ஒதுக்கீடு

* மத்திய , மாநில அரசு பங்களிப்புடன் கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று வீடு கட்டித்தரப்படும்.

* காவிரி பாசன பகுதிகளில் பருவ நிலை மாற்ற தழுவல் திட்டத்தை ஆசிய வளர்ச்சி வங்கியின் கடன் உதவியுடன் 1560 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு செயல்படுத்தி வருகிறது

* கிராமப்புற ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடுகளை கட்ட 2276.14 கோடி மாநில அரசின் பங்காக ஒதுக்கீடு

* சென்னை தவிர்த்து இதர நகரங்களில் வீட்டு வசதியை உருவாக்க 5000 கோடி மதிப்பில் ஆசிய வங்கிக் கடன் கோரப்பட்டுள்ளது

* ஆழ்கடல் மீனவர்களின் தொலைத் தொடர்பு வசதிக்காக 18 உயர்மட்ட மின்கோபுரங்கள் அமைக்கப்படும்

* 80 ஆழ்கடல் மீன்பிடி குழுக்களுக்கு நவீன தொடர்பு கருவிகள் வழங்கப்படும்

* ஏழை மக்கள் எளிதில் வாங்கும் வகையில் விரைவில் குடியிருப்பு கொள்கை அறிவிக்கப்படும்

* மாநில நில பயன்பாட்டு கொள்கை விரைவில் உருவாக்கப்படும். முதல்கட்டமாக கோவை, மதுரை, மண்டலங்களில் அமல்படுத்தப்படும்

* அண்ணாமலை பல்கலை கழகத்துக்கு ரூ.250 கோடி வழங்கப்படும்

* மருத்து காப்பீட்டு திட்டத்துக்கு ரூ.1,363 கோடி ஒதுக்கீடு

* முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்துக்கு ரூ.959 கோடி ஒதுக்கீடு

* அனைவருக்கு கல்வித்திட்டம் இடைநிலை கல்வி இயக்கத்துக்கு மத்திய அரசு ரூ.3,201 கோடி வழங்கவில்லை என்று பட்ஜெட்டில் ஓ.பி.எஸ். புகார்

* தமிழக சுகாதாரத்துறைக்கு ரூ.12,563 கோடி ஒதுக்கீடு

* மாணவ, மாணவிகள் பயண கட்டண சலுகைக்காக ரூ.766 கோடி ஒதுக்கீடு

* போக்குவரத்துறைக்கு ரூ.1,298 கோடி ஒதுக்கீடு

* 2023-க்குள் சூரிய சக்தி மூலம் 9,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயம்

* விவசாயிகள் மற்றும் இதர மின் நுகர்வோருக்கு மின்மானியம் வழங்க ரூ.8,118 கோடி ஒதுக்கீடு

* தமிழ்நாடு சுகாதாரத்துறை சீரமைப்பு என்ற புதிய திட்டத்திற்கு ரூ.2,686 கோடி ஒதுக்கீடு

*மானிய விலை இருசக்கர வாகனத் திட்டத்திற்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு

*தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.54.76 கோடி ஒதுக்கீடு*

*கைத்தறி உதவி திட்டத்திற்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு*

*பல்வேறு திருமண நிதியுதவி திட்டங்களுக்காக 726.32 கோடி ஒதுக்கீடு*

*நெசவாளர் கூட்டுறவு சங்க மானியங்களுக்காக 150 கோடி ஒதுக்கீடு

*கைத்தறி மற்றும் துணி நூல் துறைக்கு 1170.56 கோடி ஒதுக்கீடு

*அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க 148.83 கோடி ஒதுக்கீடு

*சுற்றுலா திட்டங்களை மேம்படுத்த ரூ 100 கோடி ஒதுக்கீடு

*ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் ரூ 43.39 கோடியில் திருக்கோயில் திருப்பணிகள்

*முதலீட்டாளர் மாநாடு மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு ரூ.32,206 கோடி ஒதுக்கீடு

*திருமுடிவாக்கம், ஆலத்தூர் தொழிற்பேட்டைகள் விரிவுபடுத்தப்படும்

*குறு, சிறு நடுத்தர தொழிற்துறைக்கு ரூ.476 கோடி ஒதுக்கீடு

*தகவல் தொழில்நுட்ப துறைக்கு ரூ.141 கோடி ஒதுக்கீடு

*தொல்லியல் துறைக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு

*சத்துணவு திட்டத்துக்கு வரும் ஆண்டில் ரூ.1,772.12 கோடி ஓதுக்கீடு

*சமூக நலத்துறைக்கு மொத்தமாக ரூ.5,305.5 கோடி ஒதுக்கீடு

*மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு பட்ஜெட்டில் ரூ.572.19 கோடி ஒதுக்கீடு

*அரசு உழியர்கள் சம்பளம், மற்றும் ஓய்வூதியத்துக்கு ரூ.85,026 கோடி ஒதுக்கீடு

*12,524 உராட்சிகளில் விளையாட்டு போட்டிகள் நடத்த ரூ.25 கோடி ஒதுக்கீடு

*இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக்கு ரூ.168 கோடி ஒதுக்கீடு

*ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களுக்காக மேலும் 20 விடுதிகள் கட்ட ரூ.40 கோடி

*ஆதி திராவிட, பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்க ரூ.71.01 கோடி

*ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கு பட்ஜெட்டில் ரூ.1,857.13 கோடி நிதி ஒதுக்கீடு

*2019-20ம் நிதியாண்டில் தமிழக அரசின் வருவாய் ரூ.96,177.14 கோடி

*மதுபானங்கள் மீதான ஆயத்தீர்வை வருவாய் ரூ.7,262.33 கோடி

*முத்திரைத்தாள், பத்திரப்பதிவு கட்டணம் மூலம் வருவாய் ரூ.13,122.81 கோடி

*வாகனங்கள் மீதான வரிகள் மூலம் வருவாய் ரூ.6,510 கோடி

*தமிழக அரசின் வரியில்லா வருவாய் ரூ.13,326.9 கோடி

*தமிழக அரசின் வருவாய் வரவு ரூ.1,97,721.17 கோடி

*தமிழக அரசின் வருவாய் செலவினம் ரூ.2,12,035.93 கோடி

*தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.14,314.76 கோடி

பட்ஜெட் தொடர்பான முக்கிய அம்சங்கள் இவைதான்.

 

Budget 2019 O Panneerselvam Supreme Court Tamil Nadu Government Tn Assembly
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment