India Union Budget 2019 Live Updates : இந்தியாவின் 2019-20ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு சுதேசி என்ற வார்த்தையை அறிந்தார்கள். இன்றோ மேக்-இன் இந்தியா அந்த பணியை செய்து வருகிறது என்று கடந்த ஐந்தாண்டுகளில் பாஜக செய்த சாதனைககளை மேற்கொள் காட்டி பேசிவருகிறார்.
Live Budget 2019: Union Budget 2019 Live Coverage
நான்கு மாதம் கழித்து தற்போது முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இரண்டாம் முறையாக ஆட்சியை கைப்பற்றிய பாஜகவின் முதல் நிதிநிலை அறிக்கை தாக்கல் இதுவாகும். இதனை தற்போதைய ஆட்சியின் நிதி அமைச்சராக செயல்பட்டு வரும் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணியில் இருந்து தாக்கல் செய்து வருகிறார். இது அவரது முதல் பட்ஜெட் ஆகும்.
பொருளாதார ஆய்வறிக்கை (Economic Survey)
எப்போதுமே மத்திய நிதிநிலை அறிக்கையை சமர்பிக்கும் முன்பு பொருளாதார ஆய்வறிக்கையை (Economic Survey) நாடாளுமன்றத்தில் சமர்பிப்பது வழக்கம். நேற்று நிர்மலா சீதாராமன் அந்த அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 7%மாக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த லைவ் அப்டேட்டினை ஆங்கிலத்தில் பெற : Budget 2019 LIVE Updates
Live Blog
India Union Budget 2019 Live Updates : மத்திய அரசின் இந்த நிதி அறிக்கை தொடர்பான முழுமையான தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்
இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி நவீன இந்தியாவை படைக்கும் சிறப்பான பட்ஜெட்.பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும், உள்கட்டமைப்பு வசதிகளை மேலும் வலுப்படுத்தும் பட்ஜெட். புறநானூற்று பாடலை மேற்கோள் காட்டியது தமிழ் இனத்திற்கு கிடைத்த மாபெரும் கவுரவம் என துணை முதல்வர் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.
"மத்திய பட்ஜெட், ஏழை எளிய மக்களுக்கு கசப்பையும் கார்ப்பரேட்டுகளுக்கு இனிப்பையும் வழங்கியிருக்கிறது. மாநிலங்களின் உணர்வுகளும் எதிர்பார்ப்புகளும் பட்ஜெட்டில் பிரதிபலிக்கவில்லை. அலங்கார வார்த்தைகளும் அறிவிப்புகளும் நிறைந்த அணிவகுப்பாக பட்ஜெட் காட்சியளிக்கிறது" என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பட்ஜெட் குறித்து விமர்சித்துள்ளார்.
பட்ஜெட் குறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனைத்துத் துறைகளிலும் நாடு மேலும் வளர்ச்சி பெற உகந்த தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட். முன்னேற்றத்திற்கான கொள்கைகள், திட்டங்களோடு தாக்கல் செய்த பட்ஜெட்டை வரவேற்கிறேன். பிசிராந்தையார் பாடிய புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டி தமிழுக்கு பெருமை சேர்த்தமைக்கு நன்றி.
பல்வேறு வேளாண் திட்டங்களுக்கு கணிசமான நிதி ஒதுக்க வேண்டும். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-வது கட்டப் பணிகளுக்கான ஒப்புதலை விரைவுபடுத்த வேண்டும். கோவை, மதுரை மாநகராட்சியில் புதிய மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். சென்னை புறநகர் ரெயில்வே சேவைகளை மேம்படுத்த வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
எதுவும் புதியது இல்லை. ஏற்கனவே கூறியதைத்தான் திரும்பத் திரும்ப கூறியுள்ளனர். புதிய இந்தியா குறித்து பேசுகிறார்கள் ஆனால் வாக்குறுதிகள் எல்லாமே பழைய கள் தான். ஆனால் அது அடைக்கப்பட்டிருக்கும் போத்தல் தான் புதிது என்று கூறிய அவர், வேலை வாய்ப்புகளை உருவாக்கும் எந்த திட்டங்கள் குறித்தும் அவர்கள் அறிவிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
மோடியின் கனவுகளை நினைவாக்கும் வகையில் அமைந்துள்ளது இந்த பட்ஜெட் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். ஏழைகளின் வாழ்வையும், நடுத்தர வர்க்கத்தினரின் உழைப்பையும் மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார்.
The #BudgetForNewIndia clearly reflects PM @narendramodi’s vision for India’s development, where the farmers prosper, poor lead a life of dignity, the middle class get the due for their hardwork and Indian enterprise gets a boost.
This is truly a budget of hope and empowerment.
— Amit Shah (@AmitShah) 5 July 2019
இந்தியாவின் இந்த ஆண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் குறித்து நரேந்திர மக்களிடம் உரையாடினார். இந்தியாவில் வசிக்கும் அனைவரும் சரியான பாதையில் போய் கொண்டிருப்பதையே உணர்த்துகிறது இந்த பட்ஜெட் என்றும் 21ம் நூற்றாண்டின் தேவைகளை பூர்த்தி செய்யும் பட்ஜெட் இது என்றும் நரேந்திர மோடி பேச்சு.
My thoughts on the #BudgetForNewIndia. Watch. https://t.co/cJYfirRHfa
— Narendra Modi (@narendramodi) 5 July 2019
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. வணிகத்துறையில் பணப்புழக்கத்தை குறைக்கும் வகையில், வங்கிகளில் இருந்து 1 கோடி ரூபாயை ரொக்கமாக எடுத்தால் 2% பிடித்தம் செய்யப்படும். BHIM, UPI, Aadhaar Pay, NEFT, RTGS மூலமாக இணைய சேவைகளை பயன்படுத்தி பணம் பரிமாற்றத்தை மேற்கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது கன்னி பொது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். பெரும்பான்மையுடன் இரண்டாம் முறையாக ஆட்சியை பிடித்திருக்கும் மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் பட்ஜெட்டும் இதுவேயாகும். To read more
இதற்கு முன்பு 250 கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 25% வரி விதிப்பு நிலுவையில் இருந்தது. கார்ப்பரேட் விகிதத்தின் உச்ச அளவு, 250 கோடி ரூபாயில் இருந்து 400 கோடி ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இதன் கீழ் 99.3% நிறுவனங்கள் 25% வரி கட்ட வேண்டிய நிலை வரும். ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான வரிகள் தளர்த்தப்பட்டுள்ளன.
பாண்டியன் அறிவுடை நம்பிக்கு யானை புகுந்த நிலம் என்று அறிவுரையாக கூறிய பாடலை அவர் மேற்கோள் காட்டி பேசியுள்ளார். ”யானை புக்க புலம்” என்று ஆரம்பித்து ஒரு அரசன் முறை அறிந்து வரி வசூலிக்க வேண்டும். யானைக்கு தேவையான உணவென்பது கொடுத்தால் அது கொஞ்சமாகவே தான் இருக்கும். ஆனால் யானை நிலத்துக்குள் புகுந்தால் அது மொத்த நிலத்தையும் நாசம் செய்து விடும் என்று கூறியுள்ளார்.
காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே,
மாநிறைவு இல்லதும், பன்நாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே,
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே,
கோடி யாத்து, நாடுபெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம்போலத்,
தானும் உண்ணான், உலகமும் கெடுமே - என்ற பாடலின் சில வரிகளை அவர் மேற்கோள் காட்டினார்
சுவாமி விவேகானந்தர் “ ஒரு நாட்டில் பெண்களின் நிலை உயரவில்லை என்றால் அங்கு நாட்டின் நலத்திற்கான வாய்ப்புகளே இல்லை ஒரு பறவை ஒரு சிறகால் பறக்க இயலாது” ” என்று கூறியதை மேற்கோள் காட்டிய அவர் பெண்கள் நலத்திட்டம் குறித்து பேசினார். பெண்களின் நலத்திட்டத்தை மேம்படுத்த கமிட்டி அமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
கற்பிக்கும் முறையை மேம்படுத்த க்யான் ( GYAN) உருவாக்கப்பட்டது. உலக அரங்கில் தலை சிறந்து விளங்கும் ஆராய்ச்சியாளர்கள், அறிவியல் அறிஞர்களை ஒருங்கிணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது GYAN. 5 வருடங்களுக்கு முன்பு வரை சர்வதேச தரம் பெற்ற 200 பல்கலைக்கழகங்களில் ஒன்று கூட இந்தியாவில் இல்லை. ஆனால் தற்போதோ 3 கல்வி நிலையங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. புதிய உலகத்தரம் வாய்ந்த கல்வி நிலையங்கள் அமைக்க 400 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் இந்தியாவில் வருடாந்திர உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை இந்தியாவில் நடத்துவோம் என்று குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு முதலீட்டார்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் FIIs மற்றும் FPIs படிவங்கள் எளிமைப்படுத்தப்படும்.
2018-19 ஆண்டுகளில் இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு மிகவும் அசைக்க முடியதாததாக 6% வரை இருந்தது. வான்வழிப்போக்குவரத்து, ஊடகம், அனிமேசன், காப்பீடு துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டினை வரவேற்பதாக கூறிய அவர் காப்பீட்டு நிறுவனங்களுக்கு 100% அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்படுவதை உறுதி செய்தார்.
ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் சூழ்நிலையும், ஆரோக்கியமும் மேம்பட்டுள்ளது. 9.6 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. 5.6 லட்சம் கிராமங்கள் திறந்த வெளி கழிப்பறைகள் அற்ற நிலையை எட்டியுள்ளன. திடக்கழிவு மேலாண்மை விரிவுப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார். ஊரகப்பகுதிகளில், 95% நகரங்கள் திறந்த வெளி கழிப்பறைகள் அற்ற நிலையை அடைந்துள்ளது என்று கூறிய அவர் 45,000க்கும் மேற்பட்ட பொது கழிவறைகள் இருக்கும் இடங்களை கூகுள் மேப்பில் அப்லோட் செய்திருப்பதாக குறிப்பிட்டார். 1 கோடி இந்தியர்கள் ஸ்வச் பாரத் ஆப்பை டவுன்லோடு செய்திருப்பதாக அறிவித்தார்.
பிரதான் மந்திரை ஆவாஸ் யோஜானா திட்டத்தின் மூலமாக 1.95 கோடி வீடுகள் ஊரக மக்களின் வளர்ச்சிக்காக கட்டித்தரப்படும் என்று அவர் கூறினார். 2015-16 ஆண்டுகளில் வீடுகள் கட்ட 314 நாட்கள் தேவைப்பட்டன. 2017ம் ஆண்டில் அது 114 நாட்களாக குறைந்தது என்று மேற்கோள் காட்டினார் அவர்.
கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு என்று அறிவித்தவர் மகாத்மா காந்தி. அவரின் கனவுகளை நினைவாக்கும் வகையில், அவருடைய 150வது பிறந்தநாளை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. உஜ்வாலா, சௌபாக்கியா திட்டங்கள் மூலமாக அவர்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது. அவர்களால் எளிமையாக சமையல் எரிவாயு, மின்சாரம் ஆகியவற்றை தற்போது பெற்றிட இயல்கிறது என்று கூறிய அவர், 2022ம் ஆண்டுக்குள் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கப்படும் என்று கூறினார்.
கார்கோ மூலமாக நீர்வழி போக்குவரத்து துரிதப்படுத்தப்படும். அதனால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து நெரிசல்கள் குறையும்
Government envisions using rivers for cargo transportation, which will also decongest roads and railways : FM @nsitharaman https://t.co/iK5EWIia1b #BudgetForNewIndia #Budget2019
— PIB India (@PIB_India) 5 July 2019
பாரத் மாலா மற்றும் சாகர் மாலா மூலமாக சாலை போக்குவரத்து மற்றும் நீர்வழி போக்குவரத்துகள் அதிகப்படுத்தப்படும். நீர்வழிப்பாதைகளை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் அறிவித்தார். நீர்வழி, தரைவழி, மற்றும் வான்வழி போக்குவரத்தினை அதிகரித்துள்ளது இந்த அரசு என்று கூறிய நிதி அமைச்சர் கடந்த 5 ஆண்டுகளில் 657 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது என்றும் கூறிப்பிட்டார். தேசிய நெடுஞ்சாலைகள், பிராந்திய விமானநிலையங்கள் ஆகியவற்றை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அவர் உதான் திட்டம் மூலமாக குறைந்த விலையில் விமான சேவைகள் துவங்கப்பட்டது என்பதையும் குறிப்பிட்டார்.
1 ட்ரில்லியன் என்ற பொருளாதாரத்தை அடைய இந்தியா 55 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. ஆனால் வெறும் ஐந்தே ஆண்டுகளில் 1 ட்ரில்லியன் டாலர்களை உயர்த்தியுள்ளோம். இந்திய பொருளாதாரம் வளர ஒவ்வொரு சிறு, குறு, பெரும் உற்பத்தியாளர்கள், தொழிற்சாலைகள் உதவியுள்ளன என்றும் அவர் கூறினார்.
2014ம் ஆண்டில், பாஜக ஆட்சி அமைக்கும் போது, 1.55 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இந்திய பொருளாதாரம் ஐந்தாண்டுகளில் 2.7 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்தது. இன்னும் சில ஆண்டுகளில் அதனை 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்தப்படும் என்றும் அவர் கூறினார்.
தேசத்தை முதல்நிலைப்படுத்திய வாக்காளர்கள் குறித்து பேசி வருகிறார் நிர்மலா சீதாராமன். நிதி ஆயோக், ஜி.எஸ்.டி. கவுன்சில் போன்று 2014 - 2019ம் ஆண்டு காலங்களில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்து அவர் பேசினார்.உணவு பாதுகாப்புத் திட்டத்திற்கு கடந்த 5 ஆண்டுகளில் இருமடங்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அம்மா சாவித்ரி மற்றும் தந்தை நாராயணன் சீதாராமன் தன்னுடைய மகள் தாக்கல் செய்ய இருக்கும் முதல் பட்ஜெட்டினை காண்பதற்காக நாடாளுமன்றம் வந்துள்ளனர்.
#WATCH Delhi: Parents of Finance Minister Nirmala Sitharaman - Savitri and Narayanan Sitharaman - arrive at the Parliament. She will present her maiden Budget at 11 AM in Lok Sabha. #Budget2019 pic.twitter.com/Wp3INz7ifN
— ANI (@ANI) 5 July 2019
பட்ஜெட் தாக்கல் நடைபெறுவதை தொடர்ந்து தற்போது நாடாளுமன்றம் வந்துள்ளார் பிரதமர் மோடி
PM @narendramodi arrives in Parliament for #Budget2019#BudgetForNewIndia pic.twitter.com/MNhZmyp8OA
— Doordarshan News (@DDNewsLive) 5 July 2019
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக் விஜயசிங், நிர்மலா சீதாராமனுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். வேலையில்லா இளைஞர்களை கருத்தில் கொண்டு அவர்கள் கல்வி கற்கும் கோச்சிங் நிறுவனங்களின் ஜி.எஸ்.டி வரியை குறைக்கலாம் என்று அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கேட்டுக் கொண்டார்.
https://t.co/SBQR3AY4wv
Coaching has become a very big Industry now and needs to be protected in the interest of students. I have suggested to Finance Minister to reduce GST in Coaching Institutes to zero to help the unemployed youths.— digvijaya singh (@digvijaya_28) 5 July 2019
நிதிநிலை அறிக்கையை சமர்பிக்க நிதி அமைச்சர் மற்றும் துணை நிலை நிதி அமைச்சர் நாடாளுமன்றம் வந்ததைத் தொடர்ந்து பட்ஜெட் நகல்கள் நாடாளுமன்றம் வந்தடைந்துள்ளன.
Delhi: Copies of #Budget2019 have been brought to the Parliament. Finance Minister Nirmala Sitharaman will present the Budget in Lok Sabha at 11 AM today. pic.twitter.com/Rmj4UJPteC
— ANI (@ANI) 5 July 2019
ஒட்டு மொத்த இந்தியர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த வருடத்திற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்காக நாடாளுமன்றம் வந்தடைந்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அவருடன் துணை நிதியமைச்சர் அனுராக் தாக்கூரும் நாடாளுமன்றத்தை வந்தடைந்துள்ளார். சரியாக 11 மணி அளவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு நிதி அமைச்சரவை, பட்ஜெட் நகல்களை குடியரசு தலைவரிடம் கொடுத்து, அவரை மரியாதை நிமித்தமாக சந்திப்பது வழக்கம். குடியரசு தலைவரை சந்தித்து சிறிது நேரம் உரையாற்றினார் நிர்மலா சீதாராமன்
Rashtrapati Bhavan: As per tradition, Finance Minister Nirmala Sitharaman calls on President Ramnath Kovind before presenting the Union Budget pic.twitter.com/5vOMn9qj2H
— ANI (@ANI) 5 July 2019
எப்போதுமே நம்முடைய பட்ஜெட்கள் அனைத்தும் சூட்கேஸில் தான் எடுத்து வரப்படும். ஆனால் அதற்கு மாறாக இம்முறை லெஜ்ஜரில் வைத்து எடுத்து வரப்பட்டது. இது தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி. சுப்ரமணியன் கூறுகையில் ”இது தான் இந்திய கலாச்சாரம்... ஆங்கிலேய மோகத்தில் இருந்து நாம் வெளியேறிவிட்டோம் என்பதையே காட்டுகிறது” என்று குறிப்பிட்டார்.
பட்ஜெட் தாக்கல் இன்று நடைபெறுவதை தொடர்ந்து ஜூன் 11ம் தேதிக்கு பின்பு சென்செக்ஸ் புள்ளிகளில் பெரும் ஏற்றம். 40 ஆயிரம் புள்ளிகளை தொட்டது. பங்கு வர்த்தகம் இன்று காலையிலேயே ஏற்றத்துடன் துவங்கியுள்ளது. 78.72 புள்ளிகள் அதிகரித்து சென்செக்ஸ் 39, 986 புள்ளிகளாக உள்ளது. நிஃப்டியின் மதிப்பு 37.90 புள்ளிகள் உயர்ந்து 11,984.70 புள்ளிகளாக உள்ளது.
நிதிநிலை அறிக்கையின் நகலை குடியரசு தலைவரிடம் சமர்பித்தார் நிதி அமைச்சர். எப்போதுமே பட்ஜெட்டினை சூட்கேஸில் வைத்து எடுத்துவரும் பழக்கமே நிலவி வந்த நிலையில் தற்போது சிவப்பு நிற கைக்கு அடக்கமான ஃபைலில் நிதிநிலை அறிக்கையினை வைத்துள்ளார் நிர்மலா சீதாராமன்
தேசிய ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்தவர்களின் மொத்த நிதியில் 40% வரையிலான தொகுப்பிற்கு மட்டுமே வரி விலக்கு உண்டு. இதனை உயர்த்தி 60% தொகைக்கு வரி விலக்கு அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொடது நிதி அறிக்கையுடன் ரயில்வே நிதி அறிக்கையும் சேர்த்தே தாக்கல் செய்யப்படுவதால் ரயில் கட்டணம், சரக்கு கட்டணம், முன்பதிவு கட்டணம் போன்றவை குறித்த அறிவிப்புகளும் இன்று வெளியாக கூடும்.
வருமான வரி உச்ச வரம்பும் பாஜக ஆட்சியும்
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 2014ம் ஆண்டு ரூ. 2 லட்சத்தில் இருந்து இரண்டரை இலட்சமாக வருமான வரி உச்சவரம்பு அறிவிக்கப்பட்டது. இடைக்கால பட்ஜெட்டில் இந்த உச்ச வரம்பானது 5 லட்சமாக உயர்த்தப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights