Political Leaders Said About Budget 2021 : 2021-22-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இன்று கூடிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், காலை 11 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை தொடங்கினார். இந்தியாவில் கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால், பொருளாதாரம் பெரும் இழப்பை சந்தித்தது. இதனால் இன்று தாக்கல் செய்யபடப்ட இந்த பட்ஜெட் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
இந்த பட்ஜெட்டில் முக்கிய அம்சமாக மூத்த குடிமக்கள் வரி செலுத்த தேவையில்லை என்றும், 100 புதிய சைனிக் பள்ளிகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 8 வழிச்சாலை திட்டம் இந்த வருடத்தில் தொடங்கப்படும் என்றும், பெட்ரோல் டீசல் விலையில் வேளாண் வரி நிர்ணையிம் செய்யப்பட்டுள்ளதாகவும், தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதாகலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றில் முதல் முறையாக மக்கள்தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் முறையில் நடத்தப்படும் என்றும், இரும்பு மற்றும் ஜவுளி மூலப்பொருட்களுக்கான சுங்கவரி குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. செவிலியர்கள் நலனுக்காக புதிய ஆணையம் அமைக்கப்படும் என்றும், தேயிலை தொழிலாளர்கள் நலனுக்காக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷ
இந்த பட்ஜெட் குறித்து தலைவர்களின் கருத்து :
பிரதமர் மோடி : பட்ஜெட்டில் புதிய திட்டங்களில் கவனம் செலுத்தப்பட்டு உள்ளது. வேலை வாய்ப்பை அதிகரிக்கும் பல திட்டங்கள் பட்ஜெட்டில் உள்ளன. இந்த பட்ஜெட் மூலம் இளைஞர்கள் அதிக பயனடைவார்கள் என கூறி உள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி : மக்களின் பணத்தை கைகளில் வைப்பதை மறந்து, இந்தியாவின் சொத்துக்களை தனது நட்பு முதலாளித்துவ நண்பர்களிடம் ஒப்படைக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா : இந்த பட்ஜெட்டில், வரி முறையை மேம்படுத்துவதற்கும், வங்கி முறையை வலுப்படுத்துவதற்கும், முதலீட்டை ஊக்குவிப்பதற்கும், வணிகத்தை எளிதாக்குவதற்கும் மோடி அரசு பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமிக்க நாடாக மாற்றுவதற்கான மோடி அரசின் தீர்மானத்தை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி : மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு உகந்த பல அறிவிப்புகள் உள்ளன கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் : போது மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான வரிச்சலுகையை காங்கிரஸ் வரவேற்கிறது. ஆனால் பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் வருமானத்தை உயர்த்தவும் , எந்த அம்சமும் பட்ஜெட்டில் இல்லை என தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி: பட்ஜெட்டில் நிறைய அம்சங்கள் இருக்கும் என எதிர்பார்த்து ஏமாந்து உள்ளோம் என்று கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி: மத்திய பட்ஜெட்டில் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லை, இந்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கு பயன்தரும் அறிவிப்பும் இல்லை. இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்களை ஒழிக்க இந்த பட்ஜெட் மூலம் முயற்சி நடக்கிறது. வளர்ச்சிக்கு பயன்படாத வெறும் வார்த்தை ஜாலங்களால் நிரப்பப்ட்ட பட்ஜெட் என கூறி உள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்: அதிகாரிகளுக்கு அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பட்ஜெட், மக்களுக்கு அல்வாவுடன் முடிந்துள்ளது. நீண்ட உரை, ஆனால் சரியான தீர்வுகள் இல்லை. என கூறி உள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: பொருளாதாரத்தை மீட்பதற்கான உறுதியான அறிவிப்புகளோ, வேலை வாய்ப்பை பெருக்குவதற்கான குறிப்பிட்ட செயல் திட்டங்களோ, இல்லாமல் பளபளக்கும் வார்த்தைகள் நிரம்பிய பிரச்சார உரையைப் போல் பட்ஜெட் ஏமாற்றமளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.