40 வயது ஆயிடுச்சா? பரவாயில்ல... இப்ப முதலீடு செஞ்சா கூட கோடீஸ்வரர் ஆகலாம்; இத கொஞ்சம் நோட் பண்ணுங்க!
காப்பீட்டு பாதுகாப்பை உறுதி செய்த பிறகு, முதலீடுகளில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை, உதாரணமாக 30,000 ரூபாய் வருமானத்தில் 20% முதலீடு செய்யத் தொடங்கலாம்.
காப்பீட்டு பாதுகாப்பை உறுதி செய்த பிறகு, முதலீடுகளில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை, உதாரணமாக 30,000 ரூபாய் வருமானத்தில் 20% முதலீடு செய்யத் தொடங்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் நிதி சுதந்திரம் என்பது பலரின் கனவாக உள்ளது. அதிலும் குறிப்பாக 40 வயதிற்கு பிறகு முதலீடுகள் மூலம் கோடீஸ்வரர் ஆவது சாத்தியமா என்ற கேள்வி பலரிடையே எழுகிறது. இந்தக் கேள்விக்கான விடைகள் பட்ஜெட் பத்மநாபன் என்ற யூடியூப் சேனலில் குறிப்பிடக்கப்பட்டுள்ளது. அவற்றை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
Advertisment
எந்தவொரு முதலீட்டைத் தொடங்குவதற்கு முன்பும், காலக் காப்பீடு (Term Insurance) மற்றும் மருத்துவ காப்பீடு (Health Insurance) ஆகிய இரண்டும் மிக அவசியம். உங்கள் குடும்பத்தின் எதிர்கால நிதிப் பாதுகாப்பிற்கு காலக் காப்பீடு இன்றியமையாதது. உங்களின் எதிர்பாராத மறைவுக்குப் பிறகு குடும்பத்திற்கு வருமான இழப்பீடு வழங்குவது காலக் காப்பீட்டின் முக்கிய நோக்கம். அதேபோல, மருத்துவச் செலவுகள் அதிகரித்து வரும் இக்காலத்தில், மருத்துவக் காப்பீடு குடும்பத்தை நிதிச் சுமையிலிருந்து பாதுகாக்கும் ஒரு கேடயமாகும். ஒரு கோடி ரூபாய் கவரேஜ் கொண்ட விரிவான குடும்ப மருத்துவக் காப்பீட்டிற்கு சுமார் 25,000 ரூபாய் செலவாகலாம் என்று குறிப்பிடுகிறது.
காப்பீட்டு பாதுகாப்பை உறுதி செய்த பிறகு, முதலீடுகளில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை, உதாரணமாக 30,000 ரூபாய் வருமானத்தில் 20% (அதாவது 6,000 ரூபாய்) முதலீடு செய்யத் தொடங்கலாம். மேலும், இந்த முதலீட்டுத் தொகையை ஆண்டுதோறும் 10% அதிகரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு செய்தால் அடுத்த 20 ஆண்டுகளில் நமது சேமிப்பு ரூ. 28 லட்சம் ஆகவும், ரிட்டன் ரூ. 1 கோடியாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
முன்கூட்டியே ஓய்வு பெறுவது மற்றும் வேலை செய்யாத ஆண்டுகளில் வாழ்வதற்கு போதுமான நிதி இருப்பு வைத்திருப்பதன் அவசியம் குறித்து அனைவரும் அறிந்திருக்க வேண்டும். பணவீக்கம் மற்றும் எதிர்பார்க்கப்படும் ஊதிய உயர்வுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு நமது பொருளாதாரத்தை கட்டமைத்துக் கொள்ள வேண்டும்.
Advertisment
Advertisements
இவற்றை சரியான முறையில் திட்டமிட்டால் 40 வயதிற்கு பிறகு முதலீடுகள் செய்தாலும், கோடீஸ்வரர் ஆவது சாத்தியமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தங்களுடைய நிதி தேவைகள் மற்றும் வாழ்வியல் முறைக்கு ஏற்ப முதலீடுகளை செய்ய வேண்டும்.