Union Budget 2021 Updates, Budget 2021 Latest News : இன்று நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். கொரோனா நோய் தொற்றுக்கு பிறகு அறிவிக்கப்படும் நிதிநிலை அறிக்கை என்பதால் மக்கள் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இன்று காலை 11 மணிக்கு நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்வார் நிர்மலா சீதாராமன். இந்நிகழ்வின் அனைத்து முக்கிய அப்டேட்களையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணையத்துடன் இணைந்திருங்கள்.
Budget 2021 Live: Union Budget Live News in Tamil, Budget 2021 Live Announcements
முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தன்னுடைய கட்டுரையில், உலக நாடுகள் முழுவதும் சுகாதாரத்துறை உட்கட்டமைப்பிற்கு முதலீடு செய்வது குறித்து கோரிக்கைகள் வைக்கின்றனர். நானும் அதனை ஏற்கேன்றேன். ஆனால் நிதி அமைச்சர் இரண்டு தலைகளுக்கு கீழே நிதிகளை ஒதுக்குவார். எனவே இந்தமுறை எனக்கு பட்ஜெட் குறித்த எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். இது தொடர்பான முழுமையான செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Budget 2021 : கொரோனா நோய்தொற்றுக்கும், தடுப்பூசி செயல்பாட்டுக்கும் இடையே இந்த நிதிநிலைஉக் அறிக்கை தாக்கல் செய்யப்படுவதால் மக்கள் மத்தியில் பல்வேறு எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது.
மாநில அரசுகள் இந்த நிதிநிலை அறிக்கையில், கொரோனா தொற்றுநோய்க்கான தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு ஒரு நாள் முன்பு மத்திய அமைச்சர் ராஜேஷ் டோப் “ஆரம்பத்தில் இருந்தே மத்திய அரசிடம், கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மாநில அரசுகள் வைத்து வருகின்றன. இது இன்றைய பட்ஜெட்டில் இடம் பெற வேண்டும்” என்று விரும்புவதாக கூறினார்.
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு உகந்த பல அறிவிப்புகள் உள்ளன என்று முதல்வர் பழனிசாமி வர்வேற்றுள்ளார். மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: மத்திய பட்ஜெட்டில், தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேறியுள்ளன. கொரோனா தொற்றிலிருந்து பொருளாதாரத்தை மீட்பதற்கான பல திட்டங்கள் இடம் பெற்றுள்ளன” என்று பாராட்டியுள்ளார்.
2021 பட்ஜெட் குறித்து விசிக தலைவர் திருமாளவன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில், “வழக்கம்போல மக்களுக்கு ‘பயனில்லா’ பட்ஜெட். இது நாட்டு ‘வளர்ச்சிக்கானது’ அல்ல; மோடி நண்பர்களுக்கு நாட்டை ‘விற்பதற்கானது’. எல்ஐசி,பாரத் பெட்ரோலியம் துறைமுகங்கள், ஏர்இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களையும் நிலங்களையும் விற்கப்போகும் பட்ஜெட்.” என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழக மக்களுக்கு மத்திய அரசு ஒரு லாலிபாப்-ஐ கொடுத்து ஏமாற்றியுள்ளது. தமிழக திட்டங்களுக்கு ஆக்கப்பூர்வமான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு செய்யவில்லை என்று மத்திய பட்ஜெட் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் மின்விநியோகம் தனியாருக்கு அனுமதி அளிப்பதாக நிதியமை்ச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டிற்கான மத்திய பட்ஜெட்டிற்கு வரவேற்பு தெரிவித்துள்ள முதல்வர் முதலமைச்சர் பழனிசாமி மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு உகந்த பல அறிவிப்புகள் உள்ளன கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்என்று தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நிதியாண்டில் நிதி பற்றாக்குறை ஜிடிபியில் இருந்து 6.8%ஆக இருக்கும் என கணிப்பு
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் 32 மாநிலங்களில் செயல்படுத்தப்படும்
விவசாய கடன் இலக்கு இந்த நிதியாண்டில் ரூ.16.5 லட்சம் கோடியாக உயர்வு
5 முக்கிய இடங்களில் மீன்பிடி மையங்கள் அமைக்கப்படும்
உயர்கல்வி ஆணையம் விரைவில் அமைக்கப்படும்.
செவிலியர்கள் நலனுக்காக புதிய ஆணையம் அமைக்கப்படும்
மக்கள் தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படும்
தேயிலை தொழிலாளர்கள் நலனுக்காக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு
கடந்த சில மாதங்களாக ஜிஎஸ்டி வரி வசூலில் சாதனை படைத்துள்ளோம் என்று குறிப்பிட்டுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த ஆண்டில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 6.48 கோடியாக உயர்ந்துள்ளதாகவும், இந்த எண்ணிக்கை கடந்த 2014ஆம் ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்தோர் எண்ணிக்கை 3.31 கோடியாக இருந்தது
மத்திய பட்ஜெட்டில், இரும்பு, ஜவுளி உள்ளிட்ட பல்வேறு மூலப்பொருட்களுக்கான சுங்கவரி குறைக்கப்படும் என்றும், பிஎஃப் பங்கு தொகையை தாமதமாக செலுத்துவதற்கான அபராதம் இனி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை டிஜிட்டல் முறையில் செய்ய ரூ.3,768 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கத்திற்கான இறக்குமதி வரி 12.5%-லிருந்து மீண்டும் 10% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட்டில், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2-ம், டீசல் லிட்டருக்கு ரூ.4-க்கும் வேளாண் வரி விதிக்கப்பட்டுள்ளது
சென்னை – சேலம் இடையேயான எட்டுவழிச் சாலைக்கு டெண்டர் விடப்பட்டு கட்டுமானம் இந்த ஆண்டில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக ஜிஎஸ்டி வரி வசூலில் சாதனை படைத்துள்ளோம் என்று தெரிவித்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த ஆண்டில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 6.48 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மாநிலங்கள், தனியார் அமைப்புகளுடன் இணைந்து 100 புதிய சைனிக் பள்ளிகள் உருவாக்கப்படும் என்று பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஓய்வூதியம் பெறும் 75 வயதை கடந்த மூத்த குடிமக்களுக்கு வரி செலுத்துவதில் சலுகை மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இரட்டை வரி விதிப்பில் இருந்து விலக்கு போன்றவை பட்ஜெட் 2021-ல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
5ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி மாநிலங்களுக்கு 41% பங்கு என நிதியமைச்சர் அறிவித்துள்ளார். மேலும், இரும்பு, ஜவுளி உள்ளிட்ட பல்வேறு மூலப்பொருட்களுக்கான சுங்கவரி குறைக்கப்படும் என்றும் பிஎஃப் பங்கு தொகையை தாமதமாக செலுத்துவதற்கான அபராதம் இனி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
விவசாய கடன் இலக்கு இந்த நிதியாண்டில் ரூ.16.5 லட்சம் கோடியாகவும் சிறு நிறுவனங்களின் மூலதனம் ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.2 கோடியாகவும் உயர்ந்திருக்கிறது. 5 முக்கிய இடங்களில் மீன்பிடி மையங்கள் அமைக்கப்படவுள்ளது. சமூக பாதுகாப்பு திட்டங்கள் பிளாட்பார்மில் வசிக்கும் மக்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்றும் புலம்பெயர்ந்த மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் பற்றிய தகவல் சேகரிக்க தனி இணைய பக்கம் ஆரம்பிக்கப்படும் என்று புதிய பட்ஜெட் குறிப்பிடுகிறது. பழங்குடியினர் பகுதிகளில் 750 பள்ளிகள் அமைக்கப்படும் என்றும் பழங்குடியின மாணவர்கள் போஸ்ட் மெட்ரிக் உதவித் தொகைக்காக ரூ.35.219 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றும் நிர்மலா அறிவித்துள்ளார்.
உயர்கல்வி ஆணையம் விரைவில் அமைக்கப்படும் என்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு இனி டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படும் என்றும் நிர்மலா அறிவித்திருக்கிறார். மேலும், செவிலியர்கள் நலனுக்காக புதிய ஆணையம் அமைக்கப்படும் என்றும் கூறினார். தேயிலை தொழிலாளர்கள் நலனுக்காக ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. எதிர்வரும் நிதியாண்டில் நிதி பற்றாக்குறை ஜிடிபியில் இருந்து 6.8%-ஆக இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் 32 மாநிலங்களில் செயல்படுத்தப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
சென்னை உள்ளிட்ட ஐந்து முக்கிய துறைமுகங்களை மேம்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. கேரள மாநிலத்தில் நெடுஞ்சாலை திட்டங்களுக்கு ரூ.65,000 கோடியும் அசாம் மாநிலத்திற்கு ரூ.3,400 கோடியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
மின் விநியோகத்தில் தனியாருக்கு அனுமதி வழங்கப்படும் என்றுகூறிய நிர்மலா சீதாராமன் கப்பல்களை மறுசுழற்சி செய்யும் ஆலைகளுக்கு பிரத்தியேக தளங்கள் உருவாக்கப்படும் என்றும் கூறினார். மேலும், ரயில்வே துறைக்கு ரூ.1.10 லட்சம் கோடி ஒதுக்கப்படும் என்றும் அறிவித்தார்.
2022-ம் ஆண்டுக்குள் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் முழுமையாக தனியாருக்கு விற்கப்படும் என்றும் 2023ஆம் ஆண்டு டிசம்பருக்குள் அனைத்து ரயில் வழித்தடமும் மின்மயமாக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 1.03 லட்சம் கோடி நிதியில் புதிய சாலைகள் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
உஜ்வாலா திட்டத்தின் கீழ் மேலும் ஒரு கோடி பயனாளிகளுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்றும் 100 மாவட்டங்களில் குழாய் மூலம் சமையல் எரிவாயு விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
சென்னையில் ரூ.63,000 கோடி செலவில் மெட்ரோ 2ம் கட்ட திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் பொது போக்குவரத்து பேருந்து வசதிக்கு ரூ.18 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அடுத்த 3 ஆண்டுகளில் ஏழு ‘ஜவுளி பூங்காக்கள்’ உருவாக்கப்பட உள்ளன என்றும் அதனை செயல்படுத்தியபின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பிற்காக பிரத்யேக பட்ஜெட் ஒதுக்கப்படும் என்றும் நிர்மலா குறிப்பிட்டுள்ளார்.
உள்கட்டமைப்பு துறைகளுக்கான நீண்டகால நிதியத்தின் இடைவெளியை நிரப்புவதற்காக டி.எஃப்.ஐ.யில் ஒரு மசோதாவை விரைவில் தாக்கல் செய்வதாக நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
கோவிட் -19 தடுப்பூசிக்கு ரூ.35,000 கோடியை நிர்மலா சீதாராமன் அறிவித்தார். “அதிக நிதி வழங்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. சுகாதாரம் மற்றும் நலனுக்கான பட்ஜெட் செலவு 2021-22 பட்ஜெட்டில் 2,23,846 கோடி ரூபாய். இது 137 சதவீத அதிகரிப்பு” என்று அவர் மேலும் கூறினார்.
மிஷன் போஷன் 2.0-ஐ அறிமுகப்படுத்த ஜல் ஜீவன் மிஷன் அர்பனை அரசு தொடங்கும். “நகர்ப்புற ஸ்வட்ச் பாரத் திட்டம் ரூ.1.4 லட்சம் கோடிக்கு மேல் செலவினத்துடன் செயல்படுத்தப்படும்” என்று அவர் கூறுகிறார்.
“ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக், காற்று மாசுபாடு மற்றும் கழிவுகளை பிரித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளேன்” என்று ஸ்வட்ச் பாரத் மற்றும் ஸ்வஸ்த் பாரத் பற்றி பேசும்போது சீதாராமன் கூறினார்.
2021-22 வரவு செலவுத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரைவில் அதை நாடாளுமன்றத்தில் முன்வைப்பார்.
2021-ம் ஆண்டு பட்ஜெட்டை முன்வைப்பதற்கு முன்பு நிதி அமைச்சக குழு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தை சந்தித்தது.
நிர்மலா சீதாராமன் மற்றும் அனுராக் தாக்கூர் ஆகியோர் நிதி அமைச்சகத்திலிருந்து நாடாளுமன்றம் புறப்படுகிறார்கள். கோவிட் காரணமாக இந்த ஆண்டு முதல் முறையாக பட்ஜெட் காகிதமற்றதாக இருக்கும். இது அனைவருக்கும் நகலாக ஆன்லைனில் கிடைக்கும்.
சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக யூனியன் பட்ஜெட் ஆவணங்கள் கோவிட் -19 தொற்றுநோயால் அச்சிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2020-21-ம் ஆண்டில் 7.7 சதவீத சுருக்கத்திற்குப் பிறகு, இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 2021-22-ம் ஆண்டில் 11 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்யும் என்று நிதி அமைச்சகத்தின் பொருளாதார ஆய்வுத் திட்டங்கள் தெரிவிக்கின்றன. பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 15.4 சதவிகிதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஆண்டின் 4.4 சதவிகித பணவீக்கத்தை அனுமானிக்கிறது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சகம் வந்தடைந்தார்
‘பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இருக்கும். ‘சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ்’ என்ற மந்திரத்தின் அடிப்படையில் செயல்படும் அரசு, ஆத்மனிர்பார் தொகுப்பை அறிவித்து, தொற்றுநோயிலிருந்து பாதுகாத்து பொருளாதாரத்தை கொண்டு வருவதன் மூலம் இந்தியாவுக்கு புதிய திசையை வழங்கும்’ என அனுராக் தாக்கூர் கூறுகிறார்.
பாஜக தலைமை வகிக்கும் என்.டி.ஏ ஆட்சியின் 9வது பட்ஜெட் இதுவாகும். நிர்மலா சீதாராமன் “முன் எப்போதும் இல்லாத பட்ஜெட்” இது என்று இன்றைய பட்ஜெட் தாக்கல் நிகழ்வை கூறியிருந்தார்.
கொரோனா ஊரடங்கினால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை சரியும் நோக்கில் உட்கட்டமைப்பு, சுகாதாரம், வேளாண்மை, கிராமப்புற நிர்வாகம், சிறுகுறு வணிக நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் மகாராஷ்ட்ரா தான் கொரோனாவால் அதிக அளவு பாதிப்படைந்த மாநிலம். கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கவில்லை என்றால், அதிக அளவு மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் போது ஏற்படும் நிதிச்சுமையை மாநில அரசே ஏற்றுக் கொள்ளும் நிலை உருவாகிவிடும் என்று அம்மாநில அரசு அறிவிப்பு
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்ட அமர்வு நடைபெறும். அந்த அமர்வினை குடியரசு தலைவர் தன்னுடைய உரை மூலம் துவங்கி வைப்பார். ஆனால் இந்த ஆண்டு நடைபெற்ற அமர்வை முழுவதுமாக புறக்கணித்தது 17 எதிர்கட்சிகள்.