உலகின் தலைசிறந்த நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்ற இந்திய நிறுவனங்கள்!

வீட்டு கடன் அளிப்பு நிறுவனமான எச்டிஎப்சி 217 ஆவது இடத்தை பெற்றுள்ளது. 

வீட்டு கடன் அளிப்பு நிறுவனமான எச்டிஎப்சி 217 ஆவது இடத்தை பெற்றுள்ளது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தலைசிறந்த நிறுவனங்கள்

தலைசிறந்த நிறுவனங்கள்

உலகின் தலைச்சிறந்த நிறுவனங்களின் பட்டியலில், இந்தியாவை சேர்ந்த 12 நிறுவனக்கள் இடம்பெற்றுள்ளன. இதுக் குறித்த முழு விபரத்தையும் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

12 இந்திய நிறுவனங்கள்:

Advertisment

உலகின் தலைச்சிறந்த நிறுவனங்களின் பட்டியலை, புள்ளி விபரத்துடன் பிரபல  ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை  இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியிட்டது.  இந்த பட்டியலில் மொத்தம் 250 நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

அதில்  12 இந்திய நிறுவனங்களுக்கு இடம் கிடைத்துள்ளது.  இந்த முடிவானது  60 நாடுகளில் மொத்தம் 15 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில்  வெளியிடப்பட்டுள்ளது. உலகில் சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் இன்போசிஸ், டாடா, டிசிஎஸ் போன்ற 12 இந்திய நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளது.

1 லட்சத்து 65 ஆயிரம் கோடி டாலர் சந்தை மூலதனம் கொண்ட வால்ட் டிஸ்னி நிறுவனம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் கார் தயாரிப்பு நிறுவனமான ஃபெராரியும், மூன்றாவது இடத்தில் மேஜர் ஹில்டன் ஆகியவை இடம் பிடித்துள்ளது.

Advertisment
Advertisements

இந்திய நிறுவனங்களான இன்போஸிஸ் 31-வது இடத்திலும், டாடா தொழில்நுட்ப நிறுவனம் 35-வது இடத்திலும், டாடா மோட்டார்ஸ் 70-வது இடத்திலும், டாடா ஸ்டில் 131-வது இடத்திலும், லார்ஸன் அன்ட் டர்போ 135-வது இடத்திலும், கிரேஸிம் இண்டஸ்டீரிஸ் 154-வது இடத்திலும், ஜெனரல் இன்சுரன்ஸ் கார்பரேஷன் ஆஃப் இந்தியா 156-வது இடத்திலும்,

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா 164-வது இடத்திலும், ஏசியன் பெயிண்ட்ஸ் 203-வது இடத்திலும், ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா 227-வது இடத்திலும் மற்றும் ஐடிசி 239-வது இடத்தையும் பெற்றுள்ளன.

இந்த நிறுவனங்கள் அனைத்தும் வாடிக்கையாளர் நம்பிக்கை, செயல்பாடு, நிறுவன பொருட்களின் தரம், சேவை, நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள், ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வானது.

மற்ற நாடுகளின் விபரங்கள்:

வீட்டு கடன் அளிப்பு நிறுவனமான எச்டிஎப்சி 217 ஆவது இடத்தை பெற்றுள்ளது.  அமெரிக்க நிறுவனங்கள்  61 இடங்களை  பிடித்துள்ளன.  ஜப்பானைச் சேர்ந்த  32 நிறுவனங்களும், சீனாவைச் சேர்ந்த  19 நிறுவனங்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

அதே பொல்,  பிரான்சை சேர்ந்த 13 நிறுவனங்கள், ஜெர்மனியை சேர்ந்த  11 நிறுவனங்கள் உலகின் தலை திறந்த நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

Forbes

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: