4 Investments That Offer Tax Free Interest Income In India : உங்களின் பணத்தை பாதுகாப்பான முறையில் சேமித்து நல்ல லாபம் பெற வேண்டும் என்று நினைக்கின்றீர்களா? அப்போது இந்த நான்கு முதலீடுகள் குறித்தும் நீங்கள் அறிந்து வைத்திருப்பது மிகவும் முக்கியமானது.
பி.பி.எஃப்.
வரியில் இருந்து முற்றிலும் விலக்கு பெற்ற ஒரு முக்கியமான சேமிப்புத்திட்டம் இதுவாகும். இந்த சேமிப்புத்திட்டத்தில் இருந்து கிடைக்கும் வட்டிக்கும் வருமான வரியில் இருந்து விலக்கு பெற்றுத் தருகிறது. இந்த இரண்டு சலுகைகளுக்காகவும் இந்த திட்டம் மிகவும் பெயர்பெற்றது. இதில் இருந்து கிடைக்கும் சலுகைகள் மட்டும் இல்லாமல், மற்ற தேசிய வங்கிகள் தரும் வட்டியைக் காட்டிலும் அதிக வட்டியை நீங்கள் இதில் இருந்து பெற முடியும். ஆண்டுக்கு 7.10% வட்டியை உங்களுக்கு இந்த திட்டம் வழங்குகிறது.
வரி அற்ற பாண்டுகள்
சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு நிறுவனங்களுக்கு tax free bonds - மூலமாக பணத்தை அதிகரிக்க வாய்ப்பை வழங்கியது மத்திய அரசு. HUDCO, REC, PFC, இந்திய ரயில்வே ஃபைனான்ஸ் கார்ப்பரேசன் போன்றவைகள் அதில் முக்கிய நிறுவனங்களாகும். இதில் இருந்து பெறப்படும் வட்டிக்கு முழுமையாக வரி விலக்கு அளித்துள்ளது மத்திய அரசு. இருப்பினும் இந்த பாண்டுகளை எங்கே வாங்குவது என்ற குழப்பம் முதலீட்டாளர்களுக்கு இருக்கும். நீங்கள் இதனை பங்கு சந்தையில் பெற வேண்டும். ஐஆர்எஃப்சி வரி இலவச பாண்ட் 8.65% வட்டி விகிதத்தை வழங்குகிறது, இருப்பினும், நீங்கள் அதை ரூ .1,290 விலையில் வாங்க வேண்டும், அப்போது அதில் நீங்கள் பெறும் லாபம் குறைய துவங்கும். மேலும் இதனை நீங்கள் பணமாக மாற்றுவது சற்று கடினமான காரியமாக இருக்கும்.
ULIPS
யூனிட் லிங்க்ட் இன்ஸ்யூரன்ஸ் ப்ளான்ஸ் என்று அழைக்கப்படும் யுலிப்ஸ் மற்றொரு சேமிப்பு திட்டமாகும். இதில் அவர்கள் செலுத்தும் பிரீமியத்தின் 10 மடங்கு காப்பீட்டையும் வழங்குகிறார்கள். நிர்வாக, மற்றும் கடன் தொடர்பான விவகாரங்களுக்கு நிறைய பணம் ஒதுக்கப்பட்டிருப்பதால் ரிட்டர்ன்ஸ் ஒன்றும் அவ்வளவு சிறப்பாக இல்லை. முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை பங்குத் திட்டங்களில் அல்லது கடன் திட்டங்களில் முதலீடு செய்யலாமா என்பதை அவர்களே முடிவு செய்து கொள்ளலாம். 5 வருடங்கள் இதற்கு Lock-in காலம் உள்ளது, சில சந்தர்ப்பங்களில் இது அதிகமாக இருக்கலாம் மற்றும் பரஸ்பர நிதியைப் பொறுத்து இது மாறுபடவும் செய்யும்.
வங்கி சேமிப்பு கணக்கு
ஆண்டு ஒன்றுக்கு ரூ. 10 ஆயிரம் வரையில் வட்டி வராத சேமிப்பு கணக்குகளுக்கு வரி விலக்கு உள்ளது. எனவே இதற்கு ஏற்றவகையில் முதலீட்டாளர்கள் தங்களின் திட்டங்களை தேர்வு செய்து கொள்ளலாம். இதில் இருக்கும் ஒரே பிரச்சனை என்னவென்றால் இந்த சேமிப்பு தொகைக்கு கிடைக்கும் வட்டி. இது மிகவும் குறைந்த அளவே உள்ளது. சிறிய நிதி வங்கிகள் அல்லது இந்துஸிந்த் போண்ற வங்கிகளில் தங்களின் முதலீட்டை செலுத்த வேண்டும். அங்கு தான் 6% வட்டி ரூ. 10 லட்சத்திற்கு மேல் உள்ள சேமிப்புத் தொகைக்கு வழங்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil