பிஎன்பி மோசடி : பணமாக இழந்தது 11,500 கோடி; பலர் தகவலாக 10,000 வங்கி அட்டைகள்.

ஏஷியா டைம்ஸ் சார்பில் பேசிய தொழில்நுட்பத் தலைவர் ராகுல் சசி, பிஎன்பி வாடிக்கையாளர்களின் அட்டை விவரங்களில் தற்போது எங்களுக்கு 2 பட்டியல்கள் கிடைத்துள்ளன.

By: Published: February 23, 2018, 6:04:42 PM

ஆர்.சந்திரன்

பிஎன்பி வங்கி 11,500 கோடி ரூபாயை இழந்துத் தவிக்கிறது. தற்போது 10,000 வாடிக்கையாளர்களது கிரிடிட் மற்றும் டெபிட் கார்டின் நுட்பமான தகவல்களும் பறிபோயுள்ளன.

இந்த வங்கியின் டேட்டாக்கள் சிங்கப்பூரைச் சேர்ந்த க்ளவுட்செக் இன்பர்மேஷன் செக்யூரிட்டி என்ற நிறுவனத்திடம் உள்ளது எனவும், அந்த நிறுவனத்துக்கு பெங்களூருவிலும் அலுவலகம் உள்ளதாகவும், தங்களது துப்பறியும் மென்பொருள் ஒன்று இந்த தகவல் திருட்டை கண்டுபிடித்துள்ளது எனவும் ஹாங்காங்கைச் சேர்ந்த ஆங்கில செய்தி ஊடகமான ஏஷியா டைம்ஸ் ரிப்போர்ட் தெரிவிக்கிறது.

இணையத்தில் முறையற்ற காரியங்களைச் செய்வதற்கென்றே சில இடங்கள் உள்ளன. அவற்றை கண்டறிய உதவும் எங்களது சிறப்பு மென்பொருள் மூலம்தான் இந்த தகவல் திருட்டு பற்றி எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதை உடனடியாக பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு தெரிவித்துள்ளோம் எனவும் ஏஷியா டைம்ஸ் கூறுகிறது.

ஏஷியா டைம்ஸ் சார்பில் பேசிய அதன் தொழில்நுட்பத் தலைவர் ராகுல் சசி, பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்களின் அட்டை விவரங்களில் தற்போது எங்களுக்கு 2 பட்டியல்கள் கிடைத்துள்ளன. “விற்பனைக்கு உள்ளது” என, தற்போது இணையத்தில் கிடைக்கும் மேற்கண்ட ரகசியத் தகவலில் வாடிக்கையாளரது பெயர், அவரது கடன் அட்டை மூலம் பணமாற்றம் செய்ய தேவைப்படும் CVV மற்றும் அந்த கடன் அட்டை எப்போது கலாவதியாகிறது என்ற தகவலும் இடம்பெற்றுள்ளன என்றும் கூறியுள்ளார்.

இந்த விவரங்கள் திருடப்பட்டது 2018 ஜனவரி 29ம் தேதி என தெரிய வருவதால் அவை அனைத்தும் அண்மைத் தகவல்களாக இருக்க வாய்ப்புண்டு. அதனால் உடனடி நடவடிக்கை பல வாடிக்கையாளரைக் காப்பாற்றும் எனவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதை பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரியான விர்வானி உறுதி செய்துள்ளதாகவும், அரசுக்கு இத்தகலை தெரிவித்து உரிய நடவடிக்கையை அவர் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்து என்டிடிவியின் வலைதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:10000 punjab national bank credit debit card customers said to be affected by data breach

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X