பஜாஜ் சீட்டாக் எலெக்ட்ரானிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகம்.. விலையை செக் பண்ணுங்க

பஜாஜ் சீ்ட்டாக் 2023 எலெக்ட்ரானிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் விலை மற்றும் இதர சிறப்புகள் குறித்து பார்க்கலாம்.

2023 Bajaj Chetak e-scooter launch soon
பஜாஜ் சீட்டாக் மேம்படுத்தப்பட்ட இ-ஸ்கூட்டர் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

மராட்டியத்தின் புனேவை தளமாகக் கொண்ட பஜாஜ் ஆட்டோ விரைவில் சீட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் மேம்படுத்தப்பட்ட பதிப்பை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது.
இந்தப் பஜாஜ் சீட்டாக் எலெக்ட்ரானிக் ஸ்கூட்டர் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்திய சந்தைகளில் நுழைந்தது.

இந்த நிலையில், புதிய பஜாஜ் சேடக் அதன் முன்னோடிகளை விட சற்றே அதிக வரம்பை வழங்கும்.
தற்போதைய மாடல் ஒரு சார்ஜில் 90 கிமீ மைலேஜை வழங்குவதாகக் கூறப்பட்டாலும், வரவிருக்கும் சீட்டாக் சிறந்த சூழ்நிலையில் ஒருமுறை சார்ஜ் செய்தால் 108 கிமீ தூரத்தை வழங்கும்.

மேலும், பஜாஜ் சீட்டாக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.8 கிலோவாட் மின்சார மோட்டாருடன் 3 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி பேக் இணைக்கப்பட்டு உள்ளது.
இது 16 Nm உச்ச முறுக்குவிசையை உருவாக்குகிறது, Eco & Sport என இரண்டு ரைடிங் முறைகளைப் பெறுகிறது.

தொடர்ந்து, 70 kmph வேகத்தில் செல்லும். Chetak தற்போது ரூ. 1.52 லட்சம், எக்ஸ்-ஷோரூம் விலையில் உள்ளது, இந்த நிலையில் வரவிருக்கும் MY2023 மாடல் தற்போதைய விலையை விட சற்று பிரீமியம் கூடுதலாக வசூலிக்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: 2023 bajaj chetak e scooter launch soon

Exit mobile version