scorecardresearch

காற்றோட்ட இருக்கைகள்.. மேம்பட்ட அலாய் வீல்கள்.. புதிய ஹோண்டா சிட்டியில் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

ஹோண்டா சிட்டியின் வழக்கமான பெட்ரோல் வகைகளின் விலை ரூ.11.87 லட்சத்தில் இருந்து ரூ.15.62 லட்சமாகவும், அதன் ஹைபிரிட் வகை ரூ.19.89 லட்சமாகவும் உள்ளது.

Honda City facelift India
புதிய 2023 ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.

புதிய 2023 ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். முன்னதாக, ஐந்தாம் தலைமுறை ஹோண்டா சிட்டி ஜூலை 2020 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

புதிய ஹோண்டா சிட்டியில் என்ன எதிர்பார்க்கலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
புதிய ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட், மறுவடிவமைக்கப்பட்ட அலாய் வீல்களுடன் திருத்தப்பட்ட முன் மற்றும் பின்புற பம்பர்கள் மாற்றங்களைப் பெற வாய்ப்புள்ளது.
இது புதிய காற்றோட்ட இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் வேறு சில இன்னபிற வசதிகளைக் கொண்டிருக்கலாம்.

ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹோண்டா சிட்டியில் 119 பிஎச்பி மற்றும் 145 என்எம் ஆற்றலை உருவாக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 6-ஸ்பீடு எம்டி மற்றும் சிவிடியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஹோண்டா சிட்டியின் வழக்கமான பெட்ரோல் கார்களின் விலை ரூ.11.87 லட்சத்தில் இருந்து ரூ.15.62 லட்சமாகவும், அதன் ஹைபிரிட் வகை ரூ.19.89 லட்சமாக உள்ளது.

இந்தப் புதிய கார், ஹோண்டா சிட்டி, ஸ்கோடா ஸ்லாவியா, ஹூண்டாய் வெர்னா போன்ற மாடல்களுக்கு போட்டியாக வர வாய்ப்புள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: 2023 honda city facelift india launch soon