கிரெடிட் கார்டு செலுத்துதல் அல்லது எதிர்பாராத நிதி நெருக்கடியை ஈடுகட்ட தனிநபர் கடன்கள் உதவுகின்றன. மேலும், தனிநபர் கடன்கள் பாதுகாப்பற்ற கடன்களாகும். ஏனெனில் பிணையம் தேவையில்லை. தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் வங்கி மற்றும் கிரெடிட் ஸ்கோரைப் பொறுத்து மாறுபடும்.
Advertisment
வட்டி விகிதம்
தனிநபர் கடனின் அளவு, கால அளவு மற்றும் வட்டி விகிதம் ஆகியவற்றால் இஎம்ஐ (EMI) தீர்மானிக்கப்படுகிறது. வெவ்வேறு கடன் வழங்குபவர்கள் வெவ்வேறு விகிதங்களில் கடன்களை வழங்குவதால், கடன் வழங்குபவர்களிடையே வட்டி விகிதங்கள் மாறுகின்றன.
தனிநபர் கடன் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
தனிநபர் கடன் வட்டி விகிதம் என்பது ஒரு கடனளிப்பவர் அவர்களிடம் இருந்து கடன் வாங்குவதற்கு விதிக்கப்படும் மாதாந்திரக் கட்டணமாகும். தனிநபர் கடனுக்கான வட்டி விகிதத்தை விரைவாகக் கணக்கிட, தனிநபர் கடன் கால்குலேட்டரைப் பயன்படுத்தலாம். அதன்படி காலம், வட்டி, வாங்கிய கடன் அளவைப் பொறுத்து இஎம்ஐ தீர்மானிக்கப்படுகிறது.
தனிநபர் கடனுக்கான குறைந்த வட்டி விகிதத்தை வழங்கும் வங்கிகள்
கடன் பெற தேவையான ஆவணங்கள்
நீங்கள் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தால் அடையாளச் சான்று, முகவரிச் சான்று மற்றும் அவர்களின் சமீபத்திய 3 சம்பளச் சிலிப்கள் ஆகியவற்றை சமர்பிக்க வேண்டும்.
கடன் செயலாக்க கட்ட்ணம்
இது பெரும்பாலும் வங்கியின் அடிப்படையில் மாறுபடும் சிறிய தொகையாகும். பொதுவாக ஒட்டுமொத்த கடன் தொகையில் 0.5% முதல் 2.50% வரை செலவாகும்.
எஸ்பிஐ பெர்சனல் லோன்
எஸ்பிஐ வங்கி 12.15 சதவீதம் முதல் 14.05 சதவீதம் வரை தனிநபர் கடன்களை வழங்குகிறது. இது திட்டத்துக்கு திட்டம் மாறுபடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“