Advertisment

SB Account: 7%-க்கும் அதிகமா வட்டி தரும் 5 வங்கிகள்; உங்க பேங்க் எப்படி?

பெரும்பாலான வங்கிகள் சேமிப்புக் கணக்கில் பெரிதாக வட்டி வழங்குவதில்லை. இந்த செய்தி தொகுப்பில் 7 சதவீதம் வரை வட்டி வழங்கும் 5 சிறு நிதி வங்கிகளைப் தெரிந்து கொள்வோம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
SB Account: 7%-க்கும் அதிகமா வட்டி தரும் 5 வங்கிகள்; உங்க பேங்க் எப்படி?

பெரும்பாலான இந்தியர்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பாதியை, எதிர்காலத்திற்காக சேமிப்பு கணக்கில் டெபாசிட் செய்வது வழக்கம். ஆனால் பெரும்பாலான வங்கிகள் சேமிப்புக் கணக்கில் பெரிதாக வட்டி வழங்குவதில்லை. வங்கிகள் ஏராளமாக இருப்பதால், எந்த வங்கிகளில் அதிக வட்டித் தொகை கிடைக்கிறது என்பது நாம் செக் செய்வதும் இல்லை. ஆனால், சேமிப்புக் கணக்கில் 7 சதவீதம் வரை சிறு நிதி வங்கிகள் வட்டி வழங்குகின்றன.

Advertisment

வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பிற்கு சிறந்த வட்டி விகிதத்தைப் பெற சிறிய நிதி வங்கிகளுக்கு எளிதாக மாறலாம்.ஆனால், நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏடிஎம் இல்லாத போது, வேறு வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்கையில், அதற்கான கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். எனவே, வட்டி விகிதத்தை மட்டுமே பார்க்காமல், மற்ற செலவுகளையும் கவனித்து டெபாசிட் செய்வது சிறந்தது ஆகும்.

இந்த செய்தி தொகுப்பில் 7 சதவீதம் வரை வட்டி வழங்கும் 5 சிறு நிதி வங்கிகளைப் தெரிந்து கொள்வோம்.

ஏ.யூ ஸ்மால் பைனான்ஸ் பேங்க்

ஏ.யூ ஸ்மால் பைனான்ஸ் வங்கி, சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு 7 % வரை வட்டி கிடைக்கிறது. ஆனால், இந்த வங்கி சேமிப்பு கணக்கில் குறைந்தபட்சம் 2 ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை மினிமம் பேலன்ஸ் தொகை வைத்திருக்க வேண்டும்.

உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் பேங்க்

உஜ்ஜீவன் வங்கி சேமிப்பு கணக்குகளுக்கு 6.75 விழுக்காடு வரை வட்டி கிடைக்கிறது. மற்ற வங்கிகளைக் காட்டிலும் வாடிக்கையாளர்களுக்கு அதிக சலுகைகளையும் கொடுத்து வருகிறது. வாடிக்கையாளர்கள் ரூ.10 கோடிக்கு மேல் முதலீடு செய்தால் 6.75 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும்

எக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க்

எக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி சேமிப்புக் கணக்கில், வாடிக்கையாளர்கள் ரூ. 5 லட்சம் முதல் ரூ50 லட்சம் வரை டெபாசிட் செய்வதற்கு, 7 சதவீத வட்டி விகிதத்தைப் பெறலாம்

டி.சி.பி வங்கி (DCB Bank)

டி.சி.பி வங்கி சேமிப்பு கணக்குகளுக்கு 6.65 விழுக்காடு வரை வட்டி வழங்குகிறது. இந்த வங்கி தான், தனியார் வங்கிகளில் அதிக வட்டி வழங்குகிறது. ஆனால், வங்கி வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ.2,500 முதல் ரூ.5,000 வரை பராமரிக்க வேண்டும்.

சூரியோதய் சிறு நிதி நிறுவனம் (Suryoday Small Finance Bank)

இந்த வங்கி அதிகப்பட்சமாக 6.25 விழுக்காடு வரை சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் 2 ஆயிரம் ரூபாய் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bank News Interest Rates
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment