Advertisment

பதிவு செய்யாத முதலீட்டு ஆலோசகர்கள்: செபி பகிரங்க எச்சரிக்கை

எளிமையான பதிவு செயல்முறை இருந்தபோதிலும், முதலீட்டு ஆலோசகர்களில் 35 சதவீதம் பேர் இன்னும் பதிவு செய்யவில்லை என செபி தலைவர் மாதபி பூரி பூச் (Madhabi Puri Buch) தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
SEBI

செபி இணையதளத்தின்படி, 1,314 பதிவு செய்யப்பட்ட முதலீட்டு ஆலோசகர்கள் உள்ளனர்.

எளிமையான பதிவு செயல்முறை இருந்தபோதிலும், முதலீட்டு ஆலோசகர்களில் 35 சதவீதம் பேர் இன்னும் பதிவு செய்யவில்லை என செபி (SEBI) தலைவர் மாதபி பூரி பூச் (Madhabi Puri Buch) தெரிவித்தார்.

இது குறித்து, பதிவு செய்யப்பட்ட முதலீட்டு ஆலோசகர்கள் சங்கம்  ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “முதலீட்டு ஆலோசகர்கள் பதிவு செய்ய வேண்டும்; முதலீட்டு ஆலோசகர்களில் 35 சதவீதம் பேர் இன்னும் பதிவு செய்யப்படவில்லை. இது உங்கள் தொழில், இது உங்கள் வாழ்வாதாரம். இதனை கருத்தில் கொண்டு மற்ற பிரச்னைகளை தள்ளிவைத்துவிட்டு பதிவு செய்ய வேண்டும்” என்றார்.

Advertisment

செபி இணையதளத்தின்படி, 1,314 பதிவு செய்யப்பட்ட முதலீட்டு ஆலோசகர்கள் உள்ளனர். இது முதலீட்டு ஆலோசகர்களின் (IAs) நிர்வாகம் மற்றும் மேற்பார்வைக்கு SEBI யிடமிருந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, சுமார் 900 BASL பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் செபி தலைவர், “நீங்கள் (தொழில் சங்கங்கள்) நாடு முழுவதும் இருக்கிறீர்கள். (முதலீட்டு ஆலோசகர்) சமூகத்தைப் பற்றி அக்கறை கொண்டவர்கள் மனித ஆற்றலைச் செலவிடும் நபர்கள் உங்களிடம் உள்ளனர். தற்போது பதிவு செய்யும் நடைமுறைகள் மிகவும் எளிதானது” என்றார்.

35% of investment advisors still not registered, says SEBI Chairperson

ஏற்கனவே, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதி ஆலோசகர்களின் அறிவுரைகளைப் பின்பற்றும் போது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கிடையில் செபி தலைவர், “சந்தையில் தனித்தனி பிரிவுகள் இருந்தால், அவை வித்தியாசமாக கட்டுப்படுத்தப்பட வேண்டும். எனவே, நாங்கள் முற்றிலும் திறந்த நிலையில் உள்ளோம் மற்றும் ஒழுங்குமுறைக்கான ஒரு பிரிக்கப்பட்ட அணுகுமுறையைப் பார்க்க தயாராக இருக்கிறோம்” எனவும் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Sebi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment