scorecardresearch

குறைந்த விலையில் செம்ம மாடல்.. நாங்கதான் டாப்.. மீண்டும் நிரூபித்த மாருதி.. ரேட்-ஐ பாருங்க

மாருதி டூர் எஸ்’ பெட்ரோல் மைலேஜ் லிட்டருக்கு 23.15 கிமீ கிடைக்கிறது. அதே நேரத்தில் அதன் சிஎன்ஜி ஒரு கிலோ மீட்டருக்கு 32.12 கிமீ மைலேஜ் தருவதாகக் கூறப்பட்டுள்ளது.

2023 Maruti Suzuki Tour S launched
மாருதி சுசூகி டூர் எஸ் மாடல் கார்

இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, புதிய டூர் எஸ்-ஐ காரை அறிமுகப்படுத்துவதாக அறிவித்து உள்ளது.

புதிய 2023 மாருதி சுசுகி டூர் எஸ் சமீபத்திய தலைமுறை டிசைரை அடிப்படையாகக் கொண்டது. இது, பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வகைகளில் கிடைக்கிறது.

கார்களின் விலை

இந்தக் கார்களின் விலை ரூ.6.51 லட்சம் முதல் தொடங்குகிறது. அந்த வகையில், டூர் எஸ் பெட்ரோல் எம்.டி ரூ.6.51 லட்சத்துக்கு கிடைக்கிறது. டூர் எஸ் பை-பியூல் சிஎன்ஜி எம்.டி ரூ.7.36 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

மாருதி டூர் எஸ்’ பெட்ரோல் மைலேஜ் லிட்டருக்கு 23.15 கிமீ கிடைக்கிறது. அதே நேரத்தில் அதன் சிஎன்ஜி ஒரு கிலோ மீட்டருக்கு 32.12 கிமீ மைலேஜ் தருவதாகக் கூறப்பட்டுள்ளது.

நவீன வசதிகள்

இந்தக் கார்களின் அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மூத்த நிர்வாக அதிகாரி (மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை) ஷஷாங்க் ஸ்ரீவஸ்தவா, “நவீன வடிவமைப்பு, புதிய வயது பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன” என்றார்.
தொடர்ந்து, “இந்தக் கார்கள் வாடிக்கையாளர்களின் மனதை கவரும் என்று நிச்சயம் நம்புகிறோம்” என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: 2023 maruti suzuki tour s launched

Best of Express