/tamil-ie/media/media_files/uploads/2017/07/banks.jpg)
Syndicate Bank Recruitment
Bank strike : ஊதிய உயர்வு கோரி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று(30.5.18) மற்றும் நாளை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
வங்கி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம், 2017 அக்டோபரில் முடிந்தது; நவம்பர் முதல், புதிய ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். இதுகுறித்து, வங்கி நிர்வாகங்களுடன் பல சுற்று பேச்சு நடத்தப்பட்டன. இதையடுத்து அவர்களுக்கு 2 சதவீத ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த ஊதிய உயர்வு போதாது என்று வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மே 30 மற்றும் 31ம் தேதிகளில் நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் இந்திய வங்கிகள் சங்கம் ஏற்கனவே அறிவித்திருந்து. இதையடுத்து, டெல்லியில் மத்திய தொழிலாளர் நலத்துறை தலைமை ஆணையர் முன்னிலையில் நேற்று முன்தினம் நடந்த சமரச பேச்சு தோல்வியில் முடிந்தது
இந்நிலையில், திட்டம்மிட்டப்படி 48 மணி நேரம் போராட்டம் இன்று முதல் தொடங்கியது.கடந்த 2012-ம் ஆண்டு ஊதிய உயர்வு வழங்கப்பட்ட நிலையில், அதன் பிறகு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என்று வங்கி ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அகில இந்திய வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக நடைபெறும் இந்த போராட்டத்தில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்று உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர்.இந்நிலையில் நாடு முழுவதும் பணவரித்தனை பாதிக்கப்பட வாய்ப்பு எழுந்துள்ளது. அதே போல் வங்கி சேவைகள் மட்டும் அல்ல ஏடிஎம் சேவையும் பாதிக்கப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.