Advertisment

பட்ஜெட் தாக்கல் செய்யும் முன்பு அல்வா கொடுப்பது ஏன் என்று தெரியுமா ?

Union Budget 2019, Halwa Ceremony : எந்த செயல் செய்வதற்கு முன்பும் ஸ்வீட் எடு கொண்டாடு என்பதற்கும் அல்வாவிற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Union Budget 2019 Halwa ceremony

Union Budget 2019 Halwa ceremony

Union Budget 2019 Halwa Ceremony : ஒவ்வொரு வருடமும் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு டெல்லியில் இருக்கும் நிதி அமைச்சகத்தின் வடக்கு பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி அமைச்சர் அல்வா கிண்டி தருவது வழக்கம். இப்போது மட்டுமல்ல, ஒவ்வொரு வருடமும் பட்ஜெட் தாக்கல் செய்யும் போதும் இதனை பின்பற்றுவது வழக்கம்.

Advertisment

பட்ஜெட் பேப்பர்களை பிரிண்ட்டிங் செய்யும் நிகழ்வுகளில் மிக முக்கியமான ஒன்றாக இந்நிகழ்ச்சி கருதப்படுகிறது.  பட்ஜெட் தயாரிப்பதில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொரு அலுவலகரும், பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் வரை நிதி அமைச்சகத்திலேயே தான் தங்க வேண்டும். தங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் குறிப்பிட்ட தொலைபேசி எண்ணில் இருந்து தன்னுடைய குடும்பத்தினருடம் மட்டும் தான் இவர்கள் பேச வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு 10 நாட்களுக்கு முன்பே (ஜனவரி 20) அல்வாவை கிண்டி, பட்ஜெட் உருவாக்கத்தில் ஈடுபட்டிருந்த அலுவலர்களுக்கு அளித்தார் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி.  இந்த வருடமும் அதே பிப்ரவரி 1ம் தேதியன்று, நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது நிதி அமைச்சகம்.

Union Budget 2019 Halwa Ceremony - எதற்காக அல்வா தருகின்றார்கள் ?

சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டினை குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரிண்ட் செய்து தாக்கல் செய்யப்பட்டது.

1950ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே பட்ஜெட் தகவல்கள் பரவத் தொடங்கியது. இதனை முற்றிலும் தடுப்பதற்காக தற்போது மத்திய அரசு செயலகத்தில் இயங்கி வரும் நிதி அமைச்சகத்திலேயே அச்சகம் உருவாக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது.

பட்ஜெட் ப்ரிண்டிங் தொடங்கி தாக்கல் செய்யப்படும் வரை 120 பணியாளர்கள் அங்கேயே தங்கி வேலை பார்த்து வருவார்கள்.

அவர்களுக்கு வெளி உலகத்தினருடனான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிடும். அமைச்சகத்திற்குள் சென்று வீடு திரும்பும் உரிமை நிதி அமைச்சருக்கு மட்டும் தான் உண்டு.

11 நாட்கள் வேலைப்பளுவில் சிக்கித் தவிக்கும் பணியாளர்களை உற்சாகப்படுத்தவே அல்வா தயாரித்து தரப்படுகிறது.

எந்த செயல் செய்வதற்கு முன்பும் ஸ்வீட் எடு கொண்டாடு என்பதற்கும் அல்வாவிற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.

Arun Jaitley
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment