Union Budget 2021 Tamil News : திங்கள்கிழமை மத்திய பட்ஜெட் 2021-ஐ முன்வைத்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் ஆத்மனிர்பர் ஸ்வஸ்திய பாரத் யோஜனா எனும் புதிய மத்திய நிதியுதவி திட்டத்தை அறிவித்தார். இது ரூ.64,180 கோடி பட்ஜெட்டில் ஆறு ஆண்டுகளுக்கான திட்டம்.
இந்த திட்டம் முதன்மை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சுகாதார அமைப்புகளின் திறன்களை வளர்க்கும். தற்போதுள்ள நிறுவனங்களை வலுப்படுத்தும் மற்றும் புதிய வளர்ந்து வரும் நோய்களைக் கண்டறிந்து குணப்படுத்த புதிய நிறுவனங்களை உருவாக்கும் என்று நிதியமைச்சர் கூறினார். இந்த புதிய திட்டம் தேசிய சுகாதார பணிக்குக் கூடுதலாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
கோவிட்-19-க்கு பிந்தைய உலகில் சுகாதார அமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய சீதாராமன், சுகாதார உள்கட்டமைப்பில் முதலீடு கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார். தடுப்பு ஆரோக்கியம், நோய் தீர்க்கும் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு ஆகிய பகுதிகள் இனி வரும் ஆண்டுகளில் பலப்படுத்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
கோவிட் -19 தடுப்பூசி திட்டத்திற்கு 2021-22-ம் ஆண்டில், அரசு ரூ.35,000 கோடியை வழங்கும் என்றும் தேவைப்பட்டால் அதிக நிதி வழங்க உறுதி பூண்டுள்ளதாகவும் சீதாராமன் கூறினார்.
"இன்று இந்தியாவில் இரண்டு தடுப்பூசிகள் உள்ளன. மேலும் கோவிட் -19-க்கு எதிராகத் தனது சொந்த குடிமக்களை மட்டுமல்ல, 100 அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளையும் பாதுகாக்கத் தொடங்கியுள்ளது” என்று நிதியமைச்சர் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"