Advertisment

Budget 2019 : மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை: புதிய இந்தியா குறித்து மக்களுக்கு அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது!

Union Budget 2019-20 Live Updates : இந்தியாவின் முதல் பெண் நிதி அமைச்சர் என்ற பெயரை தக்கவைத்து கொண்ட நிர்மலாவின் முதல் நிதி அறிக்கை இதுவாகும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates

India Union Budget 2019 Live Updates : இந்தியாவின் 2019-20ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து  வருகிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு சுதேசி என்ற வார்த்தையை அறிந்தார்கள். இன்றோ மேக்-இன் இந்தியா அந்த பணியை செய்து வருகிறது என்று கடந்த ஐந்தாண்டுகளில் பாஜக செய்த சாதனைககளை மேற்கொள் காட்டி பேசிவருகிறார்.

Advertisment

Live Budget 2019: Union Budget 2019 Live Coverage

நான்கு மாதம் கழித்து தற்போது முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இரண்டாம் முறையாக ஆட்சியை கைப்பற்றிய பாஜகவின் முதல் நிதிநிலை அறிக்கை தாக்கல் இதுவாகும். இதனை தற்போதைய ஆட்சியின் நிதி அமைச்சராக செயல்பட்டு வரும் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணியில் இருந்து தாக்கல் செய்து வருகிறார். இது அவரது முதல் பட்ஜெட் ஆகும்.

பொருளாதார ஆய்வறிக்கை (Economic Survey)

எப்போதுமே மத்திய நிதிநிலை அறிக்கையை சமர்பிக்கும் முன்பு பொருளாதார ஆய்வறிக்கையை (Economic Survey) நாடாளுமன்றத்தில் சமர்பிப்பது வழக்கம். நேற்று நிர்மலா சீதாராமன் அந்த அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 7%மாக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த லைவ் அப்டேட்டினை ஆங்கிலத்தில் பெற : Budget 2019 LIVE Updates

 

Live Blog

India Union Budget 2019 Live Updates : மத்திய அரசின் இந்த நிதி அறிக்கை தொடர்பான முழுமையான தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்



























Highlights

    19:39 (IST)05 Jul 2019

    மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை: டிடிவி தினகரன் கருத்து

    மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை: புதிய இந்தியா குறித்து மக்களுக்கு அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது! என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.publive-image

    19:09 (IST)05 Jul 2019

    'நவீன இந்தியாவை படைக்கும் சிறப்பான பட்ஜெட்' - ஓ.பி.எஸ் புகழாரம்

    இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி நவீன இந்தியாவை படைக்கும் சிறப்பான பட்ஜெட்.பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும், உள்கட்டமைப்பு வசதிகளை மேலும் வலுப்படுத்தும் பட்ஜெட். புறநானூற்று பாடலை மேற்கோள் காட்டியது தமிழ் இனத்திற்கு கிடைத்த மாபெரும் கவுரவம் என துணை முதல்வர் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.

    18:52 (IST)05 Jul 2019

    பேட்டரி வாகனங்களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லை - தமிழிசை

    "பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் பாதிக்காமல் இருக்க பேட்டரி வாகனங்களுக்கு ஊக்கப்படுத்துகிறோம். பேட்டரி வாகனங்களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லை" என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

    18:21 (IST)05 Jul 2019

    எளிய மக்களுக்கு கசப்பு - மு.க.ஸ்டாலின்

    "மத்திய பட்ஜெட், ஏழை எளிய மக்களுக்கு கசப்பையும் கார்ப்பரேட்டுகளுக்கு இனிப்பையும் வழங்கியிருக்கிறது. மாநிலங்களின் உணர்வுகளும் எதிர்பார்ப்புகளும் பட்ஜெட்டில் பிரதிபலிக்கவில்லை. அலங்கார வார்த்தைகளும் அறிவிப்புகளும் நிறைந்த அணிவகுப்பாக பட்ஜெட் காட்சியளிக்கிறது" என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பட்ஜெட் குறித்து விமர்சித்துள்ளார். 

     

    17:49 (IST)05 Jul 2019

    தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட் - முதல்வர் பழனிசாமி

    பட்ஜெட் குறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனைத்துத் துறைகளிலும் நாடு மேலும் வளர்ச்சி பெற உகந்த தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட். முன்னேற்றத்திற்கான கொள்கைகள், திட்டங்களோடு தாக்கல் செய்த பட்ஜெட்டை வரவேற்கிறேன். பிசிராந்தையார் பாடிய புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டி தமிழுக்கு பெருமை சேர்த்தமைக்கு நன்றி.

    பல்வேறு வேளாண் திட்டங்களுக்கு கணிசமான நிதி ஒதுக்க வேண்டும். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-வது கட்டப் பணிகளுக்கான ஒப்புதலை விரைவுபடுத்த வேண்டும். கோவை, மதுரை மாநகராட்சியில் புதிய மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். சென்னை புறநகர் ரெயில்வே சேவைகளை மேம்படுத்த வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

    17:09 (IST)05 Jul 2019

    பாஜக அரசின் பட்ஜெட் தெளிவற்ற பட்ஜெட் - ப.சிதம்பரம்

    மத்திய பாஜக அரசின் பட்ஜெட் தெளிவற்ற பட்ஜெட்டாக உள்ளது. புள்ளி விவரங்களில் எந்த வெளிப்படைத் தன்மையையும் இந்த பட்ஜெட் கடைபிடிக்கவில்லை என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    16:24 (IST)05 Jul 2019

    இது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான பட்ஜெட் - டி.ராஜா

    மத்திய பட்ஜெட், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது; மக்களுக்கு நன்மை அளிக்கக்கூடிய வகையில் அமையவில்லை என் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

    14:21 (IST)05 Jul 2019

    புதிய போத்தலில் இருக்கும் பழைய ஒயின் தான் இந்த பட்ஜெட் - நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்ரி

    எதுவும் புதியது இல்லை. ஏற்கனவே கூறியதைத்தான் திரும்பத் திரும்ப கூறியுள்ளனர். புதிய இந்தியா குறித்து பேசுகிறார்கள் ஆனால் வாக்குறுதிகள் எல்லாமே பழைய கள் தான். ஆனால் அது அடைக்கப்பட்டிருக்கும் போத்தல் தான் புதிது என்று கூறிய அவர், வேலை வாய்ப்புகளை உருவாக்கும் எந்த திட்டங்கள் குறித்தும் அவர்கள் அறிவிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

    14:15 (IST)05 Jul 2019

    மோடியின் கனவுகளை நினைவாக்கும் வகையில் அமைந்திருக்கிறது இந்த பட்ஜெட் - அமித் ஷா

    மோடியின் கனவுகளை நினைவாக்கும் வகையில் அமைந்துள்ளது இந்த பட்ஜெட் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். ஏழைகளின் வாழ்வையும், நடுத்தர வர்க்கத்தினரின் உழைப்பையும் மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார்.

    14:11 (IST)05 Jul 2019

    மோடியின் கருத்து

    இந்தியாவின் இந்த ஆண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் குறித்து நரேந்திர மக்களிடம் உரையாடினார். இந்தியாவில் வசிக்கும் அனைவரும் சரியான பாதையில் போய் கொண்டிருப்பதையே உணர்த்துகிறது இந்த பட்ஜெட் என்றும் 21ம் நூற்றாண்டின் தேவைகளை பூர்த்தி செய்யும் பட்ஜெட் இது என்றும் நரேந்திர மோடி பேச்சு.

    13:19 (IST)05 Jul 2019

    நிறைவுற்றது நிதிநிலை அறிக்கை தாக்கல்

    நிறைவுற்றது நிதிநிலை அறிக்கை தாக்கல். மீண்டும் திங்கள் கிழமை நாடாளுமன்றம் கூடும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு

    13:12 (IST)05 Jul 2019

    அதிகமான தங்கத்தின் இறக்குமதி வரி

    தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 10%ல் இருந்து 12.5% ஆக அதிகரிப்பு, சாலைகளை மேம்படுத்துவதற்காக பெட்ரோல் டீசலுக்கு ஒரு ரூபாய் கூடுதல் வரி. 

    13:07 (IST)05 Jul 2019

    நேரடி வரி

    ஆண்டு வருமானம் 2 கோடியில் இருந்து 5 கோடி வரை இருந்தால் அவர்களுக்கு கூடுதல் வரியாக 3% வரி விதிக்கப்படும் என்றும் 5 கோடிக்கு மேல் வருமானம் பெற்றால் அவர்களுக்கு 7% வரி கூடுதல் வரியாக விதிக்கப்படும்.

    13:06 (IST)05 Jul 2019

    1 கோடி ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பணம் எடுத்தால் 2% பிடித்தம்

    டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. வணிகத்துறையில் பணப்புழக்கத்தை குறைக்கும் வகையில், வங்கிகளில் இருந்து 1 கோடி ரூபாயை ரொக்கமாக எடுத்தால் 2% பிடித்தம் செய்யப்படும். BHIM, UPI, Aadhaar Pay, NEFT, RTGS மூலமாக இணைய சேவைகளை பயன்படுத்தி பணம் பரிமாற்றத்தை மேற்கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    13:00 (IST)05 Jul 2019

    Union Budget 2019 Explained

    மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது கன்னி பொது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். பெரும்பான்மையுடன் இரண்டாம் முறையாக ஆட்சியை பிடித்திருக்கும் மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் பட்ஜெட்டும் இதுவேயாகும்.  To read more

    12:58 (IST)05 Jul 2019

    ஆதார் எண்ணை அளித்து வரி தாக்கல் செய்யலாம்

    120 கோடி மக்களுக்கும் மேலானோர் ஆதார் அட்டைகளை வைத்திருப்பதால் ஆதார் எண்ணை அளித்து வரி கட்டலாம். ஆதார் இருக்க வேண்டிய இடத்தில் இனி நீங்கள் பான் கார்டை காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

    12:55 (IST)05 Jul 2019

    குறைந்த விலை வீட்டு கடன்களுக்கான வரி குறைப்பு

    குறைந்த விலை வீடுகளுக்கான வட்டியில் கூடுதலாக 1.5 லட்சம் ரூபாய்க்கான வரி குறைப்பு. 15 ஆண்டுகளில் வீட்டுக்கடனுக்காக ரூ. 7 லட்சம் வரை இதனால் மிச்சமாகும்.

    12:54 (IST)05 Jul 2019

    கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி

    இதற்கு முன்பு 250 கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 25% வரி விதிப்பு நிலுவையில் இருந்தது. கார்ப்பரேட் விகிதத்தின் உச்ச அளவு, 250 கோடி ரூபாயில் இருந்து 400 கோடி ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இதன் கீழ் 99.3% நிறுவனங்கள் 25% வரி கட்ட வேண்டிய நிலை வரும்.  ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான வரிகள் தளர்த்தப்பட்டுள்ளன.  

    12:48 (IST)05 Jul 2019

    யானை புக்க புலம் - புறநானூற்று பாடலை மேற்கோள் காட்டிய நிர்மலா

    பாண்டியன் அறிவுடை நம்பிக்கு யானை புகுந்த நிலம் என்று அறிவுரையாக கூறிய பாடலை அவர் மேற்கோள் காட்டி பேசியுள்ளார்.  ”யானை புக்க புலம்” என்று ஆரம்பித்து ஒரு அரசன் முறை அறிந்து வரி வசூலிக்க வேண்டும். யானைக்கு தேவையான உணவென்பது கொடுத்தால் அது கொஞ்சமாகவே தான் இருக்கும். ஆனால் யானை நிலத்துக்குள் புகுந்தால் அது மொத்த நிலத்தையும் நாசம் செய்து விடும் என்று கூறியுள்ளார்.

    காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே,

    மாநிறைவு இல்லதும், பன்நாட்கு ஆகும்;

    நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே,

    வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;

    அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே,

    கோடி யாத்து, நாடுபெரிது நந்தும்;

    மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்

    வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,

    பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்,

    யானை புக்க புலம்போலத்,

    தானும் உண்ணான், உலகமும் கெடுமே - என்ற பாடலின் சில வரிகளை அவர் மேற்கோள் காட்டினார்

    12:44 (IST)05 Jul 2019

    GST for Electric vehicles

    எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி வரி 12% ல் இருந்து 5%மாக ஜி.எஸ்.டியாக குறைக்கப்படும்

    12:42 (IST)05 Jul 2019

    20 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்படும்

    பார்வையற்றவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் நாணயங்கள் வழங்கப்படும்.  ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ. 10, மற்றும் ரூ.20 நாணயங்கள் புதிதாக வெளியிடப்படும். 

    12:41 (IST)05 Jul 2019

    நேரடி வரி வருவாய்

    வரி வருவாய் ரூ 6.3 லட்சம் கோடியில் இருந்து ரூ.11.37 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 5 வருடங்களில் 78% நேரடி வரி வருவாய் உயர்ந்துள்ளது. வரிகட்டும் குடிமக்களுக்கு நன்றி தெரிவித்த நிதி அமைச்சர், அவர்களின் உதவியால் தான் இந்தியா வளர்கிறது என்றும் கூறியுள்ளார். 

    12:32 (IST)05 Jul 2019

    சுற்றுலாத்துறை ( 17 iconic tourism)

    உலக அளவில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 17 இடங்களில் சுற்றுலாத்துறை மேம்படுத்துப்படும். அங்கு, அகழ்வாய்வு மற்றும் வரலாற்று புரதான நிகழ்வுகளை ஆவணம் செய்து வைக்கப்படும்.

    12:30 (IST)05 Jul 2019

    என்.ஆர்.ஐ களுக்கு உடனடியாக ஆதார்

    இந்திய பாஸ்போர்ட்டுடன் இந்தியாவில் வசிக்கும் என்.ஆர்.ஐகள் ஆதார் அடையாள அட்டை வாங்க 180 நாட்கள் காத்திருக்க வேண்டும். ஆனால் இனிமேல் உடனடியாக என்.ஆர்.ஐகளுக்கு ஆதார் வழங்கப்படும்.

    12:28 (IST)05 Jul 2019

    பெண்கள் நலத்திட்டம்

    சுவாமி விவேகானந்தர் “ ஒரு நாட்டில் பெண்களின் நிலை உயரவில்லை என்றால் அங்கு நாட்டின் நலத்திற்கான வாய்ப்புகளே இல்லை ஒரு பறவை ஒரு சிறகால் பறக்க இயலாது” ” என்று கூறியதை மேற்கோள் காட்டிய அவர் பெண்கள் நலத்திட்டம் குறித்து பேசினார். பெண்களின் நலத்திட்டத்தை மேம்படுத்த கமிட்டி அமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

    12:24 (IST)05 Jul 2019

    UJALA scheme

    உஜாலா திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 35 கோடி எல்.ஈ.டி. பல்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு ரூ.18, 341 கோடி ரூபாய் ஆண்டுக்கு செலவு செய்யப்படுகிறது. எல்.ஈ.டி பல்புகளின் விநியோகம் அதிகரிக்கப்படுவதால் சோலார் மின்சார முறையை அதிகரிக்கலாம்.

    12:22 (IST)05 Jul 2019

    30 லட்சம் ஊழியர்களை கொண்ட ப்ரதான் மந்திரி ஷ்ராம் யோகி மான் தான் திட்டம்

    ப்ரதான் மந்திரி ஷ்ராம் யோகி மான் தான் யோஜானா மூலமாக 30 லட்சம் ஊழியர்களுக்கு ரூ. 3000 வழங்கப்பட்டு வருகிறது.

    12:21 (IST)05 Jul 2019

    புதிதாக தொழில் துவங்குபவர்களுக்காக தூர்தர்சன்

    புதிதாக தொழில் துவங்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் குறித்த நிகழ்ச்சிகளை வழங்க தூர்தர்சனில் சிறப்பு ஒளிபரப்பு ஏற்பாடு செய்யப்படும். 

    12:19 (IST)05 Jul 2019

    திறன் அதிகரிக்கும் நடவடிக்கைகள்

    இந்திய இளைஞர்களின் திறன்களை ஆர்ட்டிஃபிசியல் இண்டெலிஜென்ஸ், பிக் டேட்டா, ரொப்பாட்டிக்ஸ் போன்ற துறைகளில் அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதன்மூலம் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் அதிக சம்பளத்துடன் வேலை வாய்ப்புகளை பெறுவார்கள்.

    12:15 (IST)05 Jul 2019

    உலகத்தரம் வாய்ந்த கல்வி நிலையங்கள் அமைக்க 400 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்

    கற்பிக்கும் முறையை மேம்படுத்த க்யான் ( GYAN) உருவாக்கப்பட்டது. உலக அரங்கில் தலை சிறந்து விளங்கும் ஆராய்ச்சியாளர்கள், அறிவியல் அறிஞர்களை ஒருங்கிணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது GYAN. 5 வருடங்களுக்கு முன்பு வரை சர்வதேச தரம் பெற்ற 200 பல்கலைக்கழகங்களில் ஒன்று கூட இந்தியாவில் இல்லை. ஆனால் தற்போதோ 3 கல்வி நிலையங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. புதிய உலகத்தரம் வாய்ந்த கல்வி நிலையங்கள் அமைக்க 400 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

    12:12 (IST)05 Jul 2019

    National Education Policy

    புதிய தேசியக் கல்விக் கொள்கை மூலமாக இந்திய இளைஞர்கள் உலத்தரமான கல்வியை பெற இயலும் என்று கூறியுள்ளார். 

    12:10 (IST)05 Jul 2019

    Sensex, Nifty Points

    சென்செக்ஸ் 150 புள்ளிகள் கீழ் இறங்கியுள்ளது.

    நிஃப்டி 11,900 புள்ளிகளை கொண்டுள்ளது.

    12:07 (IST)05 Jul 2019

    Annual Global Investors' Meet : வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான மாநாடு

    வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் இந்தியாவில் வருடாந்திர உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை இந்தியாவில் நடத்துவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.  வெளிநாட்டு முதலீட்டார்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில்  FIIs மற்றும் FPIs படிவங்கள் எளிமைப்படுத்தப்படும். 

    12:04 (IST)05 Jul 2019

    FDI : காப்பீட்டு நிறுவனங்களுக்கு 100% அந்நிய நேரடி முதலீடு

    2018-19 ஆண்டுகளில் இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு மிகவும் அசைக்க முடியதாததாக 6% வரை இருந்தது. வான்வழிப்போக்குவரத்து, ஊடகம், அனிமேசன், காப்பீடு துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டினை வரவேற்பதாக கூறிய அவர் காப்பீட்டு நிறுவனங்களுக்கு 100% அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்படுவதை உறுதி செய்தார்.

    11:57 (IST)05 Jul 2019

    Swachh Bharath : ஸ்வச் பாரத்

    ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் சூழ்நிலையும், ஆரோக்கியமும் மேம்பட்டுள்ளது. 9.6 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. 5.6 லட்சம் கிராமங்கள் திறந்த வெளி கழிப்பறைகள் அற்ற நிலையை எட்டியுள்ளன. திடக்கழிவு மேலாண்மை விரிவுப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார். ஊரகப்பகுதிகளில், 95% நகரங்கள் திறந்த வெளி கழிப்பறைகள் அற்ற நிலையை அடைந்துள்ளது என்று கூறிய அவர் 45,000க்கும் மேற்பட்ட பொது கழிவறைகள் இருக்கும் இடங்களை கூகுள் மேப்பில் அப்லோட் செய்திருப்பதாக குறிப்பிட்டார். 1 கோடி இந்தியர்கள் ஸ்வச் பாரத் ஆப்பை டவுன்லோடு செய்திருப்பதாக அறிவித்தார்.

    11:51 (IST)05 Jul 2019

    ஹர் கர் ஜால் - ஒவ்வொரு வீட்டுக்கும் சுத்தமான குடிநீர்

    கிராமப்புற வளர்ச்சியில், விவசாயிகளின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும் என்று கூறிய அவர் ஒவ்வொரு வீட்டுக்கும் சுத்தமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    11:49 (IST)05 Jul 2019

    ப்ரதான் மந்திரி கிராம் சதக் யோஜானா

    ப்ரதான் மந்திரி கிராம் சதக் யோஜானா திட்டத்தின் கீழ் 1,25,000 கி.மீக்கு சாலைகள் மேம்படுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார். இதற்காக ஆகும் செலவு 80,200 கோடி வரை ஆகும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

    11:49 (IST)05 Jul 2019

    பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜானா

    பிரதான் மந்திரை ஆவாஸ் யோஜானா திட்டத்தின் மூலமாக 1.95 கோடி வீடுகள் ஊரக மக்களின் வளர்ச்சிக்காக கட்டித்தரப்படும் என்று அவர் கூறினார். 2015-16 ஆண்டுகளில் வீடுகள் கட்ட 314 நாட்கள் தேவைப்பட்டன. 2017ம் ஆண்டில் அது 114 நாட்களாக குறைந்தது என்று மேற்கோள் காட்டினார் அவர்.

    11:45 (IST)05 Jul 2019

    கிராமப்புற வளர்ச்சித் திட்டம்

    கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு என்று அறிவித்தவர் மகாத்மா காந்தி. அவரின் கனவுகளை நினைவாக்கும் வகையில், அவருடைய 150வது பிறந்தநாளை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. உஜ்வாலா, சௌபாக்கியா திட்டங்கள் மூலமாக அவர்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது. அவர்களால் எளிமையாக சமையல் எரிவாயு, மின்சாரம் ஆகியவற்றை தற்போது பெற்றிட இயல்கிறது என்று கூறிய அவர், 2022ம் ஆண்டுக்குள் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கப்படும் என்று கூறினார்.

    11:29 (IST)05 Jul 2019

    சாலை மற்றும் ரயில் போக்குவரத்து நெரிசல்களை குறைக்க புதிய நடவடிக்கை

    கார்கோ மூலமாக நீர்வழி போக்குவரத்து துரிதப்படுத்தப்படும். அதனால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து நெரிசல்கள் குறையும்

    11:27 (IST)05 Jul 2019

    அடுத்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறையில் ரூ. 50 லட்சம் கோடி முதலீடு

    2030ம் ஆண்டுக்குள் 50 லட்சம் கோடி ரூபாய் ரயில்வே துறையில் முதலீடு செய்யபடும். அதன் மூலமாகா ரயில்வே துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்தச் செல்லப்படும் என்றும் கூறினார்.

    11:26 (IST)05 Jul 2019

    சிறுகுறுந்தொழில் முனைவர்களுக்கான (MSME) கடன் அதிகரிக்கப்பட்டது

    1 கோடி ரூபாய் வரை சிறுகுறு தொழில்முனைபவர்களுக்கு கடன் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. 59 நிமிடங்களில் ஆன்லைன் மூலமாக அவர்கள் இந்த கடனை பெற்றுக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டது.

    11:18 (IST)05 Jul 2019

    போக்குவரத்து வசதிகள்

    பாரத் மாலா மற்றும் சாகர் மாலா மூலமாக சாலை போக்குவரத்து மற்றும் நீர்வழி போக்குவரத்துகள் அதிகப்படுத்தப்படும். நீர்வழிப்பாதைகளை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் அறிவித்தார். நீர்வழி, தரைவழி, மற்றும் வான்வழி போக்குவரத்தினை அதிகரித்துள்ளது இந்த அரசு என்று கூறிய நிதி அமைச்சர் கடந்த 5 ஆண்டுகளில் 657 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது என்றும் கூறிப்பிட்டார். தேசிய நெடுஞ்சாலைகள், பிராந்திய விமானநிலையங்கள் ஆகியவற்றை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அவர் உதான் திட்டம் மூலமாக குறைந்த விலையில் விமான சேவைகள் துவங்கப்பட்டது என்பதையும் குறிப்பிட்டார். 

    11:12 (IST)05 Jul 2019

    55 வருட வளர்ச்சியை 5 ஆண்டுகளில் அடைந்தோம்

    1 ட்ரில்லியன் என்ற பொருளாதாரத்தை அடைய இந்தியா 55 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. ஆனால் வெறும் ஐந்தே ஆண்டுகளில் 1 ட்ரில்லியன் டாலர்களை உயர்த்தியுள்ளோம்.  இந்திய பொருளாதாரம் வளர ஒவ்வொரு சிறு, குறு, பெரும் உற்பத்தியாளர்கள், தொழிற்சாலைகள் உதவியுள்ளன என்றும் அவர் கூறினார்.

    11:09 (IST)05 Jul 2019

    அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் உயரும்

    2014ம் ஆண்டில், பாஜக ஆட்சி அமைக்கும் போது, 1.55 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இந்திய பொருளாதாரம் ஐந்தாண்டுகளில்  2.7 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்தது. இன்னும் சில ஆண்டுகளில் அதனை 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்தப்படும் என்றும் அவர் கூறினார்.

    11:07 (IST)05 Jul 2019

    நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய துவங்கினார் நிர்மலா சீதாராமன்

    தேசத்தை முதல்நிலைப்படுத்திய வாக்காளர்கள் குறித்து பேசி வருகிறார் நிர்மலா சீதாராமன்.  நிதி ஆயோக், ஜி.எஸ்.டி. கவுன்சில் போன்று 2014 - 2019ம் ஆண்டு காலங்களில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்து அவர் பேசினார்.உணவு பாதுகாப்புத் திட்டத்திற்கு கடந்த 5 ஆண்டுகளில் இருமடங்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

    10:54 (IST)05 Jul 2019

    நிர்மலா சீதாராமனின் அம்மா - அப்பா நாடாளுமன்றம் வந்தனர்

    நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அம்மா சாவித்ரி மற்றும் தந்தை நாராயணன் சீதாராமன் தன்னுடைய மகள் தாக்கல் செய்ய இருக்கும் முதல் பட்ஜெட்டினை காண்பதற்காக நாடாளுமன்றம் வந்துள்ளனர்.

    #WATCH Delhi: Parents of Finance Minister Nirmala Sitharaman - Savitri and Narayanan Sitharaman - arrive at the Parliament. She will present her maiden Budget at 11 AM in Lok Sabha. #Budget2019 pic.twitter.com/Wp3INz7ifN

    10:47 (IST)05 Jul 2019

    நாடாளுமன்றம் வந்தடைந்தார் நரேந்திர மோடி

    பட்ஜெட் தாக்கல் நடைபெறுவதை தொடர்ந்து தற்போது நாடாளுமன்றம் வந்துள்ளார் பிரதமர் மோடி

    10:40 (IST)05 Jul 2019

    கோச்சிங் நிலையங்களின் ஜி.எஸ்.டியை குறையுங்கள் : நிர்மலா சீதாராமனுக்கு வேண்டுகோள் விடுத்த காங்கிரஸ் தலைவர்

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக் விஜயசிங், நிர்மலா சீதாராமனுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். வேலையில்லா இளைஞர்களை கருத்தில் கொண்டு அவர்கள் கல்வி கற்கும் கோச்சிங் நிறுவனங்களின் ஜி.எஸ்.டி வரியை குறைக்கலாம் என்று அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கேட்டுக் கொண்டார்.

    10:32 (IST)05 Jul 2019

    நாடாளுமன்றத்தை வந்தடைந்த பட்ஜெட் நகல்கள்

    நிதிநிலை அறிக்கையை சமர்பிக்க நிதி அமைச்சர் மற்றும் துணை நிலை நிதி அமைச்சர் நாடாளுமன்றம் வந்ததைத் தொடர்ந்து பட்ஜெட் நகல்கள் நாடாளுமன்றம் வந்தடைந்துள்ளன. 

    10:26 (IST)05 Jul 2019

    நாடாளுமன்றம் வந்தார் நிர்மலா சீதாராமன்

    ஒட்டு மொத்த இந்தியர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த வருடத்திற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்காக நாடாளுமன்றம் வந்தடைந்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அவருடன் துணை நிதியமைச்சர் அனுராக் தாக்கூரும் நாடாளுமன்றத்தை வந்தடைந்துள்ளார். சரியாக 11 மணி அளவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

    10:11 (IST)05 Jul 2019

    நிதி அமைச்சகம் மற்றும் குடியரசுத் தலைவர் சந்திப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

    காலையில் நிதி அமைச்சகத்தின் முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் குடியரசுத் தலைவர் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

    publive-image

    publive-image

    publive-image

    publive-image

    publive-image

    10:01 (IST)05 Jul 2019

    குடியரசுத் தலைவரை சந்தித்த நிதி அமைச்சரவை உறுப்பினர்கள்

    பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு நிதி அமைச்சரவை, பட்ஜெட் நகல்களை குடியரசு தலைவரிடம் கொடுத்து, அவரை மரியாதை நிமித்தமாக சந்திப்பது வழக்கம். குடியரசு தலைவரை சந்தித்து சிறிது நேரம் உரையாற்றினார் நிர்மலா சீதாராமன்

    09:59 (IST)05 Jul 2019

    bahi khata- வில் கொண்டு வரப்பட்ட பட்ஜெட் பேப்பர்கள் - தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி. சுப்ரமணியன் விளக்கம்

    எப்போதுமே நம்முடைய பட்ஜெட்கள் அனைத்தும் சூட்கேஸில் தான் எடுத்து வரப்படும். ஆனால் அதற்கு மாறாக இம்முறை லெஜ்ஜரில் வைத்து எடுத்து வரப்பட்டது. இது தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி. சுப்ரமணியன் கூறுகையில் ”இது தான் இந்திய கலாச்சாரம்... ஆங்கிலேய மோகத்தில் இருந்து நாம் வெளியேறிவிட்டோம் என்பதையே காட்டுகிறது” என்று குறிப்பிட்டார்.

    publive-image

    09:42 (IST)05 Jul 2019

    காலையிலேயே ஏற்றம் கண்ட BSE Sensex, Nifty

    பட்ஜெட் தாக்கல் இன்று நடைபெறுவதை தொடர்ந்து ஜூன் 11ம் தேதிக்கு பின்பு சென்செக்ஸ் புள்ளிகளில் பெரும் ஏற்றம். 40 ஆயிரம் புள்ளிகளை தொட்டது.  பங்கு வர்த்தகம் இன்று காலையிலேயே ஏற்றத்துடன் துவங்கியுள்ளது. 78.72 புள்ளிகள் அதிகரித்து சென்செக்ஸ் 39, 986 புள்ளிகளாக உள்ளது. நிஃப்டியின் மதிப்பு 37.90 புள்ளிகள் உயர்ந்து 11,984.70 புள்ளிகளாக உள்ளது.

    09:36 (IST)05 Jul 2019

    Union Budget Live : நிர்மலா சீதாராமனின் முதல் நிதி நிலை அறிக்கை

    நிதிநிலை அறிக்கையின் நகலை குடியரசு தலைவரிடம் சமர்பித்தார் நிதி அமைச்சர். எப்போதுமே பட்ஜெட்டினை சூட்கேஸில் வைத்து எடுத்துவரும் பழக்கமே நிலவி வந்த நிலையில் தற்போது சிவப்பு நிற கைக்கு அடக்கமான ஃபைலில் நிதிநிலை அறிக்கையினை வைத்துள்ளார் நிர்மலா சீதாராமன்

    Union Minister for Finance Nirmala Sitharaman, MOS Anurag Thakur leave the Finance Ministry to present the Budget in parliament in New Delhi on Friday. Express Photograph by Neeraj Priyadarshi
    Union Minister for Finance Nirmala Sitharaman, MOS Anurag Thakur leave the Finance Ministry to present the Budget in parliament in New Delhi on Friday. Express Photograph by Neeraj Priyadarshi
    Nirmala Sitharaman's first Union Budget :  ஜி.எஸ்.டி. வரியை எளிமைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தேசிய ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்தவர்களின் மொத்த நிதியில் 40% வரையிலான தொகுப்பிற்கு மட்டுமே வரி விலக்கு உண்டு. இதனை உயர்த்தி 60% தொகைக்கு வரி விலக்கு அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பொடது நிதி அறிக்கையுடன் ரயில்வே நிதி அறிக்கையும் சேர்த்தே தாக்கல் செய்யப்படுவதால் ரயில் கட்டணம், சரக்கு கட்டணம், முன்பதிவு கட்டணம் போன்றவை குறித்த அறிவிப்புகளும் இன்று வெளியாக கூடும்.

    வருமான வரி உச்ச வரம்பும் பாஜக ஆட்சியும்

    பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 2014ம் ஆண்டு ரூ. 2 லட்சத்தில் இருந்து இரண்டரை இலட்சமாக வருமான வரி உச்சவரம்பு அறிவிக்கப்பட்டது. இடைக்கால பட்ஜெட்டில் இந்த உச்ச வரம்பானது 5 லட்சமாக உயர்த்தப்பட்டது.

    Nirmala Sitharaman Budget 2019
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment