இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு மிக அவசியமான ஒன்றாக உள்ளது. திரும்பிய பக்கம் எல்லாம் சேமிப்பு திட்டங்கள் இருப்பதால், அவற்றில் பாதுகாப்பானதை தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய வேண்டும். அந்த வகையில், நாம் முதலீட்டிற்கு நல்ல வருமானம் கிடைப்பது பிக்சட் டெபாசிட் திட்டங்களில் தான். பங்குச்சந்தை, பிபிஎப்-காட்டிலும் குறைவாக வட்டி கிடைத்தாலும், பாதுகாப்பான முதலீடு ஆகும்.
பல வங்கிகள் குறைந்த கால அளவிலான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டியை குறைத்து வரும் நிலையில், சில தனியார் வங்கிகள் 3 ஆண்டு பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 6.5 சதவீதம் வரை வட்டியை வழங்குகின்றன.
- IndusInd Bank
தனியார் வங்கிகளை பொறுத்தவரை, இந்த வங்கியில் தான் நல்ல வட்டி கிடைக்கிறது. 3 ஆண்டு திட்டங்களுக்கு, 6.5 சதவீதம் வரை வட்டி கிடைக்கின்றன. நீங்கள் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், அந்த தொகை 3 ஆண்டில் 1.21 லட்சமாக உயரக்கூடும். குறைந்தப்பட்ச முதலீடு 10 ஆயிரம் ரூபாய் ஆகும்.
- ஆர்பிஎல் வங்கி(RBL Bank)
இந்த வங்கி மூன்று ஆண்டு பிக்சட் டெபாசிட் திட்டத்துக்கு 6.30 சதவீதம் வட்டி வழங்குகிறது. இதில், ரூ1 லட்சம் முதலீடு செய்தால், 1.21 லட்சமாக உயரக்கூடும்.
- ஐடிஎஃப்சி வங்கி(IDFC First Bank)
இந்த வங்கி 3 ஆண்டு பிக்சட் டெபாசிட் திட்டத்துக்கு, 6 சதவீதம் வட்டி வழங்குகிறது. இதில், ரூ1 லட்சம் முதலீடு செய்தால் 1.20 ரூபாயாக அதிகரிக்கக்கூடும்.
- Karur Vysya Bank
இந்த வங்கி 5.65 வட்டி வழங்குகிறது. இதில், முதலீடு செய்யும் 1 லட்சம் ரூபாய், மூன்று ஆண்டுகளில் 1.18 லட்சமாக அதிகரிக்கக்கூடும்.
- Bandhan bank
இந்த வங்கி 6.25 சதவீதம் வட்டி வழங்குகிறது. இதில், முதலீடு செய்யும் 1 லட்சம் ரூபாய், மூன்று ஆண்டுகளில் 1.20 லட்சமாக அதிகரிக்கக்கூடும். இந்த வங்கியில் குறைந்தப்பட்ச முதலீடு ஆயிரம் ரூபாய் ஆகும்.
இதுதவிர, யெஸ் வங்கி மற்றும் டிசிபி வங்கி ஆகியவை மூன்றாண்டு பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 6.25 சதவீதம் வட்டி வழங்குகின்றன. இவற்றில் குறைந்தப்பட்ச முதலீடு தொகை 10 ஆயிரம் ரூபாய் ஆகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil